Rahukalam Yamagandam Timings Kuligai
ராகு காலம் எமகண்டம் நேரம் – கீழ்வருவனவற்றில் ராகு காலம்(Rahukalam) குளிகை(Kuligai) எமகண்டம்(Yamagandam) நேரம் பற்றிய தகவல்களை Tamil and English ல் பதிவிட்டுள்ளோம், அந்த நேரத்தில் என்ன செய்யலாம் என்றும் குறிப்பிட்டுள்ளேன் படித்து பயம் பெறுக!. வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
இராகு காலம் குளிகை எமகண்டம் நேரம்
கிழமை | ராகு காலம் | எமகண்டம் | குளிகை |
---|---|---|---|
ஞாயிறு | மாலை 4:30 to 6 PM | மதியம் 12:00 to 1:30 PM | மதியம் 3 to 4:30 PM |
திங்கள் | காலை 7:30 to 9 AM | காலை 10:30 AM to 12 | மதியம் 1:30 to 3 PM |
செவ்வாய் | மதியம் 3 to 4:30 PM | காலை 9 to 10:30 AM | மதியம் 12:00 to 1:30 PM |
புதன் | மதியம் 12:00 to 1:30 PM | காலை 7:30 to 9 AM | காலை 10:30 AM to 12 |
வியாழன் | மதியம் 1:30 to 3 PM | காலை 6 to 7:30 AM | காலை 9 to 10:30 AM |
வெள்ளி | காலை 10:30 AM to 12 | மதியம் 3 to 4:30 PM | காலை 7:30 to 9 AM |
சனி | காலை 9 to 10:30 AM | மதியம் 1:30 to 3 PM | காலை 6 to 7:30 AM |
Rahukalam Timings – Yamagandam Timings – Kuligai Timings
DAYS | RAHUKALAM | YAMAGANDAM | KULIGAI |
---|---|---|---|
SUNDAY | 4:30 PM to 6:00 PM | 12:01 PM to 1:30 PM | 3:00 PM to 4:30 PM |
MONDAY | 7:30 AM to 9:00 AM | 10:30 AM to 12:00 AM | 1:30 PM to 3:00 PM |
TUESDAY | 3:00 PM to 4:30 PM | 9:00 AM to 10:30 AM | 12:01 PM to 1:30 PM |
WEDNESDAY | 12:01 PM to 1:30 PM | 7:30 AM to 9:00 AM | 10:30 AM to 12:00 AM |
THURSDAY | 1:30 PM to 3:00 PM | 6:00 AM to 7:30 AM | 9:00 AM to 10:30 AM |
FRIDAY | 10:30 AM to 12.00AM | 3:00 PM to 4:30 PM | 7:30 AM to 9:00 AM |
SATURDAY | 9.00 AM to 10:30 AM | 1:30 PM to 3:00 PM | 6:00 AM to 7:30 AM |
ராகு காலம்
தினசரி 1.30 மணி நேரம் ராகு காலமாக எடுத்து கொள்ளப்படுகிறது. இதில் நல்ல விஷயங்களை ஆரம்பிக்க வேண்டாம் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.
இருப்பினும் தவிர்க்க முடியாத நேரத்தில், ராகு காலத்தில் ஒரு செயலைச் செய்ய வேண்டிய வேலை வந்தால் அருகிலுள்ள கோயிலில் துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபட்டு செயலை தொடங்கலாம்.
குளிகை நேரம் என்ன செய்யலாம்
குளிகன் என்பவர் சனியின் மைந்தன் ஆவார். குளிகை நேரத்தில் ஒரு செயலை தொடங்கினால் வளர்ந்து கொண்ட போகும். பழைய வீட்டை இடிப்பது, கடன் வாங்குவது, இறந்தவர் உடலை எடுப்பது போன்ற காரியங்களை குளிகை நேரத்தில் செய்யாமல் இருப்பது நல்லது.
அதே போல், கடனை திருப்பிக் கொடுப்பது, வீடு, நகை வாங்குவது, நகை அணிவது, வீடு கிரகப்பிரவேசம் செய்வது போன்ற விஷயங்களை செய்யலாம்.
எம கண்டம் நேரம் என்ன செய்யலாம்
எம கண்டமும் இராகு காலத்தை போலவே சுப காரியங்கள் செய்யக்கூடாது, பயணங்கள் கூடாது. புதிய முயற்சிகள் மற்றும் பொருட்கள் வாங்குவது என எந்த விஷயத்தையும் ஆரம்பிக்க கூடாது.