காதல் கனவு பலன்கள்

Love Kanavu Palangal in Tamil – இந்த பதிவில் காதல் கனவு பலன்கள்(Kadhal Kanavu Palangal) பற்றி சாஸ்திரங்கள்/பெரியோர்கள் என்ன கூறியிருக்கிறார்கள் என்று பார்ப்போம். மற்ற கனவுகளை விட காதல் கனவுகள் வருகையில் நமக்கு இனம் புரியாத சந்தோஷமும் சங்கடங்களும் தோன்றும். ஏனென்றால், இது உங்கள் கடந்தகால அனுபவங்களுடன், குறிப்பாக உங்கள் முன்னாள் கூட்டாளருடன் அல்லது நினைத்த பெண் அல்லது ஆணுடன் இணைத்து ஏதாவது சமீபத்தில் நடந்திருக்க வேண்டும் என்பதை இது குறிக்கிறது. (Video – காதல் பற்றிய கனவுகள் கண்டால் என்ன பலன்கள்)

காதல் கனவு பலன்கள்

காதல் கனவு பலன்கள்

ஒரு சூழ்நிலை கடந்த காலத்தை உங்களுக்கு நினைவூட்டினால், உங்கள் ஆழ் மனதில் கடந்த கால சம்பவங்களிலிருந்து கூறுகளை எடுத்து சம்பந்தப்பட்ட ஒரு கனவாக மாறும். கீழ் வரும் பதிவில் காதல் கனவு பலன்கள் பற்றி விரிவாக பார்ப்போம்.

காதல் கனவு பலன்கள் – Kadhal Kanavu Palangal

உங்கள் உள்ளத்தில் காதல் தோன்றுவது போல் கனவு கண்டால் சமூகத்தில் அந்தஸ்து உயரும், எதிரிகளும் ஏற்படுவார்கள். வீண் பழி உண்டாகி மறைந்து விடும்.

உங்கள் காதனோடு நீங்கள் உல்லாசமாக பொழுது போக்குவதுபோல் கனவு கண்டால் ஆசைகள் நிறைவேறும், திருமணச் செய்திகள் வரும். சில தடங்கல்கள் ஏற்பட்டு திருமணம் நடைபெறும்.

முன்னாள் மனைவி அல்லது முன்னாள் காதலியுடன் உடலுறவு கொள்வது போல கனவு கண்டால், அந்த உறவு முடிவு பெற போகின்றது என்று பொருள்.

நீங்கள் காதலில் தோல்வியுற்றது போல் கனவு கண்டால் சில மறைமுகமான எதிரிகள் உங்களுக்குத் தொல்லை கொடுத்து வருகிறார்கள் என்று பொருள். இறைபக்தி உங்கள் தொல்லைகளை தீர்த்துவிடும்.

காதலனிடமோ அல்லது காதலியிடமோ காதலை சொல்வது போல கனவு வந்தால் உங்களின் வேலைகள் வெற்றிகரமாக முடிய போகிறது என்று அர்த்தம்.

நீங்கள் உங்கள் மனைவியுடன் தேன்நிலவை அனுபவித்துக் கொண்டிருப்பது போல் கனவு கண்டால் நண்பர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படும்.

அழகான பெண் உங்களை நோக்கி வருவது போல் கனவு கண்டால் தனலாபம் ஏற்பட போகிறது என்று பொருள்.

பல பெண்களுக்கு நடுவில் நீங்கள் ஒரு பேரழிகயாக விளங்குவது போல் கனவு கண்டால் உங்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். மனதுக்கு பிடித்த கணவனை அடைவீர்கள்.

உங்கள் காதலி அல்லாத வேறு இளம் பெண்களுடன் நீங்கள் காதல் பேச்சுகளைப் பேசுவது போல் கனவு கண்டால் பல இழப்புகளுக்கு ஆளாக நேரிடலாம்.

நீங்கள் ஓர் இளம் பெண்ணின் அந்தரங்க அறைக்குள் நுழைவது போல் கனவு கண்டால் உங்கள் குடும்பத்தில் எவருமே ஈடுபடாத ஒரு பதிய துறையில் நீங்கள் ஈடுபடப் போகிறீர்கள் என்று பொருள்.

Read More: –

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்

You may also like...