மனையடி சாஸ்திரம்

Manaiyadi Sasthiram
Manaiyadi Sasthiram
Digital Marketing Company in Trichy
BSR Solutions - Digital Marketing Company in Trichy

மனையடி சாஸ்திரம் – Manaiyadi Sasthiram – Manaiyadi Vastu Sastram in Tamil – மனையடி சாஸ்திரம் அடி கணக்கு பற்றி தெளிவாக பார்ப்போம். வீடு கட்ட மனையடி சாஸ்திரம் அடிப்படையில் எவ்வாறு வீட்டின் சுற்றுச்சுவர், மேல் மாடி சுவர், பூஜை அறை, துளசி மாடம், படுக்கையறை, குளியலறை, தூங்கும் அறை, போர் அல்லது கிணறு, குளியலறை, படிக்கட்டுகள் அமைப்பது என்று பார்ப்போம்.

பொதுவாக மனையடி சாஸ்திரம் அடி கணக்கில் 6 அடிக்கு மேல் இருந்து மட்டுமே கணக்கிடப்படுகிறது. 6 அடிகளுக்கு கீழ் கிடையாது. அவற்றின் நீள அகல அடிகள் எவ்வளவு இருந்தான் என்ன பயன் என்று பார்ப்போம்.

மனையடி சாஸ்திரம் பற்றி சில தகவல்கள்

மனையடி சாஸ்திரம்(Manaiyadi Sasthiram) – இந்த பிரபஞ்சம் பஞ்ச பூதங்களை வித்தாக கொண்டது. ஒவ்வொரு உயிர் பொருள்கள், உயிரற்ற பொருள்கள் எல்லாவற்றிலும் இதன் ஆதிக்கம் உள்ளது. ஒருவருக்கு தான் வசிக்கும் வீட்டில் அமைதி நிலவி செல்வம் ஆரோக்கியம் பெற நினைப்பவர் கண்டிப்பாக மனையடி வாஸ்து சாஸ்திரம் விதிகளை கையாள வேண்டும்.

மனையடி சாஸ்திரத்தில் ஒரு வீடு கட்டும்பொழுது வடக்கு திசையில் தெற்கு திசையை விட அதிக காலி இடம்(free space) விட்டு வீடு கட்ட வேண்டும்.

வீடு கட்டுவதற்கு வாஸ்து மூலம் வீட்டில் வசிப்பவர்களுக்கு பிரபஞ்சத்திலிருந்து நேர்மறையான ஆற்றல் கொண்டுவரும் என நம்பப்படுகிறது. தற்போது கட்டப்படும் பெரும்பாலான பெரிய கட்டிடங்கள் பஞ்சபூதங்களை கருத்தில் கொண்டு கட்டப்படுகின்றன. பஞ்சபூதங்களின் சமநிலை தவறும் போது நம் வீட்டில் பிரச்னைகளும் சிக்கல்களும் ஏற்படும்.

வாஸ்து சாஸ்திரப்படி எந்த அறைகள் எந்த திசையில் இருக்க வேண்டும் என்பதை விரிவாக பார்ப்போம்.

வீட்டின் சுற்று சுவர் அல்லது வீட்டின் மாடி சுவர்

வீட்டின் சுற்று சுவர் அல்லது வீட்டின் மாடி சுவர் தென்மேற்கு 1inch ஆவது உயர்ந்த இருக்க வேண்டும். அதை விட சற்று குறைவாக தென் கிழக்கு முனை அதை விட குறைவாக வட மேற்கு முனை சுவர் அதை விட குறைவாக வட கிழக்கு சுவர் முனை இருக்க வேண்டும்.

தென்மேற்கு > தென் கிழக்கு > வட மேற்கு > வட கிழக்கு

​பூஜை அறை அமைக்க மனையடி சாஸ்திரம்

பூஜை அறை அமைக்க மனையடி சாஸ்திரம் – வீட்டில் வட கிழக்கு பகுதியில் இருப்பது நல்லது. சுவாமி படங்கள் கிழக்கு திசை நோக்கி பார்க்கும் படி வைக்க வேண்டும். இந்த திசையில் சேமித்து வைக்கக் கூடிய அறை இருக்கலாம்.

இந்த பகுதியில் சமையல் அறை, கழிப்பறை, இருப்பது நல்லதன்று .

சாமி புகைப்படங்களை வடக்கு பார்த்தும் வைக்கலாம்.

இறந்தவர்கள் புகைப்படத்தினை தெற்கு பார்த்து மாட்ட வேண்டும். பூஜையறை வாஸ்து குறிப்புகள் பற்றி முழுதாக தெரிந்து கொள்ளவும்.

