உகர வீற்று எண்ணுப் பெயர்ப் புணர்ச்சி
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | ஜோதிட தகவல்கள் | Learn Basic Astrology | நாலடியார் பாடல்கள் மற்றும் விளக்கம் | கனவு பலன்கள்
1. ஒன்றென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய் கெட்டு, னகரவொற்று ரகரமாகத் திரியும். வந்தது மெய்யாயின் ரகரம் உகரம் பெறும்: உயிராயின், உகரம் பெறாது முதனீளும்.
உதாரணம்.
ஒன்று + கோடி – ஒருகோடி
கழஞ்சு – ஒருகழஞ்சு
நாழி – ஒருநாழி
வாழை – ஒருவாழை
ஆயிரம் – ஓராயிரம்
இரண்டென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய்யும், ணகரவொற்றும், ரகரத்தின் மேனின்ற அகரவுயிருங் கெடும். வந்தது மெய்யாயின், ரகரம் உகரம் பெறும்: உயிராயின், உகரம் பெறாது முதனீளும்.
உதாரணம்.
இரண்டு + கோடி – இருகோடி
கழஞ்சு – இருகழஞ்சு
யானை – இருயானை
வாழை – இருவாழை
ஆயிரம் – ஈராயிரம்
மூன்றென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய் கெடும். நின்ற னகரமெய் வந்தது உயிராயிற்றானும் உடன் கெடும். மெய்யாயின் முதல் குறுகி, னகரமெய் வருமெய்யாகத் திரியும்.
உதாரணம்.
மூன்று + ஆயிரம் – மூவாயிரம்
கழஞ்சு – முக்கழஞ்சு
நாழி – முந்நாழி
நான்கென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய் கெடும். நின்ற னகரம், வந்தவை. உயிரும் இடையெழுத்துமாயின், லகரமாகத்திரியும்: வல்லெழுத்தாயின், றகரமாகத் திரியும்: மெல்லெழுத்தாயின் இயல்பாம்.
உதாரணம்.
நான்கு + ஆயிரம் – நாலாயிரம்
யானை – நால்யானை
கழஞ்சு – நாற்கழஞ்சு
மணி – நான்மணி
ஐந்தென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய் கெகுடும். நின்ற நகர மெய் வந்தவை உயிராயிற் றானும் உடன் கெடும். வல்லெழுத்தாயின், இனமெல்லெழுத்தாகத் திரியும். மெல்லெழுத்தும் இடையெழுத்துமாயின் அவ் வந்த வெழத்தாகத் திரியும்.
உதாரணம்.
ஐந்து + ஆயிரம் – ஐயாயிரம்
கழஞ்சு – ஐங்கழஞ்சு
மூன்று – ஐம்மூன்று
வட்டி – ஐவ்வட்டி
நகரமுந் தகரமும் வரின், ஐந்நூறு, ஐந்தூணி, என ஈற்றுயிர் மெய் மாத்திரங் கெடும். ஆறென்னும் எண் உயிர் வரிற் பொதுவிதியான் முடியும்: மெய்வரின் முதல் குறுகும்.
உதாரணம்.
ஆறு + ஆயிரம் – ஆறாயிரம்
கழஞ்சு – அறுகழஞ்சு
மணி – அறுமணி
வழி – அறுவழி
ஏழு என்னும் எண்ணின் முன் உயிர் வரின், ஈற்றுகரங் கெடும்: மெய்வரின் முதல் குறுகும்.
உதாரணம்.
ஏழு + ஆயிரம் – ஏழாயிரம்
கழஞ்சு – எழுகழஞ்சு
மணி – எழுமணி
வகை – எழுவகை
ஏழ்கடல், ஏழ்பரி என வருதலுமுண்டு.
எடடென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய் கெடும்: நின்ற டகரமெய் நாற்கணத்தின் முன்னும் ணகரமெய்யாகத்திரியும்.
உதாரணம்.
எடடு + ஆயிரம் – எண்ணாயிரம்
கழஞ்சு – எண்கழஞ்சு
மணி – எண்மணி
வளை – எண்வளை
இவ் விகாரங்களின்றிப் பொது விதி பற்றி, இரண்டு கழஞ்சு, மூன்று படி, நான்கு பொருள், ஐந்து முகம், ஆறு குணம், ஏழு கடல், எட்டுத் திக்கு எனவும் வருமெனக் கொள்க.
