கடவுள் கனவு பலன்கள் – God Kanavu Palangal in Tamil – பொதுவாக எந்த தெய்வத்தை கனவில் கண்டாலும் நமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் விலகும். எல்லா பிரச்சனைகளிளிருந்தும் வெற்றி கொள்ளும் சக்தி கிடைக்கும். இந்த பதிவில் கடவுள் கனவில் வந்தால் என்று விரிபாக பார்ப்போம்.
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | ஜோதிட தகவல்கள் | Learn Basic Astrology | நாலடியார் பாடல்கள் மற்றும் விளக்கம் | கனவு பலன்கள்
கடவுள் கனவு பலன்கள் – Kadavul Kanavu Palangal
கனவில் கோயிலை கண்டால் அந்த இறைவனின் அருளால் நினைத்த காரியங்கள் விரைவில் நடந்து முடியும்.
கோவிலுக்குள் செல்ல முடியாமல் கூட்டத்தில் மாட்டிக் கொள்வது போல் கனவு வந்தால்,சில எதிர்பார்க்காத பிரச்சனையில் சிக்கிக்கொண்டு கஷ்டபடுவீர்கள் என்று பொருள்.
நாம் கோயிலின் வாசலை திறந்துவுடனே உள்ளே செல்வது போல் கனவு கண்டால் புதிய முயற்சிகளில் வெற்றி அடைய போகிறோம் என்று பொருள்.
நாம் கடவுளுக்கு மாலை அணிவிப்பது போல கனவு கண்டால் வாழ்க்கையில் நல்ல வளர்ச்சியை அடைய போகிறோம் என்று பொருள்.
கோயில் கோபுரத்தை கனவில் கண்டால் வாழ்க்கையில் முன்னேற போகிறோம் மற்றும் நம்முடைய கடந்த கால பாவங்கள் விலகுகிறது என்றும் அர்த்தம்.
கோயிலில் பிரசாதத்தைப் வாங்குவது போல் கனவு கண்டால் நமக்கு நெருங்கிய சிலரால் மனகவலைகள் ஏற்படும்.
கோயில் குளத்தை கனவில் கண்டால் நாம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.
கடவுளிடம் நாம் பேசுவது போல் கனவு கண்டால் மிகவும் நல்லது, இது விரைவில் நாம் வாழ்வில் பெரும் பாக்கியத்தையும் முன்னேற்றத்தையும் தரும்.
சிவலிங்கம் கனவில் வந்தால் நீங்கள் தினமும் தியானம் செய்யும் பழக்கத்தை மேற்கொள்ள கரிய சித்தி உண்டாகும். மேலும் இறைவன் சிவன் அருள் பரிபூரணமாக உள்ளது என்று பொருள்.
மகாவிஷ்ணுவை எந்த கோலத்தில் கனவில் கண்டாலும் செல்வ செழிப்பு ஏற்படும் என்று அர்த்தம்.
மகாவிஷ்ணு கருடன் மீது அமர்ந்து வருவது போல கனவு கண்டால், வழக்குகள் சாதகமாக முடியும் என்று பொருள்.
பெருமாள் கனவில் வந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் அமைய இருப்பதை குறிக்கும்.
மகாலட்சுமி தாயாரை கனவில் கண்டால் செல்வம் சேரும், திருமணம் கைகூடும்.
இயேசுவை கனவில் கண்டால் மனதில் அமைதி ஏற்படும்.
இயேசுவை சிலுவையில் அறைவது போல கனவு வந்தால் துன்பம் ஏற்படும். ஆனால் அந்த சூழ்நிலை விரைவில் மாறும்.
காளி தேவி கனவில் வந்தால் குடும்பத்தில் தேவையற்ற சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு பின்பு விலகும். கோயில் சென்று காளி தேவியை வழிபடுவது நல்லது.
கடவுள் விக்கிரகம் கனவில் வந்தால் அந்த கடவுளை கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வது உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் நன்மை பயக்கும்.
கோயில் மணியை கனவில் கண்டால் நாம் மனதில் நினைத்த காரியம் நிறைவேறும்.
கோயில் மணி அடிப்பது போல கனவு வந்தால் பொருள் வரவுகள் உண்டு.
கோயில் மணி அறுந்து விழுவது போல கனவு வந்தால் செய்யும் காரியங்களில் தடைகள் ஏற்படும்.
