வினையெச்சம் குறிப்பு

வினையெச்சம் குறிப்பு – வினையெச்சமாவது பால் காட்டும் முற்றுவிகுதி பெறாத குறைசெ சொல்லாய் வினைச்சொல்லைக் கொண்டு முடியும் வினையாம்.

இவ்வினையெச்சங் கொள்ளும் வினைச்சொற்களாவன உடன்பாடும் எதிர்மறையும் பற்றிவரும் தெரிநிலையுங் குறிப்புமாகிய வினைமுற்றும் பெயரெச்சமும், வினையெச்சமும், வினையாலணையும், பெயரும், தொழிற்பெயரும் ஆகிய ஐ வகை வினைச்சொற்களுமாம்.

1. தெரிநிலை வினையெச்சம் தெரிநிலை வினை விகற்பங்கள் கொள்ளுதற்கு

உதாரணம்.

உண்டு வந்தான்; உண்டுவாரான் – தெரிநிலை வினைமுற்று
உண்டுவந்த் உண்டுவராத – தெரிநிலைப்பெயரெச்சம்
உண்டுவந்து; உண்டுவராது – தெரிநிலை வினையெச்சம்
உண்டுவந்தவன்; உண்டு வாராதவன் – தெரிநிலை வினையாலணையும் பெயர்
உண்டுவருதல்; உண்டுவராதவன் – தெரிநிலைத் தொழிற் பெயர்

2. தெரிநிலை வினையெச்சம் குறிப்புவினை விகப்பங்கள் கொள்ளுதற்கு உதாரணம்:-

கற்றுல்லவன் – குறிப்புவினைமுற்று
கற்றுவல்ல – குறிப்பு வினைப்பெயரெச்சம்
கற்றுவல்லவன் – குறிப்புவினையாலனையும் பெயர்
கற்று வன்மை – குறிப்புத் தொழிற்பெயர்

3. குறிப்பு வினையெச்சம் தெரிநிலைவினை விகப்பங்கள் கொள்ளுதற்கு உதாரணம்:-

அறமன்றிச் செய்தான்; அறமன்றிச் செய்யான் – தெரிவினைமுற்று
அறமன்றிச் செய்த் அறமன்றிச் செய்யாத – தெரிபெயரெச்சம்
அறமன்றிச் செய்து; அறமன்றிச் செய்யாமை – தெரிதொழிற் பெயர்

4. குறிப்பு வினையெச்சம் குறிப்பு வினையெச்சங் குறிப்பு வினை விகப்பங்கள் கொள்ளுதற்கு உதாரணம்:-

அறமன்றியிலன் – குறிப்பு வினைமுற்று
அறமன்றியில்லாது – குறிப்பு வினைப்பெயரெச்சம்
அறமன்றியில்லாது – குறிப்பு வினையெச்சம்
அறமன்யில்லாதவன் – குறிப்பு வினையாலணையும் பெயர்
அறமன்யின்மை – குறிப்புத் தொழிற்பெயர்

பதவியலிற் கூறப்பட்ட வினையெச்ச விகுதிகளும் உகர விகுதி இறந்தகால விடைநிலையோடு கூடிவரும் என விகுதி, இறந்தகாலவிடைநிலையோடும் விகாரப்பட்டிருந்த காலங்காட்டும் பகுதியோடும் கூடிவரும். மற்றை விகுதிதி யெல்லாம் இடைநிலையின்றித் தாமே காலங்காட்டும்.

தெரிநிலை வினையெச்சங்கள் செய்து என்னும் வாய்ப்பாட்டிறந்த கால வினையெச்சம் எனவும், செயவென்னும் வாய்ப்பாட்டு முகலத்திற்குமுரிய வினையெச்சம் எனவும் செயின் என்னும் வாய்பாட்டெதிர்கால வினையெச்சம் எனவும் மூவகைப்படும்.

