மருத்துவம் – நம்முடைய உடல் ஆரோக்கியத்தை பேணி காப்பது என்பது ஒவ்வொருவருடைய கடமையாகும். அன்றாட உடற்பயிற்சி, யோகா செய்வதன் மூலம் உடலை பாதுகாத்து கொள்ளலாம். மற்றபடி உணவு கட்டுப்பாடு மூலமும் சரி செய்து கொள்ளலாம்.
சில வியாதிகளுக்கு முறையான பாரம்பரிய சிகிச்சை முறைகளும் சித்த மருத்துவம், ஆயுர்வத மருத்துவம், யுனானி மருத்துவம் போன்றவை நல்ல தீர்வை கொடுக்கும்.
அதேபோல, சில வியாதிகளுக்கு ஆங்கில மருத்துவம் மூலம் மட்டுமே சரியான சிகிச்சையை வழங்க முடியும்.
ஆதலால் மக்கள் தெளிவாக அன்றாட உடற்பயிற்சி, நல்ல உணவுகள், சரியான மருத்துவ சிகிச்சை முறையை தேர்ந்துடுத்து ஆரோக்கியத்துடன் வாழ வேண்டிக்கொள்கிறேன்.
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!