தத்துவம் – கல்யாணசுந்தரம்

தத்துவம் – கல்யாணசுந்தரம் எது சொந்தம்! குட்டி ஆடு தப்பிவந்தால் குள்ளநரிக்குச் சொந்தம்! குள்ளநரி மாட்டிகிட்டா கொறவனுக்குச் சொந்தம்! தட்டுக்கெட்ட மனிதர்கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்! சட்டப்படி பார்க்கப்போனால் எட்டடிதான் சொந்தம்! உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம்! உலகத்துக் கெதுதான் சொந்தமடா! (உனக்கு) மனக்கிறுக்கால் நீ உளறுவதாலே வந்தலாபம் மதிமந்தமடா (உனக்கு) கூட்டுலே குஞ்சு பறக்க நினைத்தால் குருவியின் சொந்தம் தீருமடா! ஆட்டுலே குட்டி ஊட்ட மறந்தால் அதோட சொந்தம் மாறுமடா!

» Read more

நகைச்சுவை – கல்யாணசுந்தரம்

குட்டு வௌியாகும் காப்பி ஒண்ணு எட்டணா, கார்டு சைசு பத்தணா! காணவெகு ஜோராயிருக்கும் காமிராவைத் தட்டினா! பிள்ளைக்குட்டி கூட நின்னு பெரிதாகவும் எடுக்கலாம் (பிள்ளை) பிரியம்போல காசு பணம் சலிசாகவும் கொடுக்கலாம் மல்லுக்கட்டி அழைக்கவில்லை, மனமிருந்தால் வந்திடலாம், வயிறெரிந்த பேர்வழிங்க வந்தவழி சென்றிடலாம் தண்டவாளம் விட்டிறங்கி தத்தளிக்கும் எஞ்சினைப்போல் கொண்டவன் தனைமறந்து திண்டாடும் மங்கையரின் குட்டு வௌியாக்கிவிடும் ஸ்டில்லுங்க – கையில் துட்டுயிருந்தா ஸ்டெடியா நில்லுங்க, எந்தப் போஸில் வேணுமென்னாலும்

» Read more

தனிப் பாடல்கள் கல்யாணசுந்தரம்

தனிப் பாடல்கள் கல்யாணசுந்தரம் புதிய ஒளி வீசுது பார்! புதியஒளி வீசுதுபார் இமயம் தாண்டிப் புன்சிரிப்புக் காட்டுதுபார் இன்பம் அங்கே கதைபுனைந்து கூறவில்லை கண்ணில் தோன்றும் காட்சியிவை ரஷ்யாவில் மக்களாட்சி சதிமிகுந்த கொடுங்கோலன் ஜார்முன் மக்கள் கதிஉயரக் காணும்வழி ஏது மின்றி மிதியுண்டார் அராஜகத்தின் மீளாச் சேறில் வெம்பியழுதார் பசியால் வெந்தார் நைந்தார் கொதிக்கின்ற ஏழைமனம் குமுறிற்று ஆனால் கொக்கரிக்கும் ஜார்மன்னன் சிரித்து நின்றான் இதைக்கண்டார் லெனின்,ஸ்டாலின் இன்னும் கண்டார்

» Read more

காதல் சுவை – கல்யாணசுந்தரம் பகுதி 2

இன்ப வேகம் ஆண் : வாடிக்கை மறந்ததும் ஏனோ? – என்னை வாட்டிட ஆசை தானோ – பல கோடி மலரழகை மூடி வைத்து மனதை கொள்ளை யடிப்பதும் ஏனோ? (வாடிக்கை) பெண் : வாடிக்கை மறந்திடுவேனோ? – என்னை வாட்டிடும் கேள்விகள் ஏனோ? – புது மங்கை எந்தன் மனதில்,பொங்கிவரும் நினைவில் மாற்றம் சொல்வதும் ஏனோ? (வாடிக்கை) ஆண் : அந்தி நேரத்தின் ஆனந்தக் காற்றும் அன்பு மணக்கும்

» Read more

காதல் சுவை – கல்யாணசுந்தரம் பகுதி 1

காதல் சுவை – கல்யாணசுந்தரம் பகுதி 1 காதலின் இலக்கணம் ஊரடங்கும் வேளையிலே உள்ளம் கவரும் சோலையிலே-இவ யாருக்காகத் காத்திருந்தா ஏரிக்கரையிலே?-அதுதான் எனக்கும் புரியலே! (ஊரடங்கும்) ஆரணங்கின் மையலிலே அந்தியிளம் வெய்யிலிலே அங்கொருவர் வருவதுண்டு அதையும் சொல்லிவிட முடியலே, இங்கிருக்கும் இவமனசு எங்கே இருக்குதோ தெரியலே? (ஊரடங்கும்) உளறாதே பொன்னம்மா உள்ளதைச் சொன்னா என்னம்மா? கலங்காதே குப்பமா நலுங்கு வைப்பது எப்பம்மா? பழங்காலப் பைத்தியம் உங்கள் இளங்காதல் ஏற்குமா? (ஊரடங்கும்)