​துளசி மாடம் அமைக்க மனையடி சாஸ்திரம்

இப்போது எந்த வீடுகளிலும் துளசி மாடம் அமைப்பதில்லை. பெரும்பாலான பழைய வீடுகளில் துளசி மாடம் வைத்திருந்தனர். மருத்துவ குணம் நிறைந்த துளசி மாடம் வீட்டில் இருந்தால் நேர்மறை ஆற்றல்கள் ஈர்க்க வல்லது. அதோடு துளசி செடி காற்றை தூய்மைப் படுத்தும் ஆற்றல் கொண்டது.

இது வீட்டில் முன் இருப்பது நல்லது. குறிப்பாக கிழக்கு திசையில் இருப்பது மிகவும் நல்லது.

10 Marriage Porutham in Tamil

​விளக்கு ஏற்றும் திசை

வீட்டில் விளக்கு ஏற்றுவது வெறும் பூஜைக்காகவோ, வெளிச்சத்திற்காக மட்டும் கிடையாது. விளக்கு என்பது வீட்டின் எதிர்மறை ஆற்றலை நீக்கி மங்களத்தைக் கொண்டு வரக்கூடியது.

வீட்டில் எப்போதும் ஒரு விளக்க்காக ஏற்றாமல் இரண்டு விளக்காக ஏற்றுவது நல்லது. அதே போல் வீட்டின் துளசி மாடத்தில் விளக்கேற்றுவது நல்ல பலனை தரும். விளக்குகள் கிழக்கு நோக்கி ஏற்றுவது நல்லது. தெற்கு நோக்கி ஏற்றுதல் ஆகாது.

​படுக்கையறை அமைக்க மனையடி சாஸ்திரம்

​படுக்கையறை அமைக்க மனையடி சாஸ்திரம்
​படுக்கையறை அமைக்க மனையடி சாஸ்திரம்

வீட்டின் முக்கிய அறைகளில் ஒன்று படுக்கை அறை. ஓய்வு என்பது ஒருவரின் உடல்நிலை மற்றும் மனநிலைக்கு முக்கியமானது. தூக்கம், ஓய்வு எடுக்கக் கூடிய படுக்கை அறை வீட்டின் தெற்கு அல்லது தென் மேற்கு திசையில் இருப்பது மிகவும் நல்லது.

படுக்கை அறையில் வடக்கு பக்கம் பார்த்து பீரோ பண சேமிக்கும் அலமாரி வைக்க வேண்டும்.

2 படுக்கையறை அமைக்க விரும்புபவர்கள் இரண்டாவது அறையாக வடகிழக்கு பகுதியில் அமைக்கலாம்.

இளம் தம்பதியினர் தென்மேற்கு பகுதியிலும் வயதானவர்கள் வடகிழக்கு அறையிலும் தங்குவது நல்லது.

படுக்கையறை வாஸ்து குறிப்புகள் பற்றி முழுதாக தெரிந்து கொள்ளவும்

​தூங்கும் திசை

அதே போல் நாம் படுத்து தூங்கும் போது தெற்கிலும் கிழக்கிலும் தலை வைத்து படுப்பது மிகவும் நன்மை. வடக்கில் தலை வைத்து படுக்கவே கூடாது.

​சமையலறை அமைக்க மனையடி சாஸ்திரம்

சமையலறை அமைக்க வாஸ்து
சமையலறை அமைக்க வாஸ்து

தென் கிழக்கு பகுதி அக்னி மூலை எனவே வீட்டின் தென் கிழக்கு பகுதியில் சமையல் அறை அமைவதும், கிழக்கு நோக்கி நின்று சமைப்பது மிகவும் நல்ல அமைப்பாகும்.

அவ்வாறு அமைக்க இயலாதவர்கள் இரண்டாவது தேர்வாக வடமேற்கு திசையில் சமையலறை அமைக்கலாம்.

பூஜை அறைக்கு அருகில் இருக்கலாம். ஆனால் கழிப்பறைக்கு அருகில் சமையல் அறை மற்றும் பூஜை அறை இருப்பது நல்லதல்ல.

சமையலறை தொட்டி(Kitchen Sink) தென்கிழக்கில் இருக்க வேண்டும். வடமேற்கு 2வது தேர்வு(option).

சமையலறை வாஸ்து குறிப்புகள் பற்றி முழுதாக தெரிந்து கொள்ளவும்

​போர் அல்லது கிணறு அமைக்க மனையடி சாஸ்திரம்

போர் மற்றும் கிணறு அமைக்க மனையடி சாஸ்திரம் – போர், கிணறு தோண்டுவது வெறும் நீர் தேவைக்காக மட்டுமில்லாமல் வீட்டின் சௌபாக்கியங்கள் அதிகரிக்கவும் தோண்டினார்கள்.

