அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?
அக்னி நட்சத்திரம் என்றால் என்ன? மற்றும் அதன் ஆரம்பம், முடிவு நாள் எப்படி கணக்கிடுவது என்று பார்ப்போம். மேலும் கத்திரி வெயில் என்றாலும் அக்னி நட்சத்திரம்தான். இந்த கால கட்டத்தில் சூரிய ஒளியின் தாக்கம் பூமியை மிக அதிகமாக வந்து சேரும். இதனால் இந்த கால கட்டத்தில் வெப்பம் அதிகமாகும்.

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன
சூரியன் சித்திரை மாதத்தில் மேஷ ராசியில் பரணி 3ஆம் பாதத்தில் பிரவேசித்து ரிஷப ராசி ரோகிணி 1ஆம் பாதம் வரை சஞ்சரிக்க கூடிய காலம் அக்னி நட்சத்திர காலம் ஆகும்.
அக்னி நட்சத்திரம் ஆரம்பம் என்பது சூரியன், பரணி 3ஆம் பாதத்தில் சஞ்சரிப்பது
அக்னி நட்சத்திரம் முடிவு என்பது சூரியன், ரோகிணி 1ஆம் பாதத்திலிருந்து வெளியேறுவது.
அக்னி நட்சத்திரம் போது செய்யக்கூடியவை
உபநயனம் செய்யலாம், விவாகம், யாகங்கள், தர்ம மற்றும் பொது ஸ்தாபன கட்டிடங்கள் அமைக்கலாம்.
அக்னி நட்சத்திரம் போது செய்யக்கூடாதவை
செடி, கொடி வெட்டுதல், நார் உரித்தல், நிலம், வீடு, வாகனம் வாங்குதல் மற்றும் பதிவு செய்தல், விதை விதைத்தல், கிணறு வெட்டுதல், குளம் குட்டை அமைத்தல், குருவிடம் தீட்சை பெறுதல் போன்றவை செய்ய கூடாதவை.
தெரிந்துகொள்க
- Today Hora Timings in Tamil
- 27 நட்சத்திர பாலினம்
- 27 நட்சத்திர-தேவதை
- 27 நட்சத்திர மரங்கள்
- 27 நட்சத்திர பலன்கள்
- நட்சத்திர சின்னம்
- 27 நட்சத்திர விலங்குகள்
- Read All Astrology Articles in English