» Read more

சிறுவர் சீர்திருத்தம் – கல்யாணசுந்தரம்

சிறுவர் சீர்திருத்தம் வீணர்களின் சொல் சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா (சின்னப்) நான் சொல்லப்போற வார்த்தையை நல்லா எண்ணிப் பாரடா-நீ எண்ணிப் பாரடா சின்னப் ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி (ஆளும்) ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே-நீ தரும் மகிழ்ச்சி (ஆசை) நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி-உன் நரம்போடுதான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி-உன் (நரம்) சின்னப் Amazon Year end offer Mobiles

» Read more

தெய்வம் தேடுதல் – கல்யாணசுந்தரம்

சேவை ஆண் : அறம் காத்த தேவியே! குலம் காத்த தேவியே! அறிவின் உருவமான ஜோதியே கண் பார்த்தருள்வாயே! அன்னையே!அன்னையே! (அறம்) பெண் : ஹே மாதா! என் தாயே! உன் பாதம் நம்பினேன் அம்மா! சத்தியம் லட்சியமாய்ச் சேவை செய்யவே பராசக்தியே நீ வரம் தா! ஆண் : துன்பம் இல்லாமல் எல்லோரும் மனம் ஒன்றுகூடி இன்பம் கொண்டாடும் தினம் நம் மனதில் உறுதியாகவே மலிந்த கொடுமை நீங்கவே-இம்

» Read more

இயற்கை – கல்யாணசுந்தரம்

இயற்கை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போட்டி வேண்டாம் ரோஜா : ஓ….மல்லியக்கா மல்லி : ஏண்டி, ரோஜா அக்கா ரோஜா : மல்லியக்கா மல்லியக்கா எங்கடி போறே? கொஞ்சம் சொல்லடியக்கா எதுக்கு இப்படி குலுக்கி நடக்கிறே? மல்லி : நான்-மணவறையைச் சிங்காரிச்சு வாசனையை அள்ளித் தௌிச்சு வாரவங்க எல்லோரையும் மயக்கப் போறேன் மணப்பொண்ணு கூந்தலிலே மணக்கப் போறேன் ரோஜா : நீ-மணப்பொண்ணு தலையில் மட்டும் மணக்கப்போறே, நான்-மாப்பிள்ளை கழுத்தச்சுத்தி தொங்கப் போறேன்

» Read more

நாட்டு நலம் – கல்யாணசுந்தரம்

வீரன் நாட்டு நலம்: நாட்டுக்கு ஒரு வீரன்!-செஞ்சிக் கோட்டைக்கு அதிகாரன் அந்த நாளில் ஆற்காடு நவாபை எதிர்த்த ராஜா தேசிங்கு கதையை நாம் சொல்வோம் இங்கு: இந்தப்- பாட்டைக் கேட்டால் பரம்பரை நிலைமை பளிச்சுப் பளிச்சுன்னு தெரியும், வேட்டு பீரங்கி கூட்டத்தில் பாய்ந்து வெட்டியவன் கதை விபரம் புரியும்…( நாட்டுக்கு ) துள்ளிப் பாயும் குதிரை ஒன்று டில்லித் துரையிடம் இருந்தது, கொல்லிச் சாரல் கொங்கு பக்கிரி சொல்லிப் பரிசாய்த்

» Read more

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் : அரசியல் அறம்

கல்யாணசுந்தரனார் தமது பத்தொன்பதாவது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர். இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை. பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். கெட்டதை விடுங்கள் சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன் செய்யுறதைச் செஞ்சுடுங்க நல்லதுன்னா கேட்டுக்குங்க கெட்டதுன்னா விட்டுடுங்க முன்னாலே வந்தவங்க என்னென்னமோ சொன்னாங்க மூளையிலே ஏறுமுன்னு முயற்சியும் செஞ்சாங்க ஒண்ணுமே நடக்காம உள்ளம் நொந்து செத்தாங்க என்னாலும் ஆகாதுன்னு எனக்கும் தெரியுமுங்க ( சொல்லு ) முடியிருந்தும் மொட்டைகளாய்

» Read more