Skip to content
Home » தமிழ் இலக்கணம் » வினைச்சொற்கள் தமிழ் இலக்கணம்

வினைச்சொற்கள் தமிழ் இலக்கணம்

இந்த பதிவில் பார்ப்போம் வினைச்சொற்கள் பற்றி தெரிந்து கொள்வோம்

வினைச்சொற்கள் தமிழ் இலக்கணம்

வினைச் சொல்லாவது, பொருளினது, புடைப் பெயர்ச்சியை உணர்த்துஞ் சொல்லாம்.
புடைப்பெயர்ச்சியெனினும், வினை நிகழ்ச்சியெனினும், பொருந்தும். வினை, தொழில் என்பவை ஒரு பொருட் சொற்கள்.

வினை நிகழ்ச்சிக்குக் காரணம்

வினையானது வினைமுதல், கருவி, இடம், செயல், காலம், செயப்படு பொருள் என்னும் இவ்வாறுங் காரணமாவேணும், இவற்றுட் பல காரணமாகவேனும், நிகழும்.

உதாரணம்

வனைந்தான்: இத்தெரிநிலை வினை, வினைமுதன் முதலிய ஆறுங் காரணமாக, வந்தது. வினைமதல் குயவன்; முதற்கருவி மண்; துணைக்கருவி தண்டசக்கர முதலியன் இடம் வனைதற்கு ஆதாரமாகிய இடம்; செயல் வனைதற்கு மதற்காரணமாகிய செய்கை; காலம் இறந்தகாலம்; செயப்படு பொருள் குட முதலியன.

இருந்தான்: இத்தெரிநிலை வினை, வினைமுதன் முதலிய ஆறுங் காரணமாக, வந்தது.

உடையன்: இக்குறிப்பு வினை, கருவியுஞ் செயப்படு பொருளுமொழிந்த நான்குங் காரணமாக வந்தது.

1) வினை முதன் முதலிய ஆறனுள்ளே, தெரிநிலை வினைமுற்றின் கண், விணைமுதலுஞ் செயலுங் காலமுமாகிய மூன்றும் வெளிப்படையாகவும், மற்றை மூன்றுங் குறிப்பாகவுந் தோன்றும்.

தெரிநிலை வினைப் பெயரெச்ச வினையெச்சங்களின்கண் செயலுங் காலமுமாகிய இரண்டும் வெளிப்படையாகவும், மற்றை நான்கும் குறிப்பாகவுந் தோன்றும்.

வினைமுதல் பால் காட்டும் விகுதியினாலும், செயல் பகுதியினாலும், காலம் இடைநிலையும் விகுதியும் விகாரப்பட்ட பகுதியுமாகிய மூன்றனுள் ஒன்றினாலுந் தொன்றும். எச்ச வினைகட்குப் பால் காட்டும் விகுதி யின்மையால், அவற்றில் வினைமுதல் வெளிப்படத் தோன்றதாயிற்று.

உதாரணம்

உண்டான்: இத்தெரிநிலை வினைமுற்றிலே, பகுதியாற் செயலும், இடைநிலையாற் காலமும், விகுதியால் வினைமுதலும் வெளிப்படையாகவும், மற்றவை

உண்ட: இத் தெரிநிலைவினைப் பெயரெச்சத்திலே, பகுதியாற் செயலும், இடைநிலையாற் காலமும் வெளிப்படையாகவும், குறிப்பாகவுந் தோன்றின.

உண்டு: இத்தெரிநிலை வினையெச்சத்திலே, பகுதியாற் செயலும், இடைநிலையாற் காலமும் வெளிப்படையாகவும், குறிப்பாகவுந் தோன்றின.

2. வினைக்குறிப்பு முற்றிக்கண் வினை முதன் மாத்திரம் வெளிப்படையாகவும், மற்றவையெல்லாங் குறிப்பாகவுந் தோன்றும்.

வினைக்குறிப்பு வினையெச்சங்களின் கண், வினைமுதன் முதலியவெல்லாங் குறிப்பாகவே தோன்றும்.

உதாரணம்.

கரியன்: இக்குறிப்பு வினைமுற்றிலே, விகுதியால் வினைமுதல் வெளிப்டையாகவும், மற்றவையெல்லாங் குறிப்பாகவுந் தோன்றும்.

கரிய: இக்குறிப்புவினைப் பெயலெச்சத்திலே, வினைமுதன் முதலியவெல்லாங் குறிப்பாகவே தோன்றின.

இன்றி: இக்குறிப்புவினை வினையெச்சத்திலே, வினைமுதன் முதலியவெல்லாங் குறிப்பாகவே தோன்றின.

காலம்

3) காலம், இறப்பு, நிகழ்வு, எதிர்வு, என மூவகைப்படும்.