Read More:- கோயில் கனவு பலன்கள்
கனவில் கோயில் மணியோசையை கேட்டால் குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைச் செல்வம் கிடைக்கும்.
ஐய்யனார் தெய்வம் கனவில் வந்தால் சகல சம்பத்தும் கிட்டும்.
நவகிரகங்கள் கனவில் வந்தால் அருகில் உள்ள நவகிரக கோவிலுக்கு சென்று ஒன்பது முறை நவகிரகங்களை சுற்றி வலம் வர வேண்டும்.
விநாயகர் கனவில் வந்தால் உங்கள் வாழ்வில் இதுவரை ஏற்பட்ட எல்லா பிரச்சனைகளும் விரைவில் சுபமாகும்.
யானை உங்களை துரத்துவது போல கனவு கண்டால் நீங்கள் விநாயகருக்கு நேர்த்தி கடன் பாக்கி வைத்துள்ளீர்கள் என்று பொருள்.
யானை உங்களை ஆசீர்வாதம் செய்வது போல கனவு வந்தால் நீங்கள் செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றியுடன் நிறைவடையும் என்று பொருள்.
முருகன் கனவில் வந்தால் எல்லா விதமான தோஷமும் நீங்கிவிடும். உங்களுக்கு இனி நடப்பது எல்லாமே நல்லதாகவே நடக்கும்.
சிவனை கனவில் கண்டால் செல்வ வளம் பெருகும்.
மகாலட்சுமி தாயாரை கனவில் கண்டால் செல்வம் சேரும், திருமணம் கைகூடும்.
சனி பகவானை கனவில் கண்டால் வாழ்க்கையில் ஒரு வகையான புரிதல் ஏற்படும்.
திருச்செந்தூர் முருகனை கனவில் கண்டால் தொடங்கிய காரியத்தில் வெற்றி உண்டாகும். பகைவர் விலகுவார்கள்.
காளி அம்மன் சிலையை கனவில் கண்டால் எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும்.
பெருமாள் கனவில் வந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் அமைய இருப்பதை குறிக்கும்.
திருப்பதி பெருமாளை கனவில் கண்டால் கடினமான சூழலில் இருந்து முன்னேறி நல்ல வாழ்வை பெறுவீர்கள் என்று பொருள்.
அம்பாள்/அம்மன் கனவில் வந்தால் அவளின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைத்துவிட்டது என்று பொருள்.
அம்பாள்/அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்வது போல கனவு கண்டால் எந்த தீமையும் நம்மை அண்டாது.
நாம் திருநீறு பூசிக்கொள்வது போல கனவு வந்தால் நல்ல ஞானம் பிறக்கும்.
சிதிலமடைந்த கோவிலை கனவில் கண்டால் செய்யும் செயல்களில் தோல்வியும், பொருள் நஷ்டமும் ஏற்படும்.
கோயிலில் இறைவனை கும்பிடுவது போல கனவு வந்தால் நாம் செய்யும் செயல்களில் முதலில் சில இடர்பாடுகள் ஏற்படும். ஆனால் தெய்வ அருளால் எல்லாம் நன்மையாகவே முடியும்.
கருப்பசாமி சிலையை கனவில் கண்டால் நமக்கு உள்ள எதிர்ப்புகள் விலகும்.
கோயிலுக்கு சென்று விட்டு இறைவனை தரிசிக்க முடியாமல் திரும்புவது போல் கனவு கண்டால் உங்களுக்கு தீராத பிரச்சினை ஒன்று காத்திருக்கின்றது என்று பொருள்.
கடவுள் உங்களிடம் பேசுவது போல கனவு வந்தால் இந்த ஜென்ம புண்ணியத்தை நீங்கள் அடைந்ததாக அர்த்தம்.
Read More:-
- கிணறு கனவு பலன்கள்
- இரத்தம் கனவு பலன்கள்
- திருமண கனவு பலன்கள்
- பசு மாடு கனவு பலன்கள்
- நீர் கனவு பலன்கள்
- இறந்தவர்கள் கனவு பலன்கள்
- பாம்பு கனவு பலன்கள்
- நாய் கனவு பலன்கள்
- குழந்தை கனவு பலன்கள்
- Video – திருமணம் கனவு பலன்கள் | கடவுள் சம்பந்தமான கனவு கண்டால் என்ன பலன்
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்