2. ஒன்பதென்னும் எண்முன் பத்தென்னும் எண்வரின், பது கெட்டு, முதலுயிரோடு தகரமெய் சேர்ந்து, நின்ற னகரம் ளகரமாகவும். வருமொழியாகிய நூறு ஆயிரமாவுந் திரியும்.
உதாரணம்.
ஒனபது + பத்து – தொண்ணுறு
ஒன்பது என்னும் எண்முன் நூறு என்னும் எண் வரின், பது கெட்டு, முதலுயிரோடு தகரமெய்சேர்ந்து, நின்ற னகரம் ளகரமாகவும், வருமொழியாகிய நூறு ஆயிரமாகவுந் திரியும்.
உதாரணம்.
என்பது + நூறு – தொள்ளாயிரம்
இது இக்காலத்துத் தொளாயிரம் என வழங்கும்.
3. ஒன்று முதல் எடடீறாக நின்ற எண்ணுப் பெயர் கண்முன் பத்தென்னும் எண்ணுப் பெயர் வரின், அப்பத்தின் நடு நின்ற தகரமெய், கெட்டாயினும், ஈய்தமாகத் திரிந்தாயினும் புணரும்.
உதாரணம்.
ஒன்று 10 பத்து – ஒருபது, இருபஃது
இரண்டு இருபது, இருபஃது
மூன்று முப்பது, முப்பஃது
நான்கு நாற்பது, நாற்பஃது
ஐந்து ஐம்பது, ஐம்பஃது
ஆறு அறுபது, அறுபஃது
4. ஒருபது முதல் எண்பது ஈறாகிய எண்களின் முன் ஒன்று முதல் ஒன்பதெண்ணும் அவற்றையடுத்த பிற பெயரும் வரின், நிலைமொழியீற்றுக்கு அயலிலே தகரவொற்றுத் தோன்றும்.
உதாரணம்.
ஒருபது 10 ஒன்று – ஒருபத்தொன்று
இருபது 10 இரண்டு – இருபத்திரண்டு
5. பத்தின் முன் இரண்டு வரின், உம்மைத் தொகையில் ஈற்றுயிர் மெய் கெட்டு நின்ற தகரமெய் னகரமாகத்திரியும்.
உதாரணம்.
பத்து 10 இரண்டு – பன்னிரண்டு
பத்தின் முன் இரண்டொழிந்த ஒனிறு முதல் எட்டீறாகிய எண்கள் வரின், உம்மைத்தொகையில் ஈற்றுயிர் மெய் கெட்டு, இன் சாரியை தோன்றும்.
உதாரணம். பத்து 10 ஒன்று – பதினொன்று
மூன்று – பதின்மூன்று
நான்கு – பதினான்கு
ஐந்து – பதினைந்து
ஆறு – பதினாறு
Read More: தமிழ் இலக்கணம் – திணை மற்றும் பால் | தன்மை முன்னிலை வினைமுற்று
6. பத்தின் முன்னும், ஒன்று முதலிய எண்ணுப் பெயரும், நிறைப்பெயரும், அளவுப்பெயரும், பிறபெயரும், வரின் பண்புத்தொகையில் இற்றுச்சாரியை தோன்றும்: அங்ஙனந் தோன்றுமிடத்துப் பத்தென்பதின் ஈற்றுயிர் மெய் கெடும்.
உதாரணம்.
