மகேந்திரப் பொருத்தம் என்றால் என்ன?
Mahendra Porutham in Tamil – திருமண பொருத்தம் பார்க்கும்பொழுது 10 முக்கிய பொருத்தங்களில் ஒன்றாக மகேந்திரப் பொருத்தம் பார்க்கப் படுகிறது.
மகேந்திர பொருத்தம் என்றால் என்ன?
மகேந்திரப் பொருத்தம்(Mahendra Porutham) என்பது குழந்தை பாக்கியத்தை குறிக்கும், இந்த பொருத்தும் சந்ததி விருத்தியை உறுதி செய்வது ஆகும். மகேந்திர பொருத்தம் இல்லாத ஜாதகத்திற்கு நாடி பொருத்தம் அல்லது விருட்ச பொருத்தம் பார்த்து பொருத்தி கொள்ளலாம். அதுவும் இல்லையென்றால் ஜாதக கட்டத்தில் ஐந்தாம் பாவத்தையும் புத்திரகாரக கிரகமான குருபகவான் சிறப்பாக இருந்தால் எவ்வித பிரச்சனையும் இல்லை.

மகேந்திர பொருத்தம்
மகேந்திர பொருத்தம் எப்படி பார்ப்பது?
பெண் ஜாதகத்தில் பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை வரிசையாக எண்ணினால் 4, 7, 10, 13, 16, 19, 22, 25 எண்கள் வருமாயின் உத்தமம். மற்ற நட்சத்திரங்கள் என்றால் பொருத்தம் இல்லை. மகேந்திர பொருத்தம் இல்லையெனில் விருட்ச பொருத்தம் பார்த்து பொருந்தினால் போதும்.
Read More:-
- நட்சத்திர பொருத்தம்
- ராசி பொருத்தம் விளக்கம்
- திருமண பொருத்தம்
- மகேந்திர பொருத்தம்
- யோனி பொருத்தம்
- ஏக நட்சத்திரம் திருமண பொருத்தம்
- ராகு கேது தோஷ திருமண பொருத்தம்
- Read All Astrology Articles in English