சனி பகவான் வரலாறு

இந்த பதிவில் சனி பகவான் வரலாறு, சனி தொழில், சனி பகவான் கோயில், ஜோதிடத்தில் சனி பகவான் வீடு, சனி கிரகம் ஆதிபத்தியம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம்.

சனி பகவான் வரலாறு
சனி பகவான் வரலாறு

சனி பகவான் வரலாறு

சூரிய பகவான் மனைவி உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தை. அவர் சிவனை நோக்கி கடும் தவம் செய்ய முடிவெடுக்கிறார். இருப்பினும் சூரிய பகவானை பிரிந்து செல்ல மனம் வராததால் தன்னுடைய நிழலை கொண்டு சாயாதேவி என்றொரு பெண்ணை உருவாக்குகிறார். பின் சாயாதேவியம் தான் இருந்து செய்யவேண்டிய அனைத்தையும் நீ செய்யவேண்டும் என்று கூறிவிட்டு உஷா தேவி சிவனை நோக்கி தவம் இருக்கிறார்.

சூரிய பகவானும் சாயாதேவியை உஷா தேவி என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர்கள் இருவருக்கும் கிருதவர்மா(சனி பகவான்) என்ற ஆண் குழந்தையும், தபதி என்ற பெண் குழந்தையும் பிறக்கிறது. தாயின் சாயலில் சனி பகவான் பிறந்ததால், நிழலை போன்று கருமையான நிறத்தில் இருக்கிறார். சூரிய பகவான் சனிபகவானை காட்டிலும் மற்ற குழந்தைகளிடம் அன்பாக இருக்கிறார். தந்தையின் அன்பிற்காக ஏங்கிய சனி பகவான் வளர வளர தந்தையின் மீதே வெறுப்பு கொள்கிறார். ஒரு கட்டத்தில் தந்தையை தன் விரோதியை போல நினைக்க துவங்குகிறார்.

ராகு பகவான் வரலாறுகேது பகவான் வரலாறு

பிறகு கோபம் கொண்ட சனி பகவான் தன்னுடைய தந்தையை காட்டிலும் தான் சக்தி படைத்தவனாக இருக்க வேண்டும் என்று எண்ணி சிவ பெருமானை நோக்கி கடும் தவம் புரிகிறார். சனியின் கடும் தவம் காரணமாக ஈசன் அவருக்கு காட்சி அளித்து அவர் கேட்ட வாரங்கள் அனைத்தையும் தந்தருளினார். அன்று முதல் நவகிரகங்களில் ஒருவராகவும், ஈஸ்வரன் பட்டம் பெற்று சனீஸ்வரன் என்றும் அழைக்கப்பட்டார்.

சனி ஆதிபத்தியம்

ஒருவர் பிறப்பு ஜாதகத்தில் சனி எந்த வீட்டில் இருக்கிறாரோ அதுவே சனி ஆதிபத்தியம் ஆகும். ஆகவே சனி அந்த வீட்டின் பலனை கொடுத்தே தீருவார். அது நல்ல பலனா அல்லது தீய பலனா என்று ஜாதகத்தை ஆராய்ந்த பின்னரே முடிவு எடுக்க முடியும்.

சனி பகவான் வீடு

ஜோதிடத்தில் 12 ராசி கட்டங்கள் இருக்கின்றன அதனை 9 கோள்களில் ராகு, கேது தவிர மற்ற 7 கிரகங்கள் தனக்கென சொந்த வீடுகள் கொண்டுள்ளன. அதிலும் சூரியன் சந்திரன் தலா 1 வீடு மட்டுமே சொந்த வீடு. அதில் சனி பகவான் சொந்த என மகரம் ராசி மற்றும் கும்பம் ராசி எடுத்துக்கொள்ள படுகிறது.

சனி பகவான் கோயில்

காரைக்கால் அருகில் அமைந்துள்ள திருநள்ளாறு சனி பகவான் கோயில், தேனீ மாவட்டம் அருகில் அமைந்துள்ள குச்சனுர் சனி பகவான் கோயில், மண்டபள்ளி மாண்டேஸ்வர சுவாமி கோயில், ஆந்திரா மாநிலம். பன்னஞ்சே ஸ்ரீ சனி ஷேத்ரா, உடுப்பி, கர்நாடகா மாநிலம்.

சனி தொழில்

கீழ் நிலையில் உள்ள அரசு சம்பந்தமான வேலை, இரும்பு சம்பந்தமான வேலை, நிலக்கரி சுரங்கம் வேலை, பேரம் பேசுதல், துப்புரவு தொழிலாளர், எண்ணெய் ஆலை, பெட்ரோல் சம்பந்தப்பட்ட தொழில், பழைய பொருட்களை வாங்கி விற்பது, கலப்படம் செய்வது, கம்பளி மற்றும் உலோக தாதுக்கள் விற்பனை, கூலி ஆட்கள், பனங்கற்கண்டு, பதநீர் விற்பனை சனி பகவான் தொழில் ஆகும்.

தெரிந்துகொள்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்