செய்து என்னும் வாய்ப்பாட்டு இறந்தகால வினையெச்சங்கள், உ, இ, ய் என்னும் விகுதிகளை இறுதியிற் பெற்று தன் கருத்தாவின் வினையையே கொண்டு முடிவனவாம்.

இங்கே இறந்தகாலம் என்பது முடிக்கும் சொல்லால் உயரப்படும் தொழிற்கு வினையெச்சத்தால் உணரப்படும். தொழில்முன்னிகழ்தலை.

(உதாரணம்)

உகரவிகுதி நடந்து
உண்டு
சென்று தேர்ந்து
கேட்டு
கற்று வந்தான்
இகரவிகுதி
யகரவிகுதி ஆடி
ஆய் எண்ணி
போய் வந்தான்

இங்கே வினையெச்சத்தால்உயரப்படுந் தொழிலை நிகழ்த்தினா வினைமுதலே முடிக்குஞ் சொல்லால் உணரப்படும் தொழிற்கு வினைமுதலாகக் காண்க.

விகுதி விகரப்பட்டு, விகுதிபெறாது சில பகுதியே விகாரப்படும் இச்செய்தெனடவாய்ப்பட்டிறந்த கால வினையெச்சங்களாய் வரும்.

தழுவிக்கொண்டான்
மருவிவந்தான் தழீஇக்கொண்டான்
மாPஇவந்தான் விகுதி விகாரப் பட்டு வந்தன
புகு
விடு
பெறு புக்கு வந்தான்
விட்டு வந்தான்
பெற்று வந்தான் விகுதி பெறாது சில பகுதியே விகாரப்பட்டு வந்தன

இச்செய்னெச்சம், ஒரோவிடத்து காரப் பொருட்டாயும் வரும்.

உதாரணம்.
கற்றறிந்தான்
அறம் செய்த புகழ்பெற்றான்

செய்யுளிலே இச்செய்தென் வாய்ப்பாட்டிறந்த கால வினையெச்சங்கள், பு, ஆ. ஊ, என்னும் விகுதிகளைப் பெற்றும் வரும்.

உதாரணம்.

புகரவிகுதி
ஆவிகுதி
ஊவிகுதி உண்குபு
உண்ணா
உண்ணுபு தேடுபு
தேடா
தேடு வந்தான்

செய என்னும் வாயடப்பாட்டு முக்காலத்திற்கும் உரிய வினையெச்சம் அகரவிகுதியை இறுதியிற் பெற்றுத் தான் கருத்தாவின் வினையையும் பிறகருத்தாவின் வினையையும் கொண்டு முடிவதாம்.

செய வெண் வாய்ப்பாட்டு வினையெச்சம் இறந்த காலத்திலே காரணப் பொருளில் வந்து தன் கருத்தாவின் வினையையும் பிற கருத்தாவின் வினையையும் கொண்டு முடியும்.

காரணப் பொருளில் வருதலாவது முடிக்குந் சொல்லால் உணரப்படும் தொழிற்கு வினையெச்சத்தால் உணரப்படுந் தொழில் காரணம் என்பது பட வருதல்.

உதாரணம்
மழை பெய்ய புகழ்பெற்றது – தன்கருத்தாவின் பெயர்
மழை பெய்ய நெல் விளைந்நது – பிறகருத்தாவின் வினை
மழை பெய்ய புகழ்பெற்றது என்றவிடத்து வினையெச்சந்தால் உணரப்படும் தொழிலை நிகழ்த்தின வினைமுதலே முடிக்குஞ் சொல்லால் உணரப்படும் தொழிற்கு வினைமுதலாதல் காண்க.

மழைபெய்ய நெல்லு விளைந்தது எனற விடத்து வினையெச்சத்தால் உணரப்படும் தொழிலை நிகழ்த்தின வினைமுதலும் வேறே: முடிக்குஞ் சொல்லால் உணலப்படும் தொழிலை நிஷைகழ்த்தின வினைமுதலும் வேறேயாதல் காண்க.

