Skip to content
Home » ஜோதிடம் » வளைகாப்பு சடங்குகள்

வளைகாப்பு சடங்குகள்

இந்த பதிவில் வளைகாப்பு சடங்குகள் பற்றியும் அதற்கு நல்ல நாள் குறிப்பது எப்படி? வளைகாப்பிற்கு தேவையான பொருட்கள், வளைகாப்பிற்கான சாத வகைகள் எத்தனை என்று விரிவாக பார்ப்போம்.

வளைகாப்பு சடங்குகள்
வளைகாப்பு சடங்குகள்

திருமண சடங்குகள் என்று பார்க்கும்பொழுது பெண்ணிற்கு வளைகாப்பு மிகவும் முக்கியமான சடங்கு ஆகும். இது பெண் கர்ப்பமாகி 7வது மாதம் அல்லது 9வது மாதம் நடத்தப்பட சிறப்பாக இருக்கும்.

கர்ப்பமான பெண்ணின் கைகள் நிறைய ஓசை எழுப்பும் வகையில் வளையல்கள் அணிந்திருப்பதால் வயிற்றில் உள்ள குழந்தை வளையல் ஓசைக்கு ஏற்ப தன் அசைவுகளை அதிகப்படுத்தும் இதனால் குழந்தை ஆரோக்கியத்துடன் இருக்கும்.

தெரிந்துகொள்க: திருமண பொருத்தம் | நிச்சயதார்த்தம் நிகழ்வு | பெண் பார்க்கும் நிகழ்ச்சி

வளைகாப்பு நிகழ்வின்போது கருவுற்ற பெண்ணிற்கு வேப்பிலை காப்பு கட்டுவர். இது கிருமிகளால் நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கின்றது.

வந்திருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சந்தனம், குங்குமம் வைத்து பன்னீர் தெளித்து, அறுகரிசி இட்டு பெண்ணையும் அருகில் கணவனையும் அமரவைத்து ஆசீர்வதிப்பார். கடைசியாக பெண்ணிற்கு ஆரத்தி எடுத்து திருஷ்டி கழிப்பார்கள்.

வளைகாப்பு நாள் குறிக்க கவனிக்க வேண்டியவை

திங்கள், புதன், வியாழன் வெள்ளி கிழமையாக இருப்பது நல்லது.

துவிதியை, திரிதியை பஞ்சமி, சப்தமி, தசமி மற்றும் ஏகாதசி திதிகள் உத்தமம்.

அமாவாசை முடிந்து வளர்பிறை காலமாக இருப்பது நல்லது.

சிம்மம், விருச்சிகம் தவிர மற்ற லக்னங்களில் செய்யலாம்.

குறித்த முகூர்த்த லக்கினத்திற்கு 8ஆம் இடத்தில் எந்த கிரகமும் இல்லாமல் சுத்தமாக இருப்பது நல்லது.

வளைகாப்பு நடக்கும் நாள் குரு மூடம் மற்றும் சுக்ர மூடம் இல்லாமல் இருக்க வேண்டும்.

தெரிந்துகொள்க: குரு சுக்ர மூடம் என்றால் என்ன?

அன்றைய நாள் பெண்ணிற்கு சந்திராஷ்டமம் இல்லாமல் இருக்க வேண்டும்.

இதுபோன்று அமைப்புகளை பஞ்சாங்கத்தில் கணித்து வளைகாப்பு நாளை குறிக்க வேண்டும்.

வளைகாப்பு தேவையான பொருட்கள்

வளைகாப்பு நடக்கும் இடத்தில் பூக்கள், பழவகைகள், சந்தனம், குங்குமம், மஞ்சள், கண்ணாடி வளையல்கள், இனிப்பு வகைகள் இருக்கும்.

வளைகாப்பு சாப்பாடு வகைகள்

வளைகாப்பிற்கு ஒவ்வொருவரும் அவர்களின் தகுதிற்கேற்ப 7,9 அல்லது 11 வகை சாதங்களை சமைப்பார்கள். அதில் சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சை சாதம், புலி சாதம், தேங்காய் சாதம், புதினா சாதம், கருவேப்பிலை சாதம், நெய்புலாவ் சாதம் போன்ற பல்வேறு விதமான சாப்பாடு வகைகள் இருக்கும்.

தெரிந்துகொள்க:

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்