தன்மை வினைமுற்று

Digital Marketing Company in Trichy
BSR Solutions - Digital Marketing Company in Trichy

தன்மை வினைமுற்று மற்றும் முன்னிலை வினைமுற்று பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்

தன்மை வினைமுற்று

தன்மை வினைமுற்று, தன்மை ஒருமை வினைமுற்று, தன்மைப் பன்மை வினைமுற்று என,இரு வகைப்படும்.

என், ஏன், அன் என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள், தன்மையொருமைத் தெரிநிலை வினைமுற்று குறிப்பு வினைமுற்றுமாம்.

உதாரணம்.

இ. தெரி. நி. தெரி. யான்
உண்டனென்
உண்டேன்
உண்டனன் உண்கிறனென்
உண்கிறேன்
உண்கிறனன்
எ. தெரி. குறி
உண்குவென்
உண்பேன்
உண்பன் குழையினென்
குழையினேன்
குழையினன்

செய்யுளுளிலே தன்மையொருமைத் தெரிநிலை வினைமுற்றுக்கு இவ்விகுதிகள்களன்றி, ஆல் கு, டு து று என்னும் விகுதிகளும் வழங்கும்.

இவைகளுள், ஆல் விகுதி எதிர்காலவிடைநிலைகளோடு மாத்திரம் வரும். மற்றைநான்கு விகுதிகளும் இடைநிலையின்றி தாமே காலங்காட்டுதல் பதவியளிற் பெறப்பட்டது.

(உதாரணம்)

விகு. இ.தெ. எ.தெ. யான்
அல்
கு
டு
து
று –

உண்டு
வந்து
சென்று உண்பல்
உண்கு

வருது
சேறு

அம், ஆம், எம், ஏம், ஓம் என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள், தன்மைப் பன்மைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினைமுற்றுமாம்.

உதாரணம்.

இ. தெரி. நி. தெரி. யாம்
உண்டனம்
உண்டாம்
உண்டெனம்
உண்டேம்
உண்டோம் உண்கின்றனம்
உண்கின்றாம்
உண்கின்றனெம்
உண்கின்றேம்
உண்கின்றோம்
எ. தெரி. குறி.
உண்பம்
உண்பாம்
உண்பெம்
உண்பேம்
உண்போம் குழையினம்
குழையினாம்
குழையினெம்
குழையினேம்
குழையினோம்

செய்யுளிலே, தன்மைப் பன்மை தெரிநிலை வினைமுற்றுக்கு, இவ் விகுதிகளின்றி, கும், டும், தும், றும் என்னும் விகுதிகளும் வழங்கும் இடைநிலையின்றித் தாமே காலங்காட்டுதல் பதவியலிற் பெறப்பட்டது.

விகு. இ. தெரி. எ. தெரி. யாம்
கும்
டும்
தும்
றும் –
உண்டும்
வந்தும்
சென்றும் உண்கும்

வருதும்
சேறும்

முன்னிலை வினைமுற்று

முன்னிலை வினைமுற்று முன்னிலையொருமை வினைமுற்றும் முன்னிலைப் பன்மை வினைமுற்றுமென இரு வகைப்படும்.

ஐ ஆய் இ என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள் முன்னிலையொருமைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினைமுற்றுமாம்.

உதாரணம்.

இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி. நீ
உண்டனை
உண்டாய்
உண்டி உண்கின்றனை
உண்கின்றாய்
உண்ணாநின்றி உண்பை
உண்பாய்
சேறி குழையினை
குழையாய்
வில்லி

இகரவிகுதி எதிர்காலத்தை இடைநிலையின்றி தானே காட்டுதல் பதவியலிற் பெறப்பட்டது.

இர், ஈர், என்னும் விகுதிகளை இறுதியில் உடைய விசை; சொற்கள். முன்னிலைப் பன்மை தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினைமுற்றுமாம்.

உதாரணம்.

இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி. நீர்
உண்டனிர்
உண்டீர் உண்கின்றனீர்
உண்கின்றீர் உண்பிர்
உண்பீர் குழையினிர்
குழையீர்

எதிர்மறை வினைமுற்று

எதிர்மறை குறிப்பு வினைமுற்றுக்கள், ஆல், இல் என்னும் எதிர்மறைப் பன்படியாக தோன்றிப் பால் காட்டும் விகுதிகளை பெற்று வருவனாவாம்.

உதாரணம்.

படர்க்கை – அல்லன், அல்லள், அல்லர் அன்று அல்ல அல்லனஸ
இலன் இலள் இலர் இன்று இல ஜ இல்லனஸ

தன்மை – அல்லேன் அல்லேம் இலேன் இலேம்

முன்னிலை – அல்லாய் அல்லீர் இலாய் இலீர்

இன்மை என்பது ஒரு பொருளினது உண்மைக்கும் ஒரு பொருளை உடமைக்கு மறுதலை உண்மை உளதாதல்.

உதாரணம்.

உண்மை இன்மை
இங்கே சாத்தனுளன்
இவனிடத்தே அறமுண்டு இங்கே சாத்தானிலன்
இவனிடத்தே அறமின்று

உடமை இன்மை
இவன் பொருளுடையன்
இது குணமுடையது இவன் பொருளிலன்
இது குணமில்லது

அன்மையென்பது ஒரு பொருள் சுட்டியதொரு பொருளாதற்கு மருதலை, பிரிது பொருளாதலைக் காட்டும். என்றபடி

உதாரணம்.

இவன் சாத்தனல்லன்: ஜ கொற்றன் ஸ
இஃதறனன்று: ஜ மறம் ஸ

எதிர்மறத் தெரிநிலை முற்றுக்கள், இல் ஆல், ஆ, என்னும் எதிர்மறையிடைநிலைகளோடு பால் காட்டும் விகுதிகளைப் பெற்று வருவனவாம். இவற்றுள் இல் இடைநிலை இறந்தகால இடைநிலையோடும் விகாரப்டிறந்த காலங்காட்டும் பகுதியோடும். நிகழ்கால விடைநிலையோடும். கூடி வரும். இனி இடைநிலையோடு கூடாது, இல் இடைநிலை குஞ்சாரியை பெற்றும் ஆல் இடைநிலை குஞ்சாரியை பெற்றும் பெறாதும் ஆகாரவிடைசாரியை பெறாதும் எதிர்காலம் உணர்த்தி வரும்.

உதாரணம்.

நடந்திலன், பெற்றிலன், நடக்கின்றிலன், நடக்கிலன், எ-ம். நடக்கலன், உண்ணலன், எ-ம். நடவான், எ-ம். வரும். மற்ற விகுதிகளோடு இப்படியேயொட்டிக் கொள்க.

இல், அல், ஆ, இவ் மூன்றையும் எதிர்மறை விகுதி என்பர் சிலர். எதிர்மறை இடைநிலையெனபதே சேனாவரையார். சிவஞான முனிவர். முதலியோர் துண்வு நடவா என்னும் அஃறிணைப்பலவின் பால் படர்க்கை வினைமுற்றில் ஆகாரம் வெரு விகுதி வேண்டாது தானே, எதிர்மறை பொருளோடு பலவின்பாற் படர்க்கைப் பொருளையுந் தந்து நிற்றலின், அங்கு மாத்திரம் விகுதியோ யென்றறிக.

அகரவிடைநிலை வருமெழுத்து உயிராயவழிக் கெடுதல் பதவியலிற் பெறப்பட்டது.

இங்ஙனமன்றி உடன்பாட்டு தெரிநிலை முற்றுக்களே ஆல் என்னும் பன்படியாக தோன்றிய எதிர்மறை சிறப்பு வினைக்குறிப்போடாயினும் இல்லை யென்னும் எதிர்மறைத்த தெரிநிலை வினைமுற்றுக்களாயும் வரும்.

உதாரணம்.
உண்டானல்லன், உண்டேனல்லன், உண்டாயல்லை, எ-ம். வந்தானில்லை, வந்தேனில்லை, வந்தாயில்லை, எ-ம். வரும்.

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்