வாஸ்து அடிப்படை விதிகள்

வாஸ்து அடிப்படை விதிகள்
வாஸ்து அடிப்படை விதிகள்

வாஸ்து அடிப்படை விதிகள் – இந்த பிரபஞ்சம் பஞ்ச பூதங்களை வித்தாக கொண்டது. ஒவ்வொரு உயிர் பொருள்கள், உயிரற்ற பொருள்கள் எல்லாவற்றிலும் இதன் ஆதிக்கம் உள்ளது. ஒருவருக்கு தான் வசிக்கும் வீட்டில் அமைதி நிலவி செல்வம் ஆரோக்கியம் பெற நினைப்பவர் கண்டிப்பாக வாஸ்து அமைப்பினை கையாள வேண்டும். இன்றைய காலத்தில் மனிதனுக்கு உடல் ஆரோக்கியம், செல்வம் ஆகியன முக்கியம் ஆகும். எனவே வாஸ்து கணக்கின்படி வீட்டில் நேர்மறை சக்தியை கூட்டி பயன் பெறலாம்.

வாஸ்து ஒழுங்குமுறை

பணவரவிற்கு நீங்கள் உங்கள் தலையை மேற்கு பக்கம் வைத்து படுக்கவும்.
வீடுகளில் குழாய்களில் தண்ணீரை ஒழுக விடாமல் பார்த்துக்கொள்ளவும்.
வீட்டில் கிழக்கு பகுதியில் சில்லறை சேர்த்து வைக்க சிறு உண்டியல் வையுங்கள்.
சாப்பிடும் அறையில் கண்ணாடி ஒன்றை வையுங்கள், அந்த கண்ணாடியில் உங்கள் உணவு தெரியவேண்டும். வீட்டில் தென்கிழக்கு பகுதியில் மீன்தொட்டி அமைக்கவேண்டும்.

மற்ற வாஸ்து குறிப்புகள்

கிழக்கு – குடிநீர் தொட்டி
தென்கிழக்கு – சமையலறை
தெற்கு – படிக்கும் அறை
தென் மேற்கு , மேற்கு, தெற்கு – படுக்கையறை
வடமேற்கு – கழிவறை
வடக்கு – குபேரனுடைய திசை சுத்தமாக வைத்துக்கொள்ளவும்
வடகிழக்கு – குடிநீர் ஆதாரம் அமைக்கலாம்
வட கிழக்கு, கிழக்கு, மேற்கு – பூஜை அறை

வாஸ்து சாஸ்திர நூல்கள்

வாஸ்து மயனால் எழுதப்பட்ட மயமதம், மானசாரரால் ஆக்கப்பட்ட மானசாரம், விஸ்வகர்மாவின் விஸ்வகர்மீயம் முதலிய பல நூல்கள் தனிப்பட வாஸ்து சாஸ்திரம் பற்றி எழுந்த நூல்களாகும். இதை பற்றிய செய்தியை குடைவறை கோயில்கள் பல்லவர்கள் காலம் என்ற தலைப்பில் ஏற்கெனவே பதிவிட்டுள்ளேன். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஸ்ரீ லலிதா நவரத்னம் என்னும் பெயரில் வெளிவந்த நூலொன்று பண்டைக் காலத்தில் ஏற்பட்ட சிற்ப நூல்களாக 32 நூல்களைப் பட்டியலிட்டிருக்கிறது.

32 நூல்கள்

1) விசுவதர்மம், 2) விசுவேசம், 3) விசுவசாரம், 4) விருத்தம், 5) மிகுதாவட்டம், 6) நளம், 7) மனுமான், 8) பானு, 9) கற்பாரியம், 10) சிருஷ்டம், 11) மானசாரம், 12) வித்தியாபதி, 13) பாராசரியம், 14) ஆரிடகம், 15) சயித்தியகம், 16) மானபோதம், 17) மயிந்திரமால், 18) வஜ்ரம், 19) ஸௌம்யம், 20) விசுவகாசிபம், 21) கலந்திரம், 22) விசாலம், 23) சித்திரம், 24) காபிலம், 25) காலயூபம், 26) நாமசம், 27) சாத்விகம், 28) விசுவபோதம், 29) ஆதிசாரம், 30) மயமான போதம், 31) மயன்மதம், 32) மயநீதி என்பனவாகும்.

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்

Comments are closed.