இந்த பதிவில் சளி குணமாக வைத்தியம்(Home Remedies for Cold) பார்ப்பது எப்படி என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளதை பார்ப்போம் | common cold treatment | home remedies for cold and sneezing | chest congestion home remedies
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்
சளி குணமாக (Common Cold Treatment)
சளி குணமாக விரலி மஞ்சள் இரண்டு அல்லது மூன்று எடுத்து விளக்கெண்ணெயில் மூழ்கி எடுத்து நெருப்பில் சுட்டு அதனுடைய புகையை நுகர வேண்டும்.
கற்பூரவள்ளி அல்லது ஓமவள்ளி இல்லை சாறுடன், சம அளவு எடுத்து நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சவேண்டும். பின் சாறு வற்றியவுடன் அதனை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் சளி தொல்லைகள் நீங்கும்.
ஆடாதோடை செடியின் வேரை இடித்து சலித்து சிறிது தேன் விட்டு சாப்பிட்டு வர நெஞ்சு சளி கரையும்.
தும்பை இலையை சாறு பிடித்து சிறிது மூக்கில் விட சளி கரைந்து வெளிப்படும். உடலுக்கு மிகுந்த ஊட்டத்தையும் தரவல்லது.
பசு நெய்யில் 2 அல்லது 3 ஏலக்காயை உடைத்து போட்டு காய்ச்ச வேண்டும். காய்ச்சியபின் ஏலக்காய் எடுத்து சாறு பிழியவும். இதனால் மூக்கில் நீர் வடிதல் மற்றும் சளி தொந்தரவு நீங்கும்.
துவரம் பருப்பு, குறு மிளகு மற்றும் உப்பு மூன்றையும் வாணலியில் வறுத்து பொடி செய்து, சுடு சாதத்தில் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.
150 மி.லி. தண்ணீரில் 15 கிராம்புகளை போட்டு கொதிக்க வைத்து எடுத்து கொள்ளவேண்டும். பின் அதில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.
சூடான சுக்கு காப்பியில் சிறிது தேன் கலந்து குடித்தால் சளி முறிந்து மூக்கடைப்பு நீங்கும்.
சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம் ஆகியவற்றை சம அளவு எடுத்து பொன்னிறமாக வறுத்து பொடி செய்து அதனுடன் சம அளவு பனங்கற்கண்டு சேர்த்து கொள்ளவேண்டும். இதனை தினமும் காலையும் மாலையும் 1 தேக்கரண்டி அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் சளி மற்றும் ஆஸ்துமா சரியாகும்.
நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!
Read More:-
வயிற்றில் கொழுப்பு சேர்வதால் ஏற்படும் விளைவுகள்
Video: அம்மா பற்றிய வரிகள்
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்