ஏக ராசி ஏக நட்சத்திரம் திருமண பொருத்தம் – நம் முன்னோர்கள் ஏக நட்சத்திரத்தில் திருமண பொருத்தம் பார்க்கும்பொழுது பெண் ஜாதகத்திற்கு ஆண் ஜாதகத்திற்கும் தசவித பொருத்தங்கள் பார்த்து பொருத்தம் செய்கின்றனர். இதில் ஏக நட்சத்திரங்கள் வந்தால் பொருத்தம் செய்வதில்லை ஏனெனில், அவர்களுக்கு ஒரே திசா அல்லது புத்தி ஏற்படும் மற்றும் ஒரே ரஜ்ஜு வாக இருப்பார்கள். ஆதலால் பொருத்தம் செய்வதில்லைல். மேலும், ஒரே ராசி ஒரே லக்னம் திருமணம் செய்யலாமா? என்று பார்ப்போம்.
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | ஜோதிட தகவல்கள் | Learn Basic Astrology | நாலடியார் பாடல்கள் மற்றும் விளக்கம் | கனவு பலன்கள்
ஏக நட்சத்திரம் பொருத்தம் என்றால் என்ன?
ஏக நட்சத்திரம் என்பது ஆண் மற்றும் பெண் இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக இருப்பது ஆகும். உதாரணமாக பெண் நட்சத்திரம் ஆயில்யம் என்று வைத்துக்கொள்வோம். ஆண் நட்சத்திரமும் ஆயில்யம் என்று இருந்தால் ஏக நட்சத்திரம் ஆகும். இது போன்று பொருத்தம் செய்யக் கூடாது. ஜோதிடர்கள் இதனை பொருத்தம் செய்ய மாட்டார்கள்.
ஏக நட்சத்திரம் திருமண பொருத்தம் உள்ளவை
இருப்பினும் நம் முன்னோர்கள் பல ஆய்வுகளின் அடிப்படையில் சில நட்சத்திரங்கள் ஏக நட்சத்திரம் என்றாலும் பொருத்தம் சேர்க்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர். அவைகளை பார்ப்போம்.
உத்தம பலன் உள்ள ஏக நட்சத்திரங்கள்
ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், ஹஸ்தம், திருவோணம், இந்த 6 நட்சத்திரங்களும் ஒரே நட்சத்திரமாக இருந்தாலும் உத்தமம் என்று முன்னோர்கள் கூறுகின்றனர். இதனை பொருத்தி திருமணம் செய்யலாம்
மத்திம பலன் உள்ள ஏக நட்சத்திரங்கள்
அஸ்வினி, கார்த்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம், உத்திரம், சித்திரை, அனுஷம், பூராடம், உத்திராடம், இந்த 10 நட்சத்திரங்களும் மத்திமமான பொருத்தம் உள்ள நட்சத்திரங்கள் ஆகும். இவைகளை இணைக்கலாம் என்றும் முன்னோர்கள் கூறுகின்றனர்.
மற்ற நட்சத்திரங்கள் எதற்கும் ஏக நட்சத்திரம் பொருத்தம் இல்லை, தவிர்ப்பது நல்லது.
ஏக நட்சத்திரத்தால் ஏற்படும் பிரச்சனைகள்.
பெண், ஆண் இருவருக்கும் ஒரே திசா மற்றும் ஒரே ரஜ்ஜுவாக இருப்பதால் பிரச்சனைகள் உண்டாகும். நட்சத்திர பொருத்தம் என்பது உடல் சார்ந்த விஷயங்கள். என்னுடைய அனுபவத்தில் முன்னோர்கள் கூறியிருந்தாலும் பொருந்தும் மற்றும் பொருந்தாத அனைத்து ஏக நட்சத்திர திருமணங்கள் செய்தவர்களுக்கு பெரும்பாலும் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை.
நன்றி வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !
கேள்வி பதில்கள்
ஒரே ராசி ஒரே லக்னம் திருமணம் செய்யலாமா?
ஒரே ராசி ஒரே லக்கினம் திருமணம் செய்யலாம் இருப்பினும் திசா சந்தி இல்லாமலும் ரஜ்ஜு யோனி பொருத்தம் இருக்க வேண்டும். மேலும் இவருடைய கட்ட பொருத்தம் பார்த்து முடிவு எடுக்க வேண்டும்.
திருமணம் செய்ய கூடாத நட்சத்திரம் எவை?
ஏற்கெனவே வேறு பதிவில் சேரக்கூடாது நட்சத்திரங்கள் பற்றி தெளிவாக கூறியுள்ளோம் லிங்க் ஐ கிளிக் செய்யவும். Star Matching Table for Marriage in Tamil
திருமணம் செய்ய உகந்த நட்சத்திரம் எவை?
ஏக நட்சத்திரமாக இருந்து பொருந்தும் நட்சத்திரங்கள் ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், ஹஸ்தம், திருவோணம். மற்றபடி பொதுவாக என்றால் இந்த லிங்க் ஐ கிளிக் செய்யயவும். Star Matching Table for Marriage in Tamil
எத்தனை பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்?
அனுபவத்தில் 5க்கு மேல் இருந்தால் நல்லது. அதுமட்டும் போதாது இவருடைய ஜாதக பாவக ஆய்வும் மேற்கொண்டு திருமணம் முடித்தல் நல்லது.
திருமண நட்சத்திர பொருத்தம் பார்ப்பது எப்படி?
திருமண நட்சத்திர பொருத்தம் தெரிந்து கொள்ள இந்த லிங்க் ஐ கிளிக் செய்யவும். திருமண பொருத்தம்
நட்சத்திர பொருத்தம் பார்ப்பது எப்படி?
திருமண பொருத்தத்தில் தசவித பொருத்தங்கள் உள்ளன. அவை
1) Dina Porutham,
2) Gana Porutham,
3) Mahendra Porutham,
4) Sthree Deergam,
5) Yoni Porutham,
6) Rasi Porutham,
7) Rasi Athipathi Porutham,
8) Vasya Porutham,
9) Rajju Porutham,
10) Vedai Porutham ஆகும்.
இவைகளை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள இந்த லிங்க் ஐ கிளிக் செய்யவும். 10 திருமண பொருத்தம்
பொருந்தாத நட்சத்திரங்கள் எவ்வாறு பார்ப்பது ?
ஏற்கெனவே வேறு பதிவில் சேரக்கூடாது நட்சத்திரங்கள் பற்றி தெளிவாக கூறியுள்ளோம் லிங்க் ஐ கிளிக் செய்யவும். சேரக்கூடாத நட்சத்திரங்கள்
ஏகராசி ஏக நட்சத்திரம் பொருத்தம் செய்யலாமா?
இந்த பதிவில் மேலே நாங்கள் குறிப்பிட்டுள்ளோம் ஏக நட்சத்திரம் உத்தம பொருத்தம் உள்ளவை மற்றும் மத்திம பொருத்தம் உள்ளவை அதனை ஏற்படும் பிரச்சனைகள் என்று அதனை தெளிவாக படித்து பயன் பெறவும். நன்றி
Read More:-
- திருமண பொருத்தம்
- நட்சத்திர பொருத்தம்
- ராசி பொருத்தம் விளக்கம்
- மகேந்திர பொருத்தம்
- யோனி பொருத்தம்
- ராகு கேது தோஷ திருமண பொருத்தம்
- Read All Astrology Articles in English
- Video: அடிப்படை ஜோதிடம் கற்க
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்