கர்ப்ப காலத்தில் பயணம் செய்யலாமா?

கர்ப்ப காலத்தில் பயணம் செய்யலாமா?
கர்ப்ப காலத்தில் பயணம் செய்யலாமா?

கர்ப்ப காலத்தில் பயணம் செய்யலாமா?(travel during pregnancy) – கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் பயணம் மேற்கொண்டால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கை மூலம் தாய்க்கும் குழந்தைக்கும் பாதிப்பு இல்லாமல் பார்த்து கொள்ளலாம்.

கர்ப்பமான முதல் 3 மாதங்களில் தான் கருச்சிதைவு நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆதலால் பெரும்பாலும் பயணங்களை தவிர்ப்பது நல்லது என்பது மருத்துவர்களின் பரிந்துரையாகும்.

கர்ப்ப காலத்தில் பயணம் – வெளிநாடு செல்லும்பொழுது

பல விமான நிறுவனங்கள் 32 வாரங்களுக்கு மேற்பட்ட கர்ப்பிணி பெண்களை அனுமதிப்பதில்லை. இதற்கு காரணம் விமானம் பறக்கும் பொழுது ஏற்படும் காற்றழுத்த மாறுபாடு கற்பத்தினை பாதிக்கலாம் என்பதாலேயே.

ஒருவேளை பயணிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், அந்த பெண் உடை விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். காற்றழுத்தம் சமமாக இல்லாத கேபிள்களை பயணத்தின் போது தேர்வு செய்யக்கூடாது.

கார்களில் பயணிக்கும்போது

பெண்கள் கார்களில் பயணிப்பது அதிக பிரச்சனை இல்லை என்றாலும், நீண்ட தூர பயணத்தை தவிர்ப்பது நல்லது. அதிலும் முதல் மாதம் மிகவும் முக்கியமாகும். மேலும் பயணிக்கும்பொழுது சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அவற்றை காண்போம்.

வெகு தூர பயணம் செய்யும் சூழ்நிலையில் இடையில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். அது அவர்கள் இரத்த ஓட்டத்தை சமமாக வைத்துக்கொள்ளும்.

சீட் பெல்ட் அணியும் பொழுது வயிற்றின் மேற்பகுதியில் அணியக்கூடாது. இடுப்பை சுற்றி அணிய வேண்டும்.

நீண்ட தூரம் செல்லுமுன்பே மருத்துவரிடம் சென்று பயணத்தை பற்றி ஆலோசனை கேட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வெளிநாட்டு பயணம் செய்தல் மருத்துவரின் பரிந்துரையில் தடுப்பொசிகளை எடுத்துக்கொள்ளவும்.

நன்றி! வாழ்க வளமுடன் ! வாழ்க வையகம் !

மேலும் காண்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்