வீட்டின் வாசல் படிகள் அமைக்க வாஸ்து

இந்த பதிவில் வீட்டில் வாசல்படிகள் அமைக்க வாஸ்து சாஸ்திர குறிப்புகள் மற்றும் வாசல்படிகள் வைக்கும் அளவு, வாசல் படிகள் எண்ணிக்கை நிர்ணயிப்பது பற்றி தெரிந்துகொள்வோம்.

வாசல் படிகள் அமைக்க வாஸ்து
வாசல் படிகள் அமைக்க வாஸ்து

வீட்டிற்கான வாசல் படிகள் அமைக்க வாசற்படியில் உயரத்திலிருந்து ஒன்பதில் ஐந்து பங்கு அகலம் இருக்க வேண்டும். அதாவது உயரம் 9 அடிகள் இருந்தால் அகலம் 5 அடிகள் இருக்க வேண்டும். இவ்வாறு அமைக்க லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

வெளியில் உள்ள வாசல்படியை விட உள் வாசல்படிகள் உயர்ந்திருந்தால் அதிக நன்மை உண்டு.

வீட்டிற்கு வாசல் படிகளை கருங்கற்களால் அமைக்க கூடாது.

வாசல் படிகள் எண்ணிக்கை இரட்டைப்படையாக இருப்பது நல்லது.

வீட்டிற்குள் நுழையும் போதும் வெளியில் செல்லும் போதும் நம் கண்ணில் சுவாமி படங்கள் படும்படி வைக்க வேண்டும்.

பொதுவாக மாடிப் படிகளை வீட்டின் இடது புறத்தில் தான் அமைக்க வேண்டும். ஜாதகப்படி மாற்றிக்கொள்வது சிறப்பை தரும்.

மாடிப் படிகளை வடக்கு அல்லது கிழக்கு திசைகள் நோக்கி ஏறுமாறு அமைத்திட வேண்டும்.

மாடி ஏறும் போது நமது வலதுகை கைப்பிடிச் சுவரை பிடித்து ஏறுமாறு இருக்க வேண்டும்.

தெரிந்துகொள்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்