செய்யுளிலே இச் செயன்வென் வாய்பாட்டு இறந்த கால வினையெச்சம் என என்னும் விகுதியை பெற்றும் வரும்.

உதாரணம்.
மழை பெயடதெனப் புகழபெற்றது – தன்கருத்தாவின் பெயர்
மழை பெய்தென நெல் விளைந்நது – பிறகருத்தாவின் வினை

செயவென் வாய்ப்பாட்டு வினையெச்சம் எதிர்காலத்திலே கரியப் பொருளில வந்து தன் கருத்தாவின் வினையையும் பிற கருத்தாவின் வினையையும் கொண்டு முடியும்.

காரியப் பொருளில் வருதலாவது முடிக்குஞ் சொல்லால் உணலப்படுந் தொழிற்கு வினையெச்சத்தால் உணரப்படும் தொழில். காரியம் என்பது பட வருதல்.

உதாரணம்.

தானுண்ணவந்தான் – தன்கருத்தாவின் பெயர்
யானுண்ணத்தந்தான் – பிறகருத்தாவின் வினை

வாய்ப்பாட்டு எதிர் கால வினையெச்சம் ‘கு’ என்னும் விகுதியைப் பெற்றும் வரும்.

உதாரணம்.

தானுணற்கு வந்தான் – தன்கருத்தாவின் பெயர்
யானுணற்குத் தந்தான் – பிறகருத்தாவின் வினை

உணணும்படி, உண்ணும் பொருட்டு, உண்ணும் வண்ணம், உண்ணும் வகை என்பன உணற்கென்னும் பொருள்பட வரும்.

செய்யுளிலே, இச்செயவென்வாய்ப்பாட்டு எதிர் கால வினையெச்சம், இய, இயர், வான், பான், பாக்கு என்னும் விகுதிகளைப் பெற்றும் வரும். இவற்றுள் முன்னைய இரண்டு விகுதி பெற்றவை தன் கருத்தாவின் வினையையும் பிற கருத்தாவின்வினையையுங் கொண்டு முடியும்; பின்னைய மூன்று விகுதி பெற்றவை தன் கருத்தாவின் வினையைக் கொண்டு முடியும்.

உதாரணம்.

இயவிகுதி நீரிவைகாணியவம்மின் – தன் கருத்தாவின் வினை
அவர் காணிய வம்மின் – பிற கருத்தாவின் வினை
இயர்விகுதி நாமுண்ணியர்வந்தேம் – தன் கருத்தாவின் வினை
நீருண்ணியர் வழங்குவேம் – பிற கருத்தாவின் வினை
வான்விகுதி – தான் கொல்வான் சென்றான்
பான்விகுதி – தானலைப்பான் புகுந்தான்
பாக்குவிகுதி – தான்றருபாக்கு வருவான் தன் கருத்தாவின் வினை

(5) செயவென்வாய்ப்பாட்டு வினையெச்சம், தனக்கென நியமமாக உரிய நிகழ்காலத்திலே, இது நிகழா நிற்க இது நிகழ்ந்தது என்னும் பொருள்பட வந்து, பிறகருத்தாவின் வினையைக் கொண்டு முடியும்.

இங்கே நிகழ்காலமென்றது, முடிக்குஞ் சொல்லால் உணரப்படுந் தொழிலோடு வினையெச்சத்தால் உயரப்படுந் தொழில் முற்பிற் பாடின்றி உடனிகழ்தலை.

உதாரணம்.
சூரியனுதிக்க வந்தான் – பிறகருத்தாவின் வினை

செயின் என்னும் வாய்ப்பாட்டு எதிர்கால வினையெச்சங்கள், இன், ஆல், கால், கடை, வழி, இடத்து, உம் என்னும் விகுதிகளை இறுதியிற் பெற்றுக் காரணப்பொருளில் வந்து, தன் கருத்தாவின் வினையையும் பிற கருத்தாவின் வினையையும் பிறகருத்தாவின் வினையையும் கொண்டு முடிவனவாம்.

