செவ்வாய் தோஷம் பொருத்தம்

Chevvai Dosham – இந்த பதிவில் செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அது ஜாதகருக்கு எவ்வித பாதிப்புகளை உண்டாக்கும் மற்றும் எப்படி செவ்வாய் தோஷம் திருமண பொருத்தம் செய்வது என்று தெளிவாக தெரிந்து கொள்வோம்.

செவ்வாய் தோஷம் பொருத்தம்
செவ்வாய் தோஷம் பொருத்தம்

செவ்வாய் தோஷம் என்றால் என்ன?(Chevvai Dosham)

ஜாதத்தில் லக்னம், ராசிக்கு செவ்வாய் 2,4,7,8,12ஆம் ஸ்தானங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகம் என்று எடுத்துக்கொள்ளலாம்.

செவ்வாய் ஒரு இயற்கை பாவ கிரகம் கோபம், படபடப்பு, அவசர முடிவு, முடிவு எடுத்தபின்பு தவறுக்காக வருந்துவது, சந்தேகம், தைரியம், துணிகரம், சூது, வஞ்சகம், விபத்து, கண்டம், காயம் போன்ற அனைத்து விஷயங்களுக்கும் காரணமாகிறது.

ஆதலால் தான் செவ்வாய் 2,4,7,8,12ஆம் வீடுகளில் அமைய தோஷத்தை உண்டாக்குகிறார் என்கிறார்கள். ஏனென்றால் இந்த பாவங்கள் அனைத்தும் மணவாழ்க்கை சம்பந்தப்பட்டது.

2ஆம் பாவம் – குடும்பம், வாக்கு
4ஆம் பாவம் – ஆரோக்கியம், சுக ஸ்தானம்
7ஆம் பாவம் – களத்திர ஒற்றுமை, தாம்பத்தியம்
8ஆம் பாவம் – ஆயுள், கண்டம்
12ஆம் பாவம் – போகம், படுக்கை அறை

செவ்வாய் தோஷத்தினால் உண்டாகும் பாதிப்புகள்

2ஆம் பாவகத்தில் செவ்வாய் இருந்தால்

குடும்பத்தில் அமைதியின்மை ஏற்படுத்தும், எப்பொழுதும் குடுப்பதில் சண்டை, சச்சரவுகளும் ஏற்படும். மன அமைதி சீர்குலையும்.

4ஆம் பாவகத்தில் செவ்வாய் இருந்தால்

சுக ஸ்தானமாக 4ஆம் வீட்டில் இருந்தால் உடலில் ஏதாவது ஒரு பிரச்சனைகளை கொடுத்துக்கொண்டே இருக்கும், இரத்தம், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை கொடுக்கும். மேலும் பிரயாணத்தில் விபத்துகள் ஏற்பாடு சூழல் உண்டாகும்.

7ஆம் பாவகத்தில் செவ்வாய் இருந்தால்

இல்லற சுகம், களத்திர ஒற்றுமை போன்றவற்றை குறிக்கும் இடத்தில செவ்வாய் இருக்க வேட்கை அதிகரிக்கும் மற்ற செவ்வாய் தோஷம் இல்லாத ஜாதத்தை கண்டிப்பாக இவர்களுடன் பொருத்தம் செய்ய கூடாது.

8ஆம் பாவகத்தில் செவ்வாய் இருந்தால்

ஆண்களுக்கு ஆயுள் ஸ்தானம் பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானத்தையும் குறிக்கும் இடமாகும். செவ்வாய் 8ல் இருக்க இந்த இரண்டு விஷயங்களும் பாதிக்கப்படும். மேலும் வாழ்க்கையில் எதிர்மறையான நிகழ்வுகளையே சந்திக்க நேரிடும்.

12ஆம் பாவகத்தில் செவ்வாய் இருந்தால்

படுக்கையறையில் சுகம் தரும் பாவகத்தில் செவ்வாய் இருந்தால் அதீத ஆர்வத்துடன் இருப்பார் இதனால் களத்திரத்துடன் வேறுபாடு தோன்றும், திருப்தியற்ற நிலையே உண்டாகும்.

இதுவே செவ்வாய் 2,4,7,8,12ஆம் பாவத்தில் இருந்தால் ஏற்படும் விளைவுகள்ஆகும் மற்றும் செவ்வாய் தோஷம் நிர்ணயம் செய்யும் முறையும் ஆகும்.

திருமணத்திற்கு செவ்வாய் தோஷம் பொருத்தம் செய்வது எப்படி?

முதலில் செவ்வாய் லக்கினம் அல்லது ராசிக்கு 2,4,7,8,12ஆம் பாவத்தில் இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும்.

2,7,8ஆம் பாவத்தில் செவ்வாய் உள்ள ஜாதகத்தை அதேபோல 2,7,8ஆம் பாவத்தில் உள்ள ஜாதகருடன் பொருத்தம் செய்ய வேண்டும்.

4,12ஆம் பாவத்தில் செவ்வாய் உள்ள ஜாதகத்தை அதேபோல 4,12ஆம் பாவத்தில் உள்ள ஜாதகருடன் பொருத்தம் செய்ய வேண்டும்.

இவ்வாறு பொருத்தம் செய்யும் காலத்தில் இருவரில் யாருக்காவது செவ்வாய் திசை அல்லது புத்தி நடக்கிறதா என்றும் அதனால் ஏதும் விளைவுகள் ஏற்படுமா என்றும் நல்ல ஜோதிடரிடம் சென்று ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.

Read More:-

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்