Skip to content
Home » ஜோதிடம் » காதல் திருமண ஜாதக பொருத்தம்

காதல் திருமண ஜாதக பொருத்தம்

காதல் திருமண ஜாதக அமைப்பு | Love Marriage Jathaka Porutham – ஒரு ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து 2,5,7 மற்றும் 11ஆம் பாவகாதிபதிகள் ஒருவருக்கொருவர் தொடர்பு பெற்றிருந்தால் நிச்சயம் அவர்களுடைய காதல் திருமணத்தில் முடிய வாய்ப்புள்ளது. இதில் முக்கியமாக நாம் பார்க்க வேண்டியது 5,7,11ஆம் இடம்.

காதல் திருமண ஜாதக பொருத்தம்
காதல் திருமண ஜாதக பொருத்தம்

5ஆம் பாவம் காதல், 7ஆம் பாவம் களத்திரம் மற்றும் 11 ஆம் பாவம் வெற்றியை குறிக்கும். இந்த அமைப்பு உள்ள ஜாதகரின் காதல் வெற்றியில் முடிய வாய்ப்பு அதிகம். மேற்கூறிய பதிவில் 2ஆம் பாவத்தையும் சேர்த்துள்ளோம் ஏனெனில் 2ஆம் இடம் குடும்பத்தையும், வருமானத்தையும் குறிக்கும்.

இதே 5ஆம் பாவம் மற்றும் 7ஆம் பாவம் தொடர்பு மட்டும் இருந்தால் காதல் உருவாகும் அனால் திருமணத்தில் முடிய வாய்ப்புகள் குறைவு.

உதாரணமாக மேஷ லக்னதிற்கு 5ஆம் பாவம் சிம்மம் அதற்கு அதிபதி சூரியன் ஆவார் அதே போல 7ஆம் பாவம் துலாம் அதற்கு அதிபதி சுக்கிரன், இப்பொழுது சூரியன் துலாமில் இருக்க காதல் உண்டு அல்லது சுக்கிரன் சிம்மத்தில் இருந்தாலும் காதல் உண்டு.

மேற்கூறிய எடுத்துக்காட்டில் சூரியன் துலாம் ராசியில் இருக்க விசாகம் நட்சத்திர சாரம் வாங்கியுள்ளது என வைத்துக்கொள்வோம். விசாக நட்சத்திரத்தின் அதிபதி குரு ஆவார். அவர் மேஷ லக்கினத்திற்கு 11ஆம் வீட்டில் இருந்தால் காதல் வெற்றி பெற்று திருமணத்தில் முடியும். ஏனென்றால் இங்கு 5,7,11ஆம் பாவங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு பெற்றுள்ளன.

இவ்வாறு ஒருவர் ஜாதகத்தில் 5,7,11ஆம் பாவம் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு பெற்றிருந்தால் காதல் திருமணம் நடைபெறும். (தொடர்பு, நட்சத்திர தொடர்பு, சாரநாதன் தொடர்பு)

காதல் திருமண ஜாதக பொருத்தம் – Love Marriage Jathaka Porutham

காதல் திருமணம் செய்கிறார்கள் எனில் பொருத்தம் பார்க்கும்பொழுது இருவரின் ஜாதத்தையும் பாவக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதில் முக்கியமாக 5ஆம் பாவக ஆய்வு மற்றும் 2, 11ஆம் பாவக ஆய்வு முக்கியம்.

ஏனெனில் 5ஆம் பாவகம் குழந்தையை குறிக்கும் ஒருவருக்கு பலமிழந்து ஒருவருக்கு பலமாக இருந்தால் கூட திருமணம் செய்யலாம். இருவருக்கும் பலமாக இருந்தால் நல்லது. இருவருக்கும் பலமிழந்து இருந்தால் கடினம்.

மற்றும் 2,11ஆம் பாவகங்களும் கூட இருவரில் ஒருவருக்காவது நன்றாக இருக்க வேண்டும். இந்த இரண்டு பாவகங்களும் வருமானம் மற்றும் லாபத்தை குறிக்கும். திருமணம் பின்பு குடும்பத்தை நடத்த பொருளாதார பிரச்சனைகள் இல்லாமல் இருப்பதற்காக கூறுகிறேன்.

சில நேரங்களில் காதலிக்கும் இருவரும் ஒரே நட்சத்திரத்தில் இருந்தால் திருமணம் செய்யலாமா? என்ற சந்தேகம் வரும் சில நட்சத்திரங்களுக்கு நம் முன்னோர்கள் அவர்களுடைய நூல்களில் விதிவிலக்கு அளித்துள்ளனர் அதனை ஏக நட்சத்திர திருமண பொருத்தம் பதிவில் சென்று பார்க்கவும். இருப்பினும் நடைமுறையில் இவர்களின் திருமண வாழ்க்கை சிக்கலாகவே உள்ளது.

கேள்வி பதில்கள்

காதல் திருமணத்திற்கு ரஜ்ஜு பொருத்தம்(Rajju porutham for love marriage in Tamil) எவ்வளவு முக்கியம்?

காதல் திருமணமாக இருந்தாலும் சரி வீட்டில் பார்த்து செய்து வைக்கும் திருமணமாக இருந்தாலும் ரஜ்ஜு பொருத்தம் ரொம்ப முக்கியம். நம் முன்னோர்கள் நூல்களில் சில நட்சத்திரங்களுக்கு ரஜ்ஜு பொருத்தம் இல்லையென்றாலும் திருமணம் செய்யலாம் என்று கூறியுள்ளார் அதனை பற்றி ஏக நட்சத்திரம் திருமண பொருத்தம் கிளிக் செய்யவும். என்ற தலைப்பில் தெளிவாக பதிவிட்டுள்ளேன் சென்று பார்க்கவும்.

ரஜ்ஜு வகைகள் யாவை?

இரஜ்ஜு ஐந்து வகைப்படும்.
1) சிரோரச்சு
2) கண்டரச்சு
3) உதாரரச்சு
4) ஊருரச்சு
5) பாதரச்சு

ஒரே ரஜ்ஜுவாக இருந்தால் திருமணம் செய்யலாமா?(Rajju Porutham for Love Marriage in Tamil)

ஒரே ரஜ்ஜுவாக இருந்தாலும் ஆரோகணம் ரஜ்ஜு மற்றும் அவரோகணம் ரஜ்ஜுவாக இருந்தால் செய்யலாம் உதாரணமாக. ஆண் மற்றும் பெண் ஒரே ரஜ்ஜுவான பாத ரஜ்ஜுவில்(அசுவினி, மகம், மூலம், ஆயில்யம், கேட்டை, ரேவதி) நட்சத்திரங்கள் இருக்கின்றன என வைத்துக்கொள்வோம். அதில் ஒருவர் ஆரோகணம், மற்றோருவர் அவரோகணம் ரஜ்ஜுவாக இருந்தால் பொருத்தம் செய்யலாம்.
எ.கா
ஆரோகணம் – அசுவினி, மகம், மூலம்
அவரோகணம் – ஆயில்யம், கேட்டை, ரேவதி

Read More:-

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்