பத்து 10 ஒன்று – பதிற்றொன்று
இரண்டு – பதிற்றிரண்டு
மூன்று – பதிற்றுமூன்று
பத்து – பதிற்றுப்பத்து
நூறு – பதிற்றுநூறு
ஆயிரம் – பதிற்றாயிரம்
கோடி – பதிற்றுக்கோடி
கழஞ்சு – பதிற்றுக்கழஞ்சு
கலம் – பதிற்றுக்கலம்
மடங்கு – பதிற்றுமடங்கு
ஒன்பது 10 ஒன்று – ஒன்பதிற்றொன்று
இரண்டு – ஒன்பதிற்றிரண்டு
மூன்று – ஒன்பதிற்றுமூன்று
பத்து – ஒன்பதிற்றுப்பத்து
நூறு – ஒன்பதிற்றுநூறு
ஆயிரம் – ஒன்பதிற்றாயிரம்
கோடி – ஒன்பதிற்றுக்கோடி
கழஞ்சு – ஒன்பதிற்றுக்கழஞ்சு
கலம் – ஒன்பதிற்றுக்கலம்
மடங்கு – ஒன்பதிற்றுமடங்கு
பத்தின் முன்னும், ஒன்பதின் முன்னும், ஆயிரமும், நிறைப்பெயரும், அளவுப்பெயரும், பிற பெயரும் வரின், பண்புத்தொகையில் இற்றுச்சாரியையேயன்றி இன் சாரியையும் தோன்றும்: அங்ஙனந் தோன்றுமிடத்துப் பத்தென்பதின் ஈற்றுயிர்மெய் கெடும்.
உதாரணம்.
பத்து 10 ஆயிரம் – பதினாயிரம்
கழஞ்சு – பதின்கழஞ்சு
கலம் – பதின்கலம்
மடங்கு – பதின்மடங்கு
ஒன்பது 10 ஆயிரம் – ஒன்பதினாயிரம்
கழஞ்சு – ஒன்பதின்கழஞ்சு
கலம் – ஒன்பதின்கலம்
மடங்கு – ஒன்பதின்மடங்கு
7. ஒன்பதொழிந்த ஒன்று முதற் பத்தீறாகிய ஒன்பதென்களையும் இரட்டித்து சொல்லுமிடத்து, நிலைமொழியின் முதலெழுத்து மாத்திரம் நிற்க, அல.லென் வெல்லாங் கெட்டு, முதனெடில் குறுகவும், வந்தவை உயிராயின் வகரவொற்றும், மெய்யாயின் வந்த எழுத்தும் மிகவும் பெறும்.
உதாரணம்.
ஒன்று 10 ஒன்று – ஒவ்வொன்று
இரண்டு 10 இரண்டு – இவ்விரண்டு
மூன்று 10 மூன்று – மும்மூன்று
நான்கு 10 நான்கு – நந்நான்கு
ஐந்து 10 ஐந்து – ஐவைந்து
ஆறு 10 ஆறு – அவ்வாறு
ஏழு 10 ஏழு – எவ்வேழு
எட்டு 10 எட்டு – எவ்வெட்டு
மெய்யீற்று முதனிலைத் தொழிற்பெயர் முன்னும் ஏவல் வினை முன்னும் மெய் புணர்தல்
8. ஞ், ண், ந், ம், ல், வ், ள், ன் என்னும் இவ்வெட்டு மெய்யீற்று முதனிலைத் தொழிற்பெயரும், ஏவல் வினை முற்றும், தம்முன் யகரமல்லாத மெய்கள் வரின், உகரச் சாரியை பெறும். தொழிற்பெயரின் சாரியைக்கு முன் வரும் வல்லினம் மிகும்.
உதாரணம்.
அல்வழி வேற்றுமை
உண்ணுஞான்றது உண்ணுஞாற்சி
பொருநுவலிது பொருநுவன்மை
உரிஞகொற்றா
உண்ணுநாகா
பொருநுவளவா
திரும், செல், வவ், துள், தின் முதலியனவற்றோடும் இவ்வாறேயொட்டிக்கொள்க. முதனிலைத் தொழிற்பெயராவது தொழிற்பெயர் விகுதி குறைந்தது. முதனிலை மாந்திர நின்று தொழிப்பெயர்ப் பொருளைத் தருவதாம்.
இவ்வொட்டீற்று ஏவல் வினைகளுள்ளே, உண்கொற்றா, தின் சாத்தா, வெல்பூதா, தூள் வளவா என, ண, ன, ல, ள, என்னும் இந்நான்கீறும், உகரச்சாரியை பெறாதும் நிற்கும்.
பொருநூதல் – மற்றொருவர்போல வேடங்கொள்ளுதல் பொருந் என்பது தொழிற்பெயராவதன்றி அத்தொழிலினரை உணர்த்துஞ் சாதிப்பெயருமாம்.
