அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

ஒருவருடைய முகத்தினை நேரிடையாக காணும்பொழுது வசீகரமாக இருப்பதனால் மட்டும் அவர் முகம் அழகானது என்று கூற இயலாது. இயற்கையாக ஒருவரின் முகமானது அவருடைய உள்ளத்தின் பிரதிபலிப்பு ஆகும். எடுத்தக்காட்டாக குழந்தைகளின் முகங்களை பார்க்கும்பொழுது கள்ளங்கபடம் இல்லாத மாசற்ற அக அழகே முகத்தில் வெளிப்படும். ஒருவனது உள்ளத்து உணர்வுகளை அவன் முகமே காட்டி விடும்.

பக்குவப்பட்ட வயது முதியோரின் முகத்தை பார்க்கும்பொழுதும் அவர் செய்யும் செயலையும் குழந்தைத்தனம் என்றே கூறுவோம். இருப்பினும் குழந்தைகளுடன் நாம் முதியோரை ஒப்பிட்டு கூற முடியாது. குழந்தைகள் மனம் பால் போல தூய்மையானது. முதியோர்கள் பக்குவப்பட்டவர்கள்.

‘நாற்பது வயதுக்கு மேல் ஒருவனது முக அழகிற்கு அவனே காரணம்‘ என்கிறார் ஆபிரகாம் லிஙகன்.

எண்ணங்களின் தூய்மை

எண்ணங்கள் தூய்மையாகவும், தெளிவாகவும் இருந்தால் முகத்தில் ஒரு பொலிவு ஏற்படும். பெரிய மகான்களின் முகத்தினை பாருங்கள் எ கா., சுவாமிஜி விவேகானந்தர், வேதாத்திரி மகரிஷி ஐயா ஆகியோர். அவர்கள் முகப்பொலிவு அனைவரையும் அவர்பால் ஈர்த்து விடுகிறது.

இதனையே வள்ளுவர் மகான்,

அடுத்து காட்டும் பளிங்குபோல் – நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.

தனக்கு அடுத்து இருக்கும் பொருளைப் பளிங்கு காட்டுவதுபோல ஒருவன் மனத்தில் இருப்பதை அவனது முகம் காட்டி விடும்.

ஆதலால் ஒப்பனையால் ஒருவர் அழகாகி விட முடியாது. உள்ளத் தூய்மையால் மட்டுமே அனைவராலும் விரும்புகின்ற நேசிக்கின்ற அழகினை பெற முடியும்.

You may also like...