இவ்வினையெச்சம், எதிர்காலச் சொல்லையே முடிக்குஞ் சொல்லாகக் கொள்ளும். இவ்வினையெச்சத்தால் உணரப்படுந் தொழில், ஒருதலையாகவே சொல்லுவான். சொற்குப் பின்னிகழ்வதாயும், முடிக்குஞ்சொல்லால் உணரப்படுந் தொழிற்குக் காரணமாகமுன்னிகழ்வதாயும் உள்ளது; ஆதலால், இவ்வினையெச்சம் எதிhடகாலம் பற்றிக் காரணப்பொருளில் வருவதாயிற்று. ஒருதலை – துணிவு.

(உதாரணம்)

இன் யாணுண்ணி னுவப்பேன்
உண்ணிற் பசிதீரும் தன்கரு பிறகரு
ஆல் நீ வந்தால் வாழ்வாய்
நீ வந்தான் யான் வாழ்வேன் தன்கரு பிறகரு
கால் நீ கற்றக்காலுவப்பாய்
உண்டக்காற் பசிதீரும் தன்கரு பிறகரு
கடை நல்வினை தானுற்றக் கடையுதவும்
நல்வினை தானுற்றக்கடைத் தீவினை வராது தன்கரு பிறகரு
வழி நல்வினை தானுற்ற வழியுதவும்
நல்வினை தானுற்றவழித் தீவினை வராது தன்கரு பிறகரு
இடத்து நல்வினை தானுற்றவிடத்துதவும்
நல்வினை தானுற்றவிடத்துத் தீவினைவராது தன்கரு பிறகரு
உம் உண்டலு முவப்பாய்
உண்டலும் பசி தீரும் தன்கரு பிறகரு

வந்தால் என்பது துச்சாரியை பெற்றது. உண்டக்கால் என்பது துச்சாரியையும் அகரச்சாரியையும் பெற்றது. உற்றக்கால், உற்றக்கடை, உற்றவழி, உற்றவிடத்து என்பன அகரச்சாரியை பெற்றன. உண்டலும் என்பது துச்சாரியையும் அல்லுச் சாரியையும் பெற்றது.

உண்பானேல் உண்பானெனின், உண்பானாயின், உண்பானேனும் என, முற்று வினைகள், ஏல், எனின், ஆயின், ஏனும், என்னும் நான்கனோடும் இயைந்து, ஒரு சொன்னீர் மைப்பட்டுச் செயின் என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சங்களாய் வருமெனவும் அறிக.

எதிர்மறைத் தெரிநிலை வினையெச்சங்கள் எதிர்மறை ஆகாரவிடைநிலையோடு உ, மல், மே, மை, மைக்கு, கால், கடை, வழி, இடத்து என்னும் விகுதிகளைப் பெற்று வருவனவாம்.

செய்யாது என்பது செய்து, செய்பு, செய்யா, செய்யூ என்பவற்றிற்கு, எதிர்மறையாம். செய்யாது என்பதிலே தகரம் எழுத்துப்பேறு. செய்யாது என்பது, செய்கலாது, செய்கிலாது என, அல் இல், என்னும் இடைநிலைகளை ஆகாரச்சாரியையோடு பெற்றும் வரும்.

செய்யாமல் என்பது, செய என்பதற்கு எதிர்மறையாம்.

செய்யாமல், செய்யாமே, செய்யாமை, செய்யாமைக்கு என்னும் நான்கும், செயற்கு, செய்யிய, செய்யியர் என்பவற்றிற்கும், செயற்கு என்பது படவருஞ் செயவேனெச்சத்திற்கும் எதிர்மறையாம்.

செய்யாக்கால், செய்யாக்கடை, செய்யாவழி, செய்யாவிடத்து என்னும் நான்கும், செயின் என்பதற்கும், அப்பொருள்பட வருவனவாகிய செய்தால், செய்தக்கால், செய்தக்கடை, செய்தவழி, செய்தவிடத்து என்பனவற்றிற்கும் எதிர்மறையாம்.

