Body Heat Reduce Foods in Tamil – இந்த பதிவில் உடல் சூட்டிற்கு பாட்டி வைத்தியம் பார்ப்பது எப்படி என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளதை பார்ப்போம்.
உடல் சூட்டிற்கு பாட்டி வைத்தியம்
விஷ்ணுகிராந்தி இலைகளை எடுத்து அதனுடன் சிறிது பசும்பால் சேர்த்து அரைத்து கலக்கி குடித்தால், எலும்புக்குள்ளே உள்ள காங்கை (வெப்பம்) குறையும்.
காட்டு கொத்தவரை இலைச்சாறை சிறிது நல்லெண்ணெயில் கலந்து உட்கொண்டால் வெட்டை நோய் விரைவாக குணமடையும். இதனை காலையில் மட்டும் பயன்படுத்தவேண்டும். மேலும் மூன்று நாட்களுக்கு மேல் எடுத்துக்கொள்ள கூடாது.
சிறு அம்மான் பச்சரிசி இலையை வேருடன் அப்படியே அரைத்து கொள்ளவேண்டும். அரைத்த பசையை ஒரு சிறு நெல்லிக்காய் அளவு எடுத்து பசும்பாலில் கரைத்து காலை மாலை குடித்து வந்தால், மூன்றே நாட்களில் வெட்டை நோய் தீரும். (கவனம்: இதனை உட்கொள்ளும் தினம் கண்டிப்பாக உணவில் புளி, காரம் சேர்க்க கூடாது )
ஆலம் விழுது தளிரையும், அதன் விதையையும், அரைத்து பசும்பாலில் கலந்து உட்கொண்டால் உடலில் ஏற்பட்டுள்ள வெட்டை , எரிச்சல் போன்றவை குணமாகும்.
ரஸ்தாளி வாழைப்பூவை எடுத்து அதனுடன் தேவையான பசும்பாலை கலந்து இடித்து வடிகட்ட எடுத்துக்கொள்ள வேண்டும். பின் அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து கலந்து குடிக்க வெட்டை சூடு மறையும்.
மூன்று நாட்கள் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். (கவனம்: 3 நாட்களுக்கு பத்தியமாக புளி, காரம் சேர்த்துக்கொள்ள கூடாது )
Read More:
உடலில் ஏற்படும் புண்கள் குணமாக
Video: அம்மா பற்றிய வரிகள்
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்