Skip to content
Home » ஜோதிடம் » கண பொருத்தம் எப்படி பார்ப்பது?

கண பொருத்தம் எப்படி பார்ப்பது?

கணப்பொருத்தம் என்றால் என்ன? – திருமண பொருத்தம் பார்க்கும்பொழுது 10 முக்கிய பொருத்தங்களில் ஒன்றாக கண பொருத்தம்(Gana Porutham in Tamil) பார்க்கப் படுகிறது. தம்பதிகளின் குண ஒற்றுமைக்காக பார்க்கப்படுகிறது. கணப் பொருத்தம் மூன்று வகைகளில் தேவகணம், மனித கணம், ராட்சச கணம் என்று வகைப்படுத்தப் பட்டுள்ளது.

மேலும் திருமண பொருத்தம் பார்க்கும்பொழுது எவ்வாறு அதனை பயன்படுத்துவது என்றும் தெரிந்து கொள்வோம்.

கண பொருத்தம் பார்ப்பது எப்படி?

கணப் பொருத்தத்தில் 3 வகையான அமைப்புகள் உள்ளன. அவை தேவகணம், மனித கணம், ராட்சச கணம் என்று வகைப்படுத்தப் பட்டுள்ளது. அதன் பொருத்தம் விவரத்தினை பார்ப்போம்

பெண்ணும், மாப்பிள்ளையும் ஒரே கணமாக இருந்தால் நலம்.
பெண் மனித கணமும், மாப்பிள்ளை மனித கணமானால் நலம்.
பெண் தேவ கணமும், மாப்பிள்ளை தேவ கணமானால் நலம்.
பெண் ராட்சஸ கணமும், மாப்பிள்ளை ராட்சஸ கணமானால் நலம்.

பெண் தேவ கணமும், மாப்பிள்ளை மனித கணமானால் மத்திமம்.
பெண் தேவ கணமும், மாப்பிள்ளை ராட்சஷ கணமானால் அதமம்.
பெண் மனித கணமும், மாப்பிள்ளை ராட்சஷ கணமானால் அதமா அதமம் – பொருந்தவே பொருந்தாது.
பெண் ராட்சஷ கணமும், புருஷன் மனித கணமானால் பொருந்தாது.

தேவ கணம், மனித கணம், ராட்சச கணம் நட்சத்திரங்கள் எவை எவை என்று பார்ப்போம்.

கண பொருத்தம்
கண பொருத்தம்

தேவ கணம்

அசுவினி, மிருகசீரிஷம், புனர்வசு, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி

மனித கணம்

பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், பூராடம், பூரட்டாதி, உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி

ராட்சஷ கணம்

கார்த்திகை, மகம், விசாகம், சதயம், ஆயில்யம், அவிட்டம், சித்திரை, கேட்டை, மூலம்.

Read More:-

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்