ஜாதகத்தில் வக்கிரம் அதிசாரம் என்றால் என்ன?

ஜாதகத்தில் வக்கிரம் என்றால் என்ன? ஜாதகம் எழுதும்பொழுது சில கிரகங்களுக்கு (வ) என்று ஜாதகம் கணிப்பவர் எழுதியிருப்பார். அப்படி எழுதப்பட்ட ஜாதக கட்டத்தில் உள்ள கிரகம் வக்கிரம் ஆகியுள்ளது என்று அர்த்தம். அதாவது சரியான பாதையில் சுழல வேண்டிய கிரகம், சிறிது பின்னோக்கி சுழல ஆரம்பிக்குதுன்னு அர்த்தம்.

ஜோதிடம் அடிப்படை விதிகள் படி பொதுவாக சூரியனுக்கு 6, 7, 8 ஆம் இடங்களில் வரும்பொழுது கிரகங்கள் வக்கிரம் அடையும். இதில் இராகு, கேது மற்றும் சந்திரன் தவிர மற்ற கிரகங்களில் வக்கிரம் அடையும். பொதுவாக லக்கினத்திற்கு 7 ஆம் இடம் அதிபதி வக்கிரம் பெற்றிருந்தால் திருமணம் தாமதமாகும்.

வக்கிரம் என்பது ஒருவரது மனம், சிந்தனைகளை குறிக்கும். ஒரு ஜாதகத்தில் வக்கிரமடைந்த கிரகங்கள் முக்கியதுவம் பெறுகின்றன. அவை நேர் சஞ்சாரத்தில் இருப்பதைவிட வக்கிர கதியில் பலம் பெறுகின்றன. அவை அதிக சுப பலனையும் கொடுக்கலாம் அல்லது கெடு பலனையும் கொடுக்கலாம்.

வக்கிரம் அடைந்த கிரகம் பொதுவாக தான் நேர் சஞ்சாரத்தில் கொடுக்கும் பலனுக்கு நேர்மாறாக பலன் கொடுக்கும்.

ஜாதகத்தில் அதிசாரம் என்றால் என்ன?

அதிசாரம் என்பது வக்கிரத்துக்கு நேர் எதிரானது ஒரு இடத்தில் இருக்க வேண்டிய கிரகம் ஒரு படி அதிகம் முன்னே சென்று நிற்கிறது எனில் அது அதிசாரம் ஆகும்.

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்

Comments are closed.