சனி தோஷம் விளக்கம்

சனி தோஷம் விளக்கம் – இந்த பதிவில் சனி தோஷம் என்றால் என்ன? மற்றும் அதனுடைய பலன்கள் எவ்வாறு ஒருவருடைய ஜாதகத்தில் பிரச்சனைகளை உருவாக்குகிறது, அதனை சரி செய்வதற்கான பரிகாரம் மற்றும் நிவர்த்தி என்று பார்ப்போம். இவை யாவும் பொதுப்பலனே பற்ற கிரகங்கள் பொருத்து வித்தியாசப்படும்.

சனி தோஷம் விளக்கம்

சனி தோஷம் விளக்கம்

ஆயுள் காரகன் மற்றும் கர்மா காரகன் என் அழைக்கப்படும் சனி பகவான் ஒருவர ஜாதகத்தில் 1,2,5,7,8,12இல் அமர்ந்து தோஷத்தை ஏற்படுத்துகிறார்.

Read More: சனி பற்றி தெரிந்து கொள்வோம்

சனி தோஷத்தின் பலன்கள்

1ஆம் பாவம் மற்றும் லக்கினத்தில் சனி அமர்ந்திருக்க ஜாதகர் வயதுக்கு மீறிய தோற்றத்தையும் அல்லது தோற்றத்தில் ஏதாவது வித்தியாசம் இருக்கும். ஜாதகர் சோம்பல் குணம் கொண்டவராக இருப்பார். அடிக்கடி ஆரோக்கிய குறைபாடு ஏற்படும்.

2ல் சனி இருக்க குடும்ப ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்தும். திருமண தடை, காலதாமத திருமணம், திருமணத்திற்கு பின் கருத்து வேறுபாடு ஆகியவற்றை உண்டாக்கும்.

5ஆம் இடத்தில் சனி இருக்க புத்திர பாக்கியத்தை தடை படுத்தும் அல்லது புத்திரர்களால் மன அமைதி குலையும் அல்லது தகுதி குறைவான புத்திரர்கள் கிடைப்பார்கள். ஜாதகருக்கு புத்திகூர்மை இருக்காது. 5ல் அமர்ந்து 3ஆம் பார்வையாக 7ஆம் இடத்தை பார்ப்பதால் திருமண தாமதம் ஏற்படுத்தும்.

7ஆம் இடத்தில சனி அமர்ந்திருக்க நிச்சயமாக காலதாமதமான திருமணத்தை ஏற்படுத்தும். தன்னை விட வயதில் அதிகமான பெண்ணை திருமணம் செய்ய கூடும். 3ஆம் பார்வையாக 9ஆம் இடத்தை பார்ப்பதால் பாக்கியம் குறையும். அதிர்ஷ்டம குறைவாக இருக்கும். 10ஆம் பார்வையாக 4ஆம் இடத்தை பார்ப்பதால் ஆரோக்கிய குறைபாடு ஏற்படும்.

8ஆம் இடத்தில் சனி இருக்க திருமணத்தடை, திருமண தாமதம், கால தாமதமான திருமணத்தை உண்டாக்கும். 3ஆம் பார்வையாக 10ஆம் இடத்தை பார்ப்பதால் தொழில் மந்தமான நிலை உண்டாகும். 7ஆம் பார்வையாக 2ஆம் இடத்தை பார்ப்பதால் நினைத்த அளவில் வருமானம் கிடைக்காது. வருமானத்திற்காக அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். 10ஆம் பார்வையாக 5ஆம் இடத்தை பார்ப்பதால் புத்திரர்களால் நிம்மதியற்ற நிலை உண்டாகும்.

12ல் சனி இருக்க இல்லற சுகத்தில் தடை உண்டாகும். விரக்தி நிலை ஏற்பட்டு துறவு வாழ்க்கையில் விருப்பம் ஏற்படும். 3ஆம் பார்வையாக 2ஆம் இடத்தை பார்ப்பதால் வருமானம் கிடைக்க அதிகமாக அளவு உழைக்க வேண்டும். 7ஆம் பார்வையாக 6ஆம் இடத்தை பார்ப்பதால் உடல் ஆரோக்கியம் உண்டாகும். 10ஆம் பார்வையாக 9ஆம் இடத்தை பார்ப்பதால் ஜாதகருக்கு பாக்கியம் குறைவு ஏற்படும்.

சனி தோஷம் பரிகாரம், நிவர்த்தி

சனி தோஷத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விடுபட சனி கிழமைகளில் நவக்கிரகத்தில் உள்ள சனி பகவானுக்கு எள்ளு விளக்கு அல்லது நல்லெணெய்யில் தீபம் ஏற்றுவது நன்மையை தரும்.

சனி கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு சிறப்பை தரும்.

சனி கிழமைகளில் காக்கைக்கு எள்ளு சாதம் வைப்பது நன்மையை தரும்.

கால பைரவர் சனி பகவானின் குரு என்பதால் சனி தோஷம் நீங்க சனி கிழமை மற்றும் அஷ்டமி தினத்தில் கால பைரவர் வழிபாடு செய்வது நல்லது.

திருநள்ளாறு, கஞ்சனுர் சென்று இறைவனை வழிபட்டு வருவது தோஷத்தை குறைத்து நன்மையை தரும்.

சனி தோஷம் நீங்க மலைமேல் அமர்ந்திருக்கும் முருகன் கோயில் சென்று வழிபட்டு வருவது நல்லது.

Read More:

 

You may also like...