பொருநூக்கடிது என நகரவீற்றுச் சாதிப்பெயரும் வெரிநுக்கடிது என நகரவீற்றுச் சினைப்பெயரும், உகரச்சாரியை பெறுமெனவுங்கொள்க. வெரிந் – முதுகு.
‘ண’கர ‘ன’கர வீற்றுப் புணர்ச்சி
9. ணகர னகரங்களின் முன் வல்லினம் வரின், அல் வழியில் அவ்விரு மெய்களும் இயலபாம். வேற்றுமையில் ணகரம் டகரமாகவும், னகரம் றகரமாகவுந் திரியும். அவ்விரு வழியிலும், வருந்தகரம் ணகரத்தின் முன் டகரமாகவும், னகரத்தின் முன் றகரமாகவும் திரியும்.
உதாரணம்.
அல்வழி வேற்றுமை
மண்சிறிது மட்சாடி
மண்டீது மட்டூண்
பொன் குறிது பொற்கலம்
பொன்றீது பொற்றூண்
கட்பொறி, பொற்கோடு எனப் பண்புத் தொகையினும் பட்சொல், பொற்சுணங்கு என உவமைத் தொகையினுந் திரிதலும் உண்டு.
மண் சுமந்தான், பொன் கொடுத்தான், என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், விண் பறந்தது, கான் புகுந்தான் என ஏழாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாயவிடத்துத் திரியாதியல்பாம். மண்கூடை, புண்கை, என ஒரோவிடத்து இரண்டனுருபும் பயனும் உடன் றொக்க தொகையினுந் திரியாமை கொள்க.
10. ணகர, னகரங்களின் முன் மெல்லினமும் இடையினமும் வரின், இறுதி ண னக்கள் இரு வழியினும் இயல்பாம். அவ்விரு வழியிலும், ணகரத்தின் முன் வரு நகரம் ணகரமாகவும்: னகரத்தின் முன் வரு நகரம் னகரமாகவுந் திரியும்.
உதாரணம்.
அல்வழி வேற்றுமை
மண்ஞான்றது மண்ஞாற்சி
மண்ணீன்டது மண்ணீட்சி
மண்வலிது மண்வன்மை
பொன்ஞான்றது பொன்ஞாற்சி
11. தனிக்குற்றெழுத்தைச் சாராத ணகர னகரங்கள், வரு நகரந் திரிந்த விடத்து, இரு வழியினுங் கெடும்.
உதாரணம்.
அல்வழி வேற்றுமை
தூணன்று தூணன்மை
அரணன்று அரணன்மை
வானன்று வானன்மை
12. பாண், உமண், அமண், பரண், கவண், என்னும் பெயர்களின் இறுதி ணகரம், வல்லினம் வரின், வேற்றுமையினுந் திரியாதியல்பாம்.
உதாரணம்.
பாண்குடி உமண்சேரி அமண்பாடி
பரண்கால் கவண்கால்
பாண் – பாடுதற்றொழிலுடையதொரு சாதி
உமண் – உப்பமைதற்றொழிலுடையதொரு சாதி.
அமண் – அருகனை வழிபடுவதொரு கூட்டம்.
13. தன், என், என்னும் விகார மொழிகளின் இறுதி னகரம், வல்லினம் வரின், ஒருகாற் றிரிந்தும், ஒருகாற் றிரியாதும், நிற்கும். நின் என்னும் விகாரமொழியின் இறுதி னகரந் திரியாதியல்பாகும்.
உதாரணம்.
தன்பகை தற்பகை
என்பகை எற்பகை
நின்பகை
தற்கொண்டான், எற்சேர்ந்தான், நிற்புறங்காப்ப என இரண்டாம் வேற்றுமைத் தொகையிற்றிரிந்தே நிற்கும்
14. குயின், ஊன், எயின், எகின், தேன், மீன், மான், மின் என்னுஞ் சொற்களின் இறுதி னகரம், வல்லினம் வரின், வேற்றுமையினுந் திரியாதியல்பாம்.
உதாரணம்.