(உதாரணம்)

விதிவினை யெச்சம் மறைவினையெச்சம்
உண்டு வந்தான் உண்ணாது வந்தான்
மழை பெய்யப் பயிர் தழைத்தது மழை பெய்யாமற் பயிர் வாடிற்று
இங்கே பெய்யாமல் என்பதற்கு
பெய்யாமையால் என்பது பொருள்
அவன் காணவந்தேன்
அவன் காணாமல் வந்தேன்.
இங்கே காணாமல் என்பதற்குக்
காணாதிருக்க என்பது பொருள்.
நீ வீடெய்தற்கு வணங்கு
நீ நரகெய்தாமல் வணங்கு
நீ நரகெய்தாமே வணங்கு
நீ நரகெய்தாமை வணங்கு
நீ நரகெய்தாமைக்கு வணங்கு
இஙகே எய்தாமல் என்பது முதலிய
நான்கிற்கும் எய்தாதொழியும் பொருட்டு
என்பது பொருள்
யானுணற்கு விதித்தான் யானுண்ணாமல் விதித்தான்
யானுண்ணாமே விதித்தான்
யானுண்ணாமை விதித்தான்
யானுண்ணாமைக்கு விதித்தான்
இங்கே உண்ணாமல் என்பது முதலிய
நான்கிற்கும் எய்தாதொழியும் பொருட்டு
என்பது பொருள்
யானுண்ணின்
மகிழ்வென் யானும்ணாக்கான் மகிழேன்
யானும்ணாக்கடை மகிழேன்
யானும்ணாவழி மகிழேன்
யானும்ணாவிடத்து மகிழேன்
இங்கே உண்ணாக்கால் என்பது முதலிய
நாந்கிற்கும் உண்ணாதொழியின் என்பது
பொருள்
உண்ணிற்
பசிதீரும் உண்ணாக்காற் பசி தீராது
உண்ணாக்கடை பசி தீராது
உண்ணாவழிப் பசி தீராது
உண்ணாவிடத்து பசி தீராது

உடன்பாட்டுக் குறிப்பு வினையெச்சங்கள், பண்படியாகத் தோன்றி அகரவிகுதியைப் பெற்று வருவனவாம்.

உதாரணம்.
மெல்லப் பேசினான் சாலப்பல
பைய நடந்தான் உறக்கரிது
வலியப் புகுந்தான் மாணப் பெரிது

மெல்ல என்பது, ல, ளவொற்றுமைபற்றி, மௌ;ளவெனவும் வழங்கும்.

எதிர்மறை குறிப்புவினையெச்சங்கள், அல், இல் என்னும் எதிர்மைபண்படியாகத் தோன்றி, றி டு மல் மே மை ஆல் கால் கடை வழி இடத்து என்னும் விகுதிகளைப் பெற்று வருவனவாம்.

உதாரணம்.

றி
து

மல்
மே
மை
ஆல்
கால்
கடை
வழி
இடத்து அறமன்றிச்செய்யான்
அறமல்லாதில்லை
அறமல்லதில்லை
அறமல்லாமலில்லை
அறமல்லாமேயில்லை
அறமல்லாமையில்லை
நீயல்லாலில்லை
அவனல்லாக்கானீயார்
அவனலடலாக்கடைநீயார்
அவனல்லாவழிநீயார்
அவனல்லாவிடத்து நீயார்
அருளின்றிச் செய்தான்
அருளில்லாது செய்தான்

யானில்லாமல் வந்தான்
யானில்லாமே வந்தான்
யானில்லாமை வந்தான்

யானில்லாக்கால் வருவான்
யானில்லாக்கடைவருவான் யானில்லாவழி வருவான்
யானில்லாவிடத்து வருவான்

இவ்வினையெச்சக் குறிப்புக்களில் வரும் ஆகாரமும் அகரமுஞ் சாரியை.

