Skip to content
Home » ஜோதிடம் » ராசி சின்னங்கள் மற்றும் பலன்கள்

ராசி சின்னங்கள் மற்றும் பலன்கள்

Rasi Symbols – ராசி சின்னங்கள் மற்றும் பலன்கள் (12 ராசிகளும் உருவங்களும்) – இந்த பதிவில் 12 ராசிகளின் சின்னங்கள்(விலங்குகள்உருவங்கள்/ராசி அடையாளம்) மற்றும் அதனை வைத்து பொதுவான பலன்கள் எப்படி எடுக்க வேண்டும் என்று தெரிந்துகொள்வோம்.

ராசி சின்னங்கள்
ராசி சின்னங்கள்

மேஷம் – ஆடு

ஆடு அசைபோடுவது போல எப்போதும் ஏதாவது சிந்தனையுடன் இருப்பார்கள். அவசரமாக யோசித்துவிட்டு பின்பு அந்த முடிவுக்காக வருத்தப்படுவார்கள்.

ரிஷபம் – எருது

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு பாசம் அதிகம், சுவையான உணவு உன்ன ஆசை படுவார்கள். அதேபோல மோகமும் அதிகமாக இருக்கும்.

மிதுனம் – இரட்டையர் வீணையுடன் கூடிய பெண் மற்றும் கதையுடன் கூடிய ஆண்

எப்பொழுதும் இரட்டைத்தன்மையுடன் இருப்பார்கள், கலப்பானவர்கள், அதிகம் பேசுவது பிடிக்கும்

கடகம் – நண்டு

தாய்ப்பாசம் அதிகம் உள்ளவர்கள். குடும்பத்தை பற்றிய சிந்தனையுடன் இருப்பார்கள். ருசியாக சமைத்து சாப்பிட நினைப்பார்கள்.

சிம்மம் – சிங்கம்

பெயர் புகழுக்காக அதிகம் உழைப்பார்கள். யாராவது இவரை புகழ்ந்தால் போதும் கொடை வள்ளலாக மாறிவிடுவார்கள். குடும்பத்திலோ நட்பு வட்டாரத்திலோ இவர்களை முன்னிறுத்தியே செயல்பாடுகள் நடைபெறும். தலைமைப்பண்பு குணம் உடையவர்கள்.

கன்னி – கதிர் குலை மற்றும் அக்னியும் கொண்ட பெண்

இவர்கள் நகைச்சுவையாக பேசும் பழக்கம் உடையவர்கள். ரகசியத்தை மறைக்க தெரியாதவர்கள். கேளிக்கைகளில் அதிக ஈடுபாடு உடையவர்கள். தன்னை இளமையாக காட்டிக்கொள்வார்கள்

துலாம் – தராசு கொண்ட ஆண்

நீதிமான்கள், எப்பொழுதும் யாராக இருப்பினும் நியாயமாக பேசும் பண்பு கொண்டவர்கள். அதனாலேயே பகையை சம்பாதித்து கொள்வார்கள். சில சமயங்களில் இவருடைய விளக்கங்கள் தவறாகி அவமானப்படும்படி ஏற்படும். சாமர்த்தியசாலிகள்

விருச்சிகம் – கருந்தேள்

சுறுசுறுப்பானவர், நல்ல மனிதர்கள், பாசம் அதிகம் கொண்டவர்கள். தாயினால் ஆதாயம் உண்டு. அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனம் படைத்தவர்கள். நன்றாக பேசி உரையாடினாலும் தேள் போல சில நேரங்களில் மனதை கஷ்டப்படுத்தும் வார்த்தைகளை பேசிவிடுவார்கள்.

தனுசு – இடுப்புக்கு கீழ் குதிரையும், இடுப்புக்கு மேல் வில் பிடித்த மனிதன்

திறமைசாலிகள, தானதர்ம சிந்தனை கொண்டவர்கள், எந்த செயலிலும் குறிக்கோளுடன் செயல்படுவார்கள்.

மகரம் – சுறா மீன்/முதலை

பொதுவாக சோம்பேரியாக காணப்பட்டாலும் தன் தேவைக்கு என வரும்போது மிகவும் வேகமாக செயல்படுவார்கள். அதாவது முதலை எப்படி தன இரையை பிடிக்கும்போது துரிதமாக செயல்படுகிறதோ அதேபோன்று.

கும்பம் – குடம் (குடத்துடன் கூடிய ஆண்)

ரகசிய காப்பான்கள். ரகசியத்தை வெளிய சொல்லமாட்டார்கள். அடுத்தவர்களை பற்றியும் குறைகூறும் எண்ணமும் இருக்காது. இவர்களுக்கு எப்பொழுதும் சேமிக்கும் குணம் உண்டு. யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக ஒரு சேமிப்பை வைத்திருப்பார்கள்.

மீனம் – இரட்டை மீன்

மிகவும் தெளிவானவர்கள், எப்போதும் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். நல்ல குணம் கொண்டவர்கள். குடும்பத்திற்கு முக்கியத்துவம் தருவார்கள். ஆடம்பரப்பிரியர்கள். ஒரு பொருள் வாங்கினாலும் பலமுறை விசாரித்து விலை உயர்ந்தவை மேலே வாங்க விருப்பம் கொள்வார்கள்.

Keywords: Rasi Symbols | Rasi Symbol | ராசி சின்னங்கள் | ராசி அடையாளம் | Rasi Adaiyalam | Rasi Sinnam | ராசி உருவங்கள்

தெரிந்துகொள்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்