வெட்கத்தையும், பயத்தையும் மாற்றி அமைத்தார்!

  இரண்டு தமிழ் படங்களில், பதினான்கு மலையாள படங்களில் நடித்திருந்தாலும் கிடைக்காத அங்கீகாரத்தை, பிரபலத்தை தமிழில் மூன்றாவது படமான “சூரரை போற்று’ நடிகை அபர்ணா பாலமுரளிக்கு தந்திருக்கிறது. “இந்த அங்கீகாரத்திற்கு காரணம் நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சுதா கொங்கராதான்’ என்கிறார் அபர்ணா. 2013-இல் மலையாளத்தில் அறிமுகமான அபர்ணா தமிழில் 2016-இல் “8 தோட்டாக்கள்’ மூலம் காலடி எடுத்து வைத்தார். 2019 -இல் வெளிவந்த “சர்வம் தாள

» Read more

வெற்றி சுலபமாக கிடைத்துவிடவில்லை!

பார்வை குறைபாடு உள்ளவர்கள் முயற்சித்தால், அவர்கள் நினைத்ததை சாதிக்க முடியும். அதற்கான உதவிகளை அளிப்பது முக்கியம் என்ற நோக்கத்தோடு பெங்களூரில் “மித்ர ஜோதி’ என்ற பெயரில் தொண்டு நிறுவனமொன்று செயல்பட்டு வருகிறது. இதன் நிர்வாக அமைப்பாளர் மது சிங்கலும் பார்வை குறைபாடு உள்ளவர்தான். பார்வை குறைபாடு உள்ளவர்கள் கல்வி கற்கவும், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும் கடந்த 30 ஆண்டுகளாக “மித்ரஜோதி’ செயலாற்றி வருகிறது. இதுவரை இதன்மூலம் 13,500 பேர் படித்து

» Read more

சூழலியல்  விருது பெற்ற தமிழக மாணவி!

  திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி வினிஷா உமாசங்கருக்கு ஸ்வீடன் நாட்டின் குழந்தைகளுக்கான சூழலியல் அறக்கட்டளை சார்பில் இளம் வயது கண்டுபிடிப்பாளருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வினிஷா கூறியுள்ளதாவது: “சிறு வயதில் என் அப்பா வாங்கிக் கொடுத்த பொது அறிவுப் புத்தகங்கள் நிறைய படித்து வளர்ந்ததால், அறிவியல் சார்ந்து நிறைய தகவல்களைக் கற்றுக்கொண்டேன். அது முதல் எனக்கு அறிவியலின் மீது ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால்,

» Read more

பெண்களைக் குறிக்கும் பிற பெயர்கள்!

  அணங்கு,  அங்கனை,  அரிவை,  ஆடவள்,  ஆட்டி,  காந்தை,  காரிகை, கோதை, கோதாட்டி, சுந்தரி,  தளிரியல், தெரிவை,  தையல்,  நங்கை,  நல்லாள்,  நாரி,  பாவை,   நுண்ணிடை,  பிணா,  பிரியை,  பூவை,  பெண்டு,  பொதும்பை, பேதை,  மதங்கி, மகடூஉ,  மங்கை,  மடந்தை,  மடவரல்,  மடவோள்,  மாது,  மாயோள்,  மானினி,    வஞ்சனி,  வஞ்சி,  வனிதை,  ஸ்ரீ,விறவி,   யுவதி  Source link

» Read more

சமையல் சமையல்!

  அப்பம்  தேவையானவை:அரிசிமாவு – 1 கிண்ணம்வெல்லப்பொடி –  அரை கிண்ணம் நன்கு கனிந்த வாழைப்பழம் – 1தேங்காய்த் துண்டுகள் – 2 தேக்கரண்டி ஏலக்காய்த் தூள் –  அரை தேக்கரண்டி எண்ணெய் – தேவையான அளவு செய்முறை:   அரை டம்ளர் தண்ணீரில் வெல்லத்தைப் போட்டு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். வாழைப்பழத்தை நன்றாக மசித்துக் கொள்ளவும். அரிசிமாவு, மசித்த வாழைப்பழம், தேங்காய்த் துண்டுகள், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அதில் வெல்ல நீரை

» Read more

குத்துவிளக்கை தரையில் வைத்து ஏற்றலாமா?

அகல் பயன்படுத்தும் முன் தண்ணீரில் நனைத்து காய வைத்து பிறகு விளக்கு ஏற்றினால் எண்ணெய் நிறைய உறிஞ்சாது.  *கார்த்திகைக்கு ஏற்றும் விளக்குகளை காலையிலேயே தேய்த்து ஈரம் போக துடைத்து குங்குமப் போட்டு வைத்து திரி போட்டு எண்ணெய் ஊற்றி வைத்துவிட்டால் மாலையில் விளக்கேற்ற சுலபமாக இருக்கும். *சிறிய சிறிய விளக்குகளை அகலமான ஒரு தாம்பாளத்தில் அல்லது தட்டில் வரிசையாக வட்டமாக வைத்து தீபம் ஏற்றினால் பார்க்க அழகாக

» Read more

தாய்லாந்தில்  கார்த்திகை தீபம் !

காதலின் சின்னமாகவும், தேசிய திருநாளாகவும் தாய்லாந்தில் கார்த்திகைப் பௌர்ணமி நாள் கொண்டாட்டம் நடைபெறுகிறது. இந்தக் கார்த்திகை தீபத் திருவிழாவினை “லாய் கிரதாங்’ என்று அழைக்கிறார்கள். அன்று இரவு முழுவதும் நாடெங்கும் தீப வரிசைகளாக அங்கிங்கெனாதபடி காணும் இடங்களில் எல்லாம் தீப ஒளிகள் நிறைந்து காணப்படும். நமக்கு தீபாவளித் திருநாள் எப்படி மகிழ்ச்சியை அளிக்கிறதோ அப்படி தாய்லாந்து மக்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் பண்டிகை இந்த கார்த்திகை தீபத்திருவிழாதான். பல நூறாண்டுகளுக்கு முன்பே

» Read more

பூசணி விதையின் மருத்துவ மகிமை!