இறப்பாவது தொழிலது கழிவு நிகழ்வாவது தொழில் தொடங்கப்பட்டு முற்றுப் பெறாத நிலமை. எதிர்வாவது தொழில் பிறவாமை.

வினைச்சொற்களின் வகை

1). இக்காலத்தோடு புலப்படுவனவாகிய வினைச்சொற்கள், தெரிநிலை வினைச்சொற்கள், குறிப்பு வினைச்சொற்கள் என, இருவகைப்படும்.

2). தெரிநிலை வினையாவது, காலங்காட்டும் உருப்புண்மையினாலே, காலம் வெளிப்படத் தெரியும்படி நிற்கும் வினையாம்.

உதாரணம்.

நடந்தான்: இது, தகரவிடை நிலையினால் இறந்தகாலம் வெளிப்படத் தெரியும் படி நிற்றலினாலே, தெரிநிலை வினை.

உண்கும்: இது, கும் விகுதியினால் எதிர்காலம் வெளிப்படத் தெரியும் படி நிற்றலினாலே, தெரிநிலை வினை.

பெற்றான்: இது, பெறு, பெற்று என விகாரப்பட்டு நின்ற பகுதியினால் இறந்தகாலம் வெளிப்படத் தெரியும் படி நிற்றலினாலே, தெரிநிலை வினை.

தெரிநிலை வினைகள் தோன்றுதற்குரிய முதனியடிகள் இவையென்பது பதவியலில் நாற்பத்தாறம் வசனத்திற் கூறப்பட்டது.

3). குறிப்பு வினையாவது, காலங்காட்டும் உறுப்பின்மையினாலே, காலம் வெளிப்படத் தெரிதலின்றிச் சொல்லுவோனது குறிப்பினாலே தோன்றும்படி, நிற்கும் வினையாம்.

உதாரணம்.

பொன்னன்: இது, பொன்னையுடையனாயினான் என இறந்தகாலங் கருதியாயினும், பொன்னையுடையனாகின்றான் என நிகழ்காலங் கருதியாயினும், பொன்னையுடையனாவான் என எதிர்காலங் கருதியாயினுந் தன்னை ஒருவன் சொல்ல, அக்காலம் அவனது குறிப்பாட் கேட்போனுக்குத் தோன்றும் படி நிற்றலினாலே, குறிப்பு வினை.

பொன்னன் என்பது, பொன்னுடைமை காரணமாக ஒருவனுக்குப் பெயராய் நின்று எழுவாய் முதலிய வேற்றுமையுரு பேற்கும் போது பெயர்ச் சொல்; முக்காலம் பற்றிப் புடை பெயரும் ஒருவனது வினை நிகழ்ச்சியை உணர்த்திப் பெயருக்குப் பயனிலையாய் வரும் போது குறிப்பு வினைமுற்றுச் சொல்; அங்ஙனம் வினைமுற்றாய் நின்று பின் அவ்வினை நிகழ்ச்சி காரணமாக அவனுக்குப் பெயராகி எழுவாய் முதலிய வேற்றுமையுருபேற்கும் போது குறிப்பு வினையாலணையும் பெயர்.

குறிப்பு வினைகள் தோன்றுதற் குரிய முதனிலையடிகாள் இவையென்பது பதவியலில் நாற்பத்து நான்காம் வசனத்திற் கூறப்பட்டது.

4). தெரிநிலைவினை குறிப்புவினை என்னும் இரண்டும், முற்றும், பெயரெச்சமும், வினையெச்சமும், வினையெச்சமும் என்பன மும்மூன்று வகைப்படும். எனவே, தெரிநிலைவினைமுற்றும், தெரிநிலைவினைப் பெயரெச்சமும், தெரிநிலை வினையெச்சமும், குறிப்பு வினைமுற்றும், குறிப்பு வினைப்பெயரெச்சமும், குறிப்பு வினை வினையெச்சமும் என, வினைச்சொற்கள் அறுவகையாயின.

5). இவ்வறுவகை வினைச்சொற்களும், உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் வரும்.

உடன்பாட்டு வினையாவது. தொழிலினது நிகழ்ச்சியை உணர்த்தும் வினையாம். உடன்பாட்டு வினையெனினும், பொருந்தும்.

உதாரணம்.

நடந்தான் நடந்த நடந்து
பெரியன் பெரிய மெல்ல

எதிர்மறை வினையாவது, தொழில் நிகழாமையை உணர்த்தும் வினையாம். எதிர்மறை வினையெனினும், மறைவினையெனினும், பொருந்தும்.

உதாரணம்.

நடவான் நடவாத நடவாது
இலன் இல்லாத இன்றி

6). வினைச்சொற்கள், இருதிணையைம்பான் மூவிடங்களுள் ஒன்றற்கு உரிமையாகியும், பலவற்றிற்குப் பொதுவாகியும், வழங்கும்.

Read More:

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்