வர்கோத்தமம் என்றால் என்ன?
இந்த பதிவில் ஜோதிடத்தில் அடிக்கடி ஜோதிடர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்றான வர்கோத்தமம் என்றால் என்ன? என்று தெரிந்துகொள்வோம்.

வர்கோத்தமம் என்றால் என்ன
வர்கோத்தமம் என்றால் என்ன?
ஒரு கிரகம் ராசி கட்டத்திலும், நவாம்ச கட்டத்திலும் ஒரே ராசியில் இருப்பது வர்கோத்தமம் ஆகும். ராசி கட்டத்தின் ராசிகளில் சில நட்சத்திரங்களின் பாதத்தில் கிரகங்கள் சஞ்சரிக்கும்பொழுது நவாம்ச கட்டத்திலும் ஒரே ராசியில் இருக்கும் நிலையை பெற்று இருக்கும் அமைப்பை வர்கோத்தமம் என்று கூறுவார்.
வர்கோத்தமம் பெற்ற கிரகம் ஆட்சி பலத்துக்கும் இணையான வலிமை பெற்று இருப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டும். ராசி கட்டத்தில் லக்கினத்திற்கு எந்த பாவகத்தில் வலிமை பெற்றுள்ளது என்று பார்த்து பலன் எடுக்க வேண்டும்.
உதாரணமாக வர்கோத்தமம் பெற்ற கிரகம் கேந்திரம் திரிகோணம் பணபரஸ்தானத்தில் இருந்தால் நன்மை மாற்றாக மறைவு ஸ்தானத்தில் இருந்தால் நல்லதல்ல.
மேற்கூறியது போல வர்கோத்தமம் பெற்ற கிரகம் வலிமையாக இருக்கிறது என நேரடியாக எடுத்துக்கொள்ள கூடாது. ராசிக்கட்டத்தில்
ராசியிலும் நவாம்சத்தில் ஒரே இடத்தில் லக்கினம் இருந்தால் அது வர்கோத்தம லக்கினம் ஆகும்.
தெரிந்துகொள்க
- கேந்திரம் ஸ்தானம் என்றால் என்ன?
- திரிகோணம் என்றால் என்ன?
- அடிப்படை ஜோதிடம்
- ஜாதக கட்டம் விளக்கம்
- ராசி அதிபதி பொருத்தம்
- ஆண் ராசி பெண் ராசி எவை
- 12 ராசி கடவுள்
- நட்சத்திர ராசி கற்கள்
- சர ராசிகள் மற்றும் சர லக்னம்
- Video: அடிப்படை ஜோதிடம் கற்க