சஷ்டாஷ்டகம் என்றால் என்ன?

Digital Marketing Company in Trichy
BSR Solutions - Digital Marketing Company in Trichy

இந்த பதிவில் சஷ்டாஷ்டகம் என்றால் என்ன? மற்றும் திருமணத்தின் போது சஷ்டாஷ்டக தோஷம் எவ்வாறு பார்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.

சஷ்டாஷ்டகம்
சஷ்டாஷ்டகம்

ஒரு ராசியில் நிற்கும் கிரகத்துக்கு 6வது மற்றும் 8வது ராசியில் ஒரு கிரகம் நின்றாள் அது சஷ்டாஷ்டகம் எனப்படும்.

இந்த அமைப்பில் இடம்பெறும் கிரக தசாபுத்திகள் சுபம் என்றால் கூட சுப பலனை தருவதில்லை.

மாறாக லக்கின ரீதியான பாபக் கிரகங்கள் சஷ்டாஷ்டகம் அமைப்பை பெற்றால் அவர்களது தசா புத்தி காலங்களில் விபரீத ராஜயோகம் உண்டாகும்.

சஷ்டாஷ்க தோஷம் என்றால் என்ன?

சஷ்டாஷ்க என்பதற்கு ஒற்றுமை இன்மை என்று தமிழில் பொருள்படும். சஷ்டாஷ்க தோஷம் என்றால், இராசிகளின் கோள்கள் அல்லது லக்ன கோள்கள் ஒற்றுமை இல்லா நிலையில் (இராசி அதிபதி பொருத்தம் இல்லாத நிலையும் இந்தகைய தோஷம் எனலாம்.) உள்ளன என்பதாகும். பெரும்பாலும் திருமண பொருத்தத்தின் பொது அதிகம் பயன்படுகிறது.

பெண் ராசியிலிருந்து ஆண் ராசி வரை எண்ணினால், பெண் ராசிக்கு ஆண் ராசி 6ஆம், 8வது ராசியாகவோ அல்லது 8ஆம், 6வது ராசியாகவோ வந்தால் சஷ்டாஷ்டக தோஷம் எனப்படும். அத்தகைய நிலையில் இருப்பின் ஜாதக பொருத்தம் செய்ய கூடாது. மேலும் பொருத்தினால் இவர்களின் அன்றாட வாழ்வில் ஒற்றுமை இல்லாத நிலை உண்டாகும். மேலும், இருவீட்டாரின் குடும்பத்துக்கும் பகை உண்டாகி பிரச்சனைகள் அதிகரிக்கும்.

இது திருமணம் முடிப்பதற்கு ஏற்ற நிலை அல்ல.

உதாரணமாக, பெண் ராசி மேஷம் என வைத்துக்கொள்வோம் அதிலிருந்து 6வது ராசி கன்னி 8வது ராசி விருச்சிகம் பொருத்தம் கூடாது. இதேபோல மற்ற ராசிக்கும் பார்த்து கணக்கிட வேண்டும்.

தெரிந்துகொள்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்