Skip to content
Home » ஜோதிடம் » லக்கின சுபர் பாவர் கண்டறிவது

லக்கின சுபர் பாவர் கண்டறிவது

ஜோதிடத்தில் லக்கின சுபர் மற்றும் லக்கின பாவர் (லக்கின அசுபர்) கண்டறிவது எப்படி என்று தெரிந்துகொள்வோம்.

லக்கின சுபர் பாவர்
லக்கின சுபர் பாவர்

நவகோள்களில் சூரியன், ராகு மற்றும் கேதுவை தவிர மற்ற 6 கிரகங்களை இரண்டாக பிரித்துக்கொள்வோம். அதில் சந்திரன், செவ்வாய், குரு ஆகியோர் A அணி எனவும். புதன், சுக்கிரன், சனி ஆகியோர் B அணி எனவும் பிரித்துக்கொள்ள வேண்டும்.

இதில் ஒரே அணியில் இடம் பெற்றவர்கள் தங்களுக்குள் நட்பு மற்றும் லக்கின சுபர் ஆவார்கள். அதேபோல எதிர் அணியில் இருக்கும் கிரகங்கள் லக்கின பாவர் அல்லது லக்கின அசுபர் ஆவார்கள்.

உதாரணமாக, மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் அதிபதி என்பதால் மேஷ லக்கினத்திற்கு சனி, புதன், சுக்கிரன் பகை அல்லது லக்கின அசுபர் ஆவார்கள். ரிஷப ராசியில் பிறந்ததவர்களுக்கு சுக்கிரன் அதிபதி ஆவார்கள். ஆதலால், செவ்வாய், சந்திரன், குரு லக்கின பாவர் (லக்கின அசுபர்) ஆவார்.

ராகு கேது கிரகங்களை பொறுத்தவரையில் அவர்கள் எந்த ராசியில் நிற்கிறார்களோ அந்த ராசியின் அதிபதி எந்த அணியோ அந்த அணிக்கு சுபர் மற்ற அணிக்கு பாவர் ஆவார்கள்.

உதாரணமாக, மேஷத்தில் ராகு, துலாமில் கேது என வைத்துகொள்வோம். மேஷ ராசி அதிபதி செவ்வாய் ஆவார், ஆகவே, ராகு A அணிக்கு லக்கின சுபராகவும் B அணிக்கு பாவராகவும் செயல்படுவார். அதேபோல கேது துலாமில் நிற்க அதன் அதிபதி சுக்கிரன் ஆவார், ஆதலால் கேது B அணிக்கு லக்கின சுபராகவும் A அணிக்கு பாவராகவும் செயல்படுவார். இதே போல ஒவ்வொரு சுய ஜாதகத்திற்கும் கணக்கில் கொள்ள வேண்டும்.

இருப்பினும் நடைமுறையில், ராகு கேது இருவரும் B அணிக்கே சுபராகவும் A அணிக்கு பாவராகவும் செயல்படுகிறார்கள்.

சூரியன் A அணிக்கு லக்கின சுபராகவும், B அணிக்கு லக்கின பாவராகவும் செயல்படுவார்.

கடைசியாக எளிதாக புரிய நடைமுறையில் உள்ள லக்கின சுபர் அமைப்பு இது ஆகும்..

அணி A – சூரியன், சந்திரன், செவ்வாய், குரு
அணி B – சுக்கிரன், புதன், சனி, ராகு, கேது

மேற்கூறிய விஷயங்களின் படி, ஒவ்வொரு ஜாதகத்திலும் லக்கின சுபர் மற்றும் பாவர் என்று கணக்கிட்டுக்கொள்ள வேண்டும்.

தெரிந்துகொள்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்