வக்கிரம் என்றால் என்ன?

இந்த பதிவில் ஜோதிடத்தில் வக்கிரம் என்றால் என்ன? மற்றும் வக்கிரம் பொருள் என்ன என்று தெரிந்துகொள்வோம். வக்கிரம் அடைந்த கிரகம் பொதுவாக தான் நேர் சஞ்சாரத்தில் நின்று கொடுக்கும் பலனுக்கு எதிராக பலன் கொடுக்கும். அதேபோல வக்கிர கிரகம் நின்ற பாவகத்தையும் ஆய்வு செய்தே பலன் சொல்ல வேண்டும்.

வக்கிரம் என்றால் என்ன
வக்கிரம் என்றால் என்ன

ஜோதிடத்தில் சூரியன் சந்திரனுக்கு வக்கிரம் நிலை கிடையாது. ராகு கேது இரண்டும் கடிகார முள் எதிர்திசையில் சுற்றி வலம் வருகின்றன ஆதலால் அதற்கும் வக்கிரம் எடுத்துக்கொள்ளக்கூடாது. ஆனால் செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் சூரியனின் கதிவீச்சில் இருந்து விடுபட்டு சில நேரங்களில் பின்னோக்கி நகர்ந்து வக்கிரம் என்னும் நிலையை அடைகின்றன.

ஜாதகம் எழுதும்பொழுது சில கிரகங்களுக்கு (வ) என்று ஜாதகம் கணிப்பவர் எழுதியிருப்பார். அப்படி எழுதப்பட்ட ஜாதக கட்டத்தில் உள்ள கிரகம் வக்கிரம் ஆகியுள்ளது என்று அர்த்தம். அதாவது சரியான பாதையில் சுழல வேண்டிய கிரகம், சிறிது பின்னோக்கி சுழல்கிறது என்று அர்த்தம்.

வக்கிரம் என்பது ஒருவரது மனம், சிந்தனைகளை குறிக்கும். ஜோதிடர்களுக்கும் சில நேரங்களில் குழப்பத்தை கொடுப்பது இந்த வக்கிர கிரகங்கள் ஆகும். அவை நேர் சஞ்சாரத்தில் இருப்பதைவிட வக்கிர கதியில் பலம் பெறுகின்றன. அவை அதிக சுப பலனையும் கொடுக்கலாம் அல்லது கெடு பலனையும் கொடுக்கலாம்.

ஜோதிடம் அடிப்படை விதிகள் படி பொதுவாக சூரியனுக்கு 6, 7, 8 ஆம் இடங்களில் வரும்பொழுது கிரகங்கள் வக்கிரம் அடையும். இதில் இராகு, கேது, சூரியன், சந்திரன் தவிர மற்ற கிரகங்களில் வக்கிரம் அடையும்.

குரு, சனி கிரகங்கள் சூரியன் நிற்கும் ராசியிலிருந்து 5,6,7,8,9 ஆகிய ராசிகளில் நிற்கும்போது வக்கிர நிலையை அடைகின்றன.

செவ்வாய், சூரியன் நின்ற ராசியிலிருந்து 6,7,8ஆவது ராசிகளில் நிற்கும்போது வக்கிரம் அடைகிறது.

சுக்கிரன், புதன் கிரகங்களின் வக்கிர நிலையை பஞ்சாங்க உதவியுடனே தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் வக்கிரமடைந்த கிரகங்கள் முக்கியதுவம் பெறுகின்றன. அவை தான் நின்ற பாவகத்தில் இருந்து கொடுக்க வேண்டிய பலனை எதிரான பலனையே அதிகம் வழங்கும்.

தெரிந்துகொள்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்