குயின்கடுமை – தேன்பெருமை
ஊன்சிறுமை – மீன்கண்
எயின்குடி – மான்செவி
எகின்சிறுமை – மின்கடுமை
குயின் – மேகம், எயின் – வேட்டுவச்சாதி, எகின் – அன்னப்புள்
தேன் என்பது, தேக்குடம், தேங்குடம் என, இறுதி னகரங்கெட, ஒருகால் வரும் வல்லெழுத்தும் ஒருகால் அதற்கின மெல்லெழுத்து வருமிடத்து ஈறு கெடுதலுமுண்டு.
மகரவீற்றுப் புணர்ச்சி
15. மகரத்தின் முன் வல்லினம் வரின், வேற்றுமையினும். அல்வழியிலே பண்புத் தொகையினும், உவமைத் தொகையினும், இறுதி மகரங் கெட்டு, வரும் வல்லினமிகும். எழுவாய்த் தொடரினும், உம்மைத் தொகையினும், செய்யுமென்னும் பெயரெச்சத் தொடரினும், வினைமுற்றுத் தொடரினும், இடைச் சொற்றொடரினும், இறுதி மகரம் வரும் வல்லெழுத்திற்கு இனமாகத் திரியும்.
உதாரணம்.
மரக்கோடு
நிலப்பரப்பு வேற்றுமை
வட்டக்கடல்
சதுரப்பலகை பண்புத்தொகை
கமலக்கண் உவமைத்தொகை
முரங்குறிது
யபங்கொடியேம் எழுவாய்
நிலந்தீ
பயங்காக உம்மைத்தொகை
செய்யுங்காரியம் பெயரெச்சம்
உண்ணுஞ்சோறு
16. தனிக்குற்றெழுத்தின் கீழ் நின்ற மகரம், இரு வழியினும், வரும் வல்லெழுத்திற்கு இனமாகத் திரியும்.
உதாரணம்.
அல்வழி வேற்றுமை
கங்குறிது கங்குறுமை
அஞ்சிறிது அச்சிறுமை
செங்கோழி நங்கை
தஞ்செவி
17. மகரத்தின் முன் மெல்லினம் வரின், இறுதி மகரம், இருவழியிலுங் கெடும்.
உதாரணம்.
அல்வழி வேற்றுமை
மரஞான்றது மரஞாற்சி
மரநீண்டது மரமாட்சி
18. தனிக்குறிலின் கீழ் நின்ற மகரம், ஞ நக்கள் வரின், அவ்வெழுத்தாகத் திரியும்.
உதாரணம்.
அஞ்ஞானம் நுஞ்ஞானம்
எந்நூல் தந்நூல் நந்நூல்
19. மகரத்தின் முன் உயிரும் இடையினமும் வரின், வேற்றுமையினும், அல்வழியிலே பண்புத் தொகையினும், உவமைத் தொகையினும், செய்யுமென்னும் பெயரெச்சத் தொடரினும், உம்மைத் தொகையினும், செய்யுமென்னும் பெயரெச்சத் தொடரினும், வினைமுற்றுத் தொடரினும், இடைச் சொற்றொடரினும் இறுதி மகரங்கெடாது நிற்கும்.
உதாரணம்.
மரவடி
மரவேர் வேற்றுமை
வட்டவாழி
வட்டவடிவம் பண்புத்தொகை
பவளவிதழ்
பவளவாய் உவமைத்தொகை
மரமரிது
மரம்வலிது எழுவாய்
வலமிடம்
நிலம்வானம் உம்மைத்தொகை
உண்ணுமுணவு
ஆளும்வளவன் பெயரெச்சம்
உண்டனமடியேம்
உண்டனம்யாம் வினைமுற்று
அரசனுமமைச்சனும் ஆகியவை உம்மையிடைச்சொல்
நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!
Read More:
- தமிழ் இலக்கண நூல்கள்
- தமிழ் இலக்கணத்தின் வகைகள்
- தன்மை வினைமுற்று
- முற்று வினை என்றால் என்ன
- இடவேற்றுமை பெயர்கள்
- வேற்றுமை உருபு
- Video: அடிப்படை ஜோதிடம் கற்க
- தமிழ் பழமொழிகள்
- Read More: தமிழ் இலக்கணம் – திணை மற்றும் பால்
- தமிழ் இலக்கணம் – திணை மற்றும் பால்
- தன்மை முன்னிலை வினைமுற்று
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்
Comments are closed.