வீட்டிற்காக போர்வெல், கிணறு தோண்டும் போது வீட்டின் வட கிழக்கு பகுதியில் தோண்டுவது நல்லது. வீட்டின் நடுவில் அமைப்பது எதிர்மறை பலன்களைத் தரும்.

மேல்நிலை நீர்தொட்டி தென்மேற்கு பகுதியில் அதிக உயரத்துடன் இருக்க வேண்டும்.

​குளியலறை அமைக்க மனையடி வாஸ்து குறிப்புகள்

குளியலறை வாஸ்து குறிப்புகள்
குளியலறை வாஸ்து குறிப்புகள்

குளியலறை தென்மேற்கு பகுதியில் இருக்க கூடாது மற்ற திசைகளில் அமைக்கலாம். அதேபோல கழிவுத்தொட்டியும்(Sceptic Tank) தென்மேற்கில் அமைக்க கூடாது நோய் உண்டாகும்.

குளியலறை வாஸ்து குறிப்புகள் பற்றி முழுதாக தெரிந்து கொள்ளவும்

​படிக்கட்டுகள் அமைக்க மனையடி வாஸ்து குறிப்புகள்

வீட்டின் படிக்கட்டுகள் மேற்கு அல்லது தெற்கு திசையில் கட்டப்பட வேண்டும்.

படிக்கட்டில் ஏறுவது கிழக்கில் தொடங்கி மேற்கு நோக்கி சென்றடைவதாக அல்லது வடக்கிலிருந்து தொடங்கி தெற்கு நோக்கி ஏறுவதாக இருக்க வேண்டும். வீட்டின் வடகிழக்கு அல்லது மையத்தில் படிக்கட்டு கட்டக்கூடாது.

மரங்கள் அமைக்க மனையடி சாஸ்திரம்

வீட்டின் தெற்கு அல்லது மேற்கு திசையில் மரங்கள் வளர்ப்பது நல்லது. தெற்கு பகுதியில் மரங்கள் வளர்க்க மிகவும் உன்னதமானது. மரக் கிளைகளை வீட்டின் மேல் செல்வது கூடாது.

மனையடி சாஸ்திரம்
மனையடி சாஸ்திரம்

Manaiyadi Sasthiram – மனையடி சாஸ்திரம் பொது தகவல்கள்

மனையடி சாஸ்திரம் பற்றிய பொது தகவல்கள் – எந்தெந்த திசைகளில் எவை இருந்தால் நல்லது என்று பொதுவான தகவலாக பார்ப்போம். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் வீடு வாங்குபவரின் 4 பாவத்தை பொறுத்தே துல்லியமாக சொல்ல முடியும்.

கிழக்கு – குடிநீர் தொட்டி
தென்கிழக்கு – சமையலறை
தெற்கு – படிக்கும் அறை
தென் மேற்கு , மேற்கு, தெற்கு – படுக்கையறை
வடமேற்கு – கழிவறை
வடக்கு – குபேரனுடைய திசை சுத்தமாக வைத்துக்கொள்ளவும்
வடகிழக்கு – குடிநீர் ஆதாரம் அமைக்கலாம்
வட கிழக்கு, கிழக்கு, மேற்கு – பூஜை அறை

Manaiyadi Sasthiram feet for House Tamil

6 அடி – நன்மை உண்டாகும்
7 அடி – தரித்திரம் பிடிக்கும்
8 அடி – மிகுந்த பாக்கியம் உண்டாகும்
9 அடி – மிகுந்த பீடை ஏற்படும்.
10 அடி – பிணியில்லாத குறைவில்லா வாழ்வு
11 அடி – பாக்கியம் சேரும்
12 அடி – செல்வம் குலைந்து போகும்
13 அடி – எல்லோரும் பகைவராவர்
14 அடி – பெருநஷ்டம், சஞ்சலங்கள் ஏற்படும்
15 அடி – காரியம் தடை
16 அடி – மிகுந்த செல்வமுண்டு
17 அடி – அரசனைப்போல் பாக்கியஞ்சேரும்

Star Matching Table for Marriage in Tamil

18 அடி – அமைந்த மனை பாழாகும்
19 அடி – மனைவி மக்கள் மரணம்
20 அடி – இன்பம் தரும் இராஜயோகம் கிட்டும்
21 அடி – கல்வி சிறக்கும் பசுவிருத்தி உண்டாகும்
22 அடி – மகிழ்ச்சி பொங்கும், எதிரி அஞ்சுவான்
23 அடி – நோயுடன் வாழ்வான்
24 அடி – வயது குன்றும் மத்திம பலன்
25 அடி – தெய்வ பலன் கிட்டாது
26 அடி – இந்திரனை போல் வாழ்வார்
27 அடி – மிக்க செல்வத்துடன் வாழ்வார்

27 அடிக்கு மேல் தெரிந்துகொள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

தெரிந்து கொள்க –  

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்

Comments are closed.