சுப நட்சத்திரங்கள் அசுப நட்சத்திரங்கள் எவை?

இந்த பதிவில் சுப நட்சத்திரங்கள் எவை? மத்திமமான சுபநட்சத்திரங்கள் மற்றும் அசுப நட்சத்திரங்கள் எவை என்று தெரிந்து கொள்வோம். மேலும் அதனைக்கொண்டு எப்பொழுது திருமணம் முகூர்த்தம் , கிரகப்பிரவேசம், சீமந்தம், முகூர்த்தம் குறித்தல், நிச்சயம்தர்த்தம், பெயர் சூட்டுதல் போன்ற சுப நிகழ்ச்சிகளை எப்பொழுது வைக்கலாம் என்று பார்ப்போம்.

சுப நட்சத்திரங்கள்

அசுவினி, ரோகிணி, பூசம், ஹஸ்தம், அனுஷம், மூலம், திருவோணம், உத்திரட்டாதி மற்றும் ரேவதி.

மத்திமமான சுபநட்சத்திரங்கள்

பரணி, மிருகசீரிடம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், சுவாதி, கேட்டை, பூராடம், உத்திராடம், அவிட்டம் மற்றும் சதயம். இந்த நட்சத்திரங்கள் மத்திமமான சுபநட்சத்திரங்கள் என்று முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அசுப நட்சத்திரங்கள்

கார்த்திகை, திருவாதிரை, புனர்பூசம், சித்திரை, விசாகம் மற்றும் பூரட்டாதி நட்சத்திரங்கள் அசுப நட்சத்திரங்கள் என முன்னோர்கள் வகைப்படுத்தியுள்ளனர். இந்த நட்சத்திர காலங்களில் சுப காரியங்களை தவிர்ப்பது நல்லது.

என்னதான் சுபம் நட்சத்திரம் பார்த்தாலும் முக்கியமாக ஒருவருடைய தாராபலம், மற்றும் சந்திரபலம் பார்த்துதான் நட்சத்திரத்தை கணக்கிட வேண்டும்.

தெரிந்துகொள்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்