  பூசணி விதை என்றால் மஞ்சள் பூசணியின் விதையை குறிக்கும். பூசணி விதைகளுக்கு எக்கச்சக்க மருத்துவக் குணங்கள் உள்ளன.  பூசணி விதைகளில் உள்ள சத்துகள்: இதில் நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் இ ஆகிய சத்துகள் நிறைவாக உள்ளன. மேலும், மாங்கனீஸ், பாஸ்பரஸ், மக்னீசியம், தாமிரம், துத்தநாகம் ஆகிய அத்தியாவசிய தாதுச்சத்துகள் நிறைவாக உள்ளன. 100 கிராம் பூசணி விதைகளைச் சாப்பிடுவதன் மூலம் 600 கலோரிகளைப் பெறலாம். இவற்றில்

» Read more

குறைந்த முதலீட்டில் லாபம்!

“வீட்டில் இருக்கும் பெண்கள் காலை முதல் மாலை வரை ஏதாவது வேலைகள் செய்து கொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் அவர்களது வேலைகளை திட்டமிட்டு முடித்துவிட்டு ஓய்வு நேரத்தை உருவாக்கிக் கொண்டுதங்களுக்கென்று ஏதேனும் ஒரு வேலையை உருவாக்கிக் கொள்வது மிகவும் அவசியம்’ என்கிறார் சுய தொழில் ஆலோசகர் உமாராஜ். அந்த வகையில் மூலிகை டீ எப்படி தயாரித்து கைத் தொழிலாக்கிக் கொள்ளலாம் என்பதை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்: முருங்கைக் கீரை

» Read more

குமாரி  கமலா

குமாரி கமலாவின், “கொஞ்சும் சலங்கை’ பட நடனத்தை மறக்கவில்லை என்றாலும், அவரை அநேகமாக மறந்தே விட்டோம். தற்போது குமாரிகமலாவுக்கு வயது 87. அமெரிக்காவில் மகனுடன் வசிக்கிறார். கணவர் கார்ட்டூனிஸ்ட் லட்சுமண் உடனான மனமுறிவு ஏற்பட்டு, 1964-இல், ராணுவத்தை சேர்ந்த மேஜர் லட்சுமி நாராயண் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அத்துடன் திரையுலகிலிருந்தும் நிரந்தரமாக விலகினார். 1983-இல் கணவர் இறந்தபின், மகனுடன் அமெரிக்க சென்று நிரந்தரமாக தங்கிவிட்டார். அமெரிக்காவின்

» Read more

கதை சொல்லும் குறள்: அசுரா! – 3

வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த தாழ்ந்த காற்றழுத்த மண்டலம் புயலாக உருக்கொண்டு, பிறகு சூறாவளிக் காற்றாக மாறி தமிழகத்தின் கடலோரப் பகுதிகளைத் தன் கோரப்பிடிக்குள் சிக்கவைத்து சின்னாபின்னமாக்கிக் Source link

» Read more

கதம்பம்!

இந்திய விமானப்படை: முதல் பெண் அதிகாரி! அண்மையில் 96- ஆவது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களுரில் தன்னுடைய மகள் சுகன்யாவின் வீட்டில் காலமான விங் கமாண்டர் (ஓய்வு) விஜயலட்சுமி ரமணன், முதன்முதலாக இந்திய விமானப்படையில் சேர்ந்த பெண் அதிகாரி ஆவார். பிப்ரவரி 27, 1924- ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த விஜயலட்சுமி, 1943- ஆம் ஆண்டு மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து எம்.பி.பி.எஸ் படிக்கும்போது, 1948-ஆம் ஆண்டு சிறந்த

» Read more

சின்னத்திரை மின்னல்கள்!

  மகிழ்ச்சியில் கண்ணம்மா! விஜய் டிவியின் பிரபலமான தொடர்களில் ஒன்று “பாரதி கண்ணம்மா’, இதில் கண்ணம்மாவாக நடித்து வருபவர் ரோஷினி ஹரிப்ரியன். இவர், அறிமுகமான முதல் தொடர் இதுதான். ஆனால், நடிக்க தொடங்கிய சிறிது நாள்களிலேயே ரசிகர்களின் மனதில் தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்டார். இந்த தொடரின் கதைப்படி, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கண்ணம்மா, தனது கணவர் பாரதியை பிரிந்து வீட்டைவிட்டு வெளியே வந்து

» Read more

முகவரி தந்த இயற்கை விவசாயம்!

“”படித்தது அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக பொறியியல் படிப்பு என்றாலும் “இப்போது வாழ்க்கையை படித்துக் கொண்டிருப்பது சேறும் சகதியும் நிறைந்த வயலில், ஆம். இயற்கை முறையில் வேளாண்மை செய்யும் விவசாயி நான்” என்று பெருமை பூக்கச் சொல்லும் அர்ச்சனா இளையதலைமுறைக்கு மட்டுமல்ல நகர்ப்புற சமுதாயத்துக்கும் ஒரு திருப்புமுனையாக மாறியிருக்கிறார். மேலும் அவர் கூறியதாவது: “”பொறியியல் படிப்பை முடித்து கணினி நிறுவனத்தில் பணி புரிந்து வந்தாலும் எங்களது தேடல் வேறு என்பதை புரிந்து

» Read more
1 2 3