Skip to content
Home » ஆன்மிகம் » விலங்குகள் கனவு பலன்கள்

விலங்குகள் கனவு பலன்கள்

விலங்குகள் கனவு பலன்கள் – Animals Kanavu Palangal in Tamil – இந்த பதிவில் வீட்டு விலங்குகள் மற்றும் காட்டு விலங்குகள் கனவில் வந்தால் என்ன பலன் என்று பார்ப்போம். அதில் முயல், பறவை, யானை, ஓநாய், நரி, கரடி, குதிரை, குரங்கு, காளை மாடு, கீரி பிள்ளை, புலி, சிங்கம், மயில், நாய் மற்றும் பல விலங்குகளை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரிந்து கொள்வோம்.

விலங்குகள் கனவு பலன்கள்
விலங்குகள் கனவு பலன்கள்

விலங்குகள் கனவு பலன்கள்

முயல்கள் குதித்து விளையாடுவது போல கனவு வந்தால், உறவினர்களை சந்திக்க போகிறோம் என்று பொருள்.

வானத்தில் கூட்டமாகப் பறவைகள் பறந்துசெல்வது போல கனவுகள் வந்தால், நெடுநாள் துன்பம் நம்மை விட்டு விலகும் என்று பொருள்.

யானை போன்ற விலங்குகள் கனவில் வந்தால், செல்வம் சேரும்.

யானையின் மீது உட்கார்ந்துகொண்டு சவாரிசெய்வது போல கனவு வந்தால், நமக்கு உயர் பதவி கிடைக்கும் அல்லது வீடு யோகம் உண்டாகும்.

ஓநாய்களை கனவில் கண்டாலும் உறவினர்களிடம் பகை ஏற்படும்.

ஓநாய் உங்களை விரட்டினால் உறவினர்களால் பகை ஏற்படும் என்று பொருள்.

நரி கனவில் வந்தால் எடுத்த காரியம் வெற்றி பெரும்.

நரி ஓடுவது போல கனவில் வந்தால், சொந்த ஊரை விட்டுச் சென்று வெளியூரில் பிழைப்பு நடத்தவேண்டி வரும்.

கரடி தேன் குடிப்பது போல் கனவு வந்தால் நல்ல செய்திகள் தேடி வரும்.

குதிரை கனவில் வந்தால், வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குதிரையின் மீது ஏறி சவாரி செய்வது போல கனவு வந்தால், நமக்கு வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

குரங்குகள் கனவில் வந்தால் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும்.

பசுக்கள் நிலத்தில் மேய்வது போல கனவு வந்தால், புதிய சொத்துக்கள் வாங்கும் அமைப்பு உண்டாகும்.

புலி, சிங்கம் போன்ற வனவிலங்குகளை வேட்டையாடுவது போல கனவு கண்டால், நமக்கு வந்த எதிர்ப்புகளை முறியடித்து வெற்றி பெறப்போகிறோம் என்று பொருள்.

காளை மாடு துரத்துவது போல கனவு வந்தால், வீண் பிரச்னைகள் உருவாகும்.

கீரிப்பிள்ளையை கனவில் கண்டால் எதிர்பாராத இடத்தில இருந்து உதவிகள் கிடைக்கும்.

ஆடுகள் நம் கனவுகளில் வந்தால், புதிதாக வாகனம் வாங்கப்போகிறோம் என்று அர்த்தம்.

பாம்பு கனவில் வந்தால், தடைகளை குறிக்கும்

பாம்பு நம்மை கடிப்பது போல கனவு வந்தால் நமக்கு பிடித்த தோஷங்கள் மற்றும் திருஷ்டி நீங்கியது என்று பொருள்.

நாய்கள் குரைப்பது போல கனவு கண்டால் வீண்பழி ஏற்படும்.

மயில் அகவுவது போல கனவு வந்தால், கணவன் மனைவி இடையே அன்பு மிகுதியாகும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மற்ற கனவு பலன்கள்

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்