வினையெச்சங்கள், இருதிணையைம்பான் மூவிடங்கட்கும் பொதுவாக வரும்.

உதாரணம்.
நடந்து வந்தான், வந்தேம்
வந்தாய், வந்தீர்
வந்தான், வந்தாள், வந்தார், வந்தது, வந்தன

தன் கருத்தாவின் வினையே கொள்ளுதற்குரிய வினையெச்சங்கள் சினை வினையாயின், அவை அச்சினைவினையைக் கொண்டு முடிதலுமன்றி, ஒற்றுமைபற்றி முதல் வினையையும் கொண்டு முடியும்.

உதாரணம்.
சாத்தன் காலொடிந்து வீழ்ந்தான். இங்கே ஒடிதல் சினைவினை; வீழ்தல் முதல் வினை ஆதலின் ஒடிந்து என்னுஞ் சினைவினையெச்சம் வீழ்ந்தான் என்னும் முதல் வினைகொண்டு முடிந்தது.

காலொடிந்து வீழ்ந்தது. இங்கே ஒடிதலுஞ் சினை வினை; வீழ்தலுஞ் சினைவினை. ஆதலின் ஒடிந்து என்னுஞ் சினைவினையெச்சம் வீழ்ந்தது என்னும் சினைவினை கொண்டு முடிந்தது.

மாடு காலொடிந்து வீழ்ந்தது. இங்கே வீழ்தல் மாட்டின் வினையாதலிற் சினைவினையெச்சம் முதல் வினைகொண்டு முடிந்தது.

பிற கருத்தாவின் வினையைக் கொள்ளும் வினையெச்சங்கள்; தன்கருத்தாவின் வினையைக்கொள்ளும் வினையெச்சங்களாக திரிந்தும் வரும். திரிபினும், அவற்றின் பொருள்கள் வேறுபடாவாம்.

உதாரணம்.
ஞாயிறு பட்டு வந்தான். இங்கே பட வென்னுஞ் செயவென் வாய்ப்பாட்டுவினையெச்சம் பட்டு என திரிந்து நின்றது.

மழைபெய்து நெல் விளைந்தது. இங்கே பெய்ய என்னுங் காரணப் பொருட்டாகிய செயவென் வாய்ப்பாட்டிறந்தகால வினையெச்சம் பெய்து என திரிந்து நின்றது.

முற்றுவினை எச்சப்பொருளைத் தருதல்

தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினை முற்றுங் குறிப்பு வினைமுற்றும், தமக்குரிய பயனிலை கொள்ளுமிடத்து வினையெச்சத்திற்குரிய பயனிலை கொள்ளுமிடத்து வினையெச்சப் பொருளையும், பெயரெச்சத்திற்குரிய பயனிலை கொள்ளுமிடத்து வினையெச்சப் பொருளையும், பெயரெச்சத்திற்குரிய பணனிலை கொள்ளுமிடத்துப் பெயரெச்சப் பொருளையுந் தரும்.

உதாரணம்.
கண்டனன் வணங்கினன்; இங்கே கண்டனன், என்னுந் தெரிநிலை வினைமுற்று, கண்டு என வினையெச்சப் பொருளைத் தந்நது.

உண்டான்சாத்தனூர்க்குப் போயினான்; இங்கே உண்டான் என்னுந் தெரிநிலை வினைமுற்று உண்டடெனப் பெயரெச்ச பொருளைத் தந்தது.
உச்சிக்கூப்பிய கையினர் தற்புகழ்ந்து இங்கே கையினார் என்னுங் குறிப்பு வினைமுற்று, கையையுடையனவராகி என வினையெச்சப் பொருளைத் தந்தது.

வெந்திறலினான் விரல் வழுதியோடு; இங்கே திரலினால் என்னும் குறிப்பு வினைமுற்று திறலினனாகிய எனப்பெயரெச்சப் பொருளைத் தந்தது.

Read More: 

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்