Skip to content
Home » ஆன்மிகம் » தனிஷ்டா பஞ்சமி காலங்கள்

தனிஷ்டா பஞ்சமி காலங்கள்

Dhanishta Panjami – தனிஷ்டா பஞ்சமி என்றால் என்ன? அது ஏன் பார்க்கப்படுகிறது. தனிஷ்டா பஞ்சமி இறந்தவர்களின் அடைப்பு காலமாக கருதப்படுகிறது. ஒருவர் இறந்த நேரத்தில் கோச்சார சந்திரன் எந்த நட்சத்திரத்தில் உள்ளதோ அந்த நட்சத்தித்தை வைத்து தனிஷ்டா பஞ்சமி காலங்கள் நிர்ணயிக்கப்படுகிறது.

தனிஷ்டா பஞ்சமி காலங்கள்
தனிஷ்டா பஞ்சமி காலங்கள்

ஒருவர் வினைப்பயன் காரணமாக மேலுலகம் செல்வதற்கு ஏற்படும் தடையையே அடைப்பு என்று சொல்கிறார்கள்.

தனிஷ்டா பஞ்சமியில் 13 நட்சத்திரங்களுக்கு மட்டுமே கால அளவுகள் கணக்கிடப்பட்டுள்ளன. மற்ற நட்சத்திரத்திற்கு கால அளவுகள் இல்லை. அதில்,

அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு ஆறு மாதங்கள் அடைப்பு காலமாகும்.

ரோகிணி நட்சத்திரத்தில் இறந்தவர்களுக்கு நான்கு மாதங்கள் அடைப்பு காலமாகும்.

கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு மூன்று மாதங்கள் அடைப்பு காலம்.

மிருகசீருஷம், சித்திரை, புனர்பூசம், விசாகம், உத்திராடம் ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு இரண்டு மாதங்கள் அடைப்பு காலம்.

ஒருவர் இறக்கும் போது திதியும் நட்சத்திரத்தையும் பார்க்க வேண்டியது முக்கியம். திதியானது வருடம் வருடம் தவசம் கொடுக்க பார்க்க வேண்டும். அதுபோல நட்சத்திரத்தை அடைப்பு காலத்திற்காக பார்க்க வேண்டும்.

இறந்த பின்பு முக்தி பெற உயிர்கள் கபாலம் திறந்து சூரியன் வழியாக ஒளிவடிவான இறைவனை அடைகின்றன. அவ்வாறு செல்ல இருக்கும் உயிர்களை, அடைப்பு உள்ள நட்சத்திரங்களில் இறந்தவரின் வீட்டில் முறையான பரிகாரங்களைக் செய்யாவிட்டால் துர்தேவதைகள் இறைவனை அடைய தடையை ஏற்படுத்தும்.

தனிஷ்டா பஞ்சமி காலம் வரை நெல்லெண்ணய் தீபம் ஏற்றி, தண்ணீர், நைவேத்தியம் வைத்து, கற்பூர ஆரத்தி செய்து இறந்த உயிருக்கு உணவும், நீரும் சென்றடைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டு தீபம் அனையாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

தனிஷ்டா பஞ்சமி பரிகாரம்

மேற்கூறிய நட்சத்திரங்களில் மரணம் நடந்தவர்களுக்கு அடைப்பு காலம் முடியும் வரை மரணம் சம்பவித்த வீட்டை பூட்டி வைக்க வேண்டும் அல்லது வெண்கல கிண்ணத்தில் நல்லெண்ணெய் விட்டு விளக்கேற்றி வரவேண்டும். தோஷ காலம் முடிந்தபின்பு அந்த விளக்கை தானம் செய்ய வேண்டும்.

தெரிந்துகொள்க 

 

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்