யோகங்கள் கரணங்கள்

Digital Marketing Company in Trichy
BSR Solutions - Digital Marketing Company in Trichy

இந்த பதிவில் யோகங்கள் கரணங்கள் என்றல் என்ன? மொத்தம் எத்தனை வகை யோகங்கள் மற்றும் காரணங்கள் உள்ளன என்று தெரிந்துகொள்வோம்.

யோகங்கள் கரணங்கள்
யோகங்கள் கரணங்கள்

யோகங்கள்

ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள மொத்த தூரம் ஆகும். அதாவது ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து சூரியன் உள்ள தூரத்தையும், சந்திரன் உள்ள தூரத்தையும் கூட்டினால் வருவது யோகமாகும்.

1. விஷ்கம்பம்
2. ப்ரீதி
3. ஆயுஷ்மான்
4. சௌபாக்கியம்
5. சோபனம்
6. அதிகண்டம்
7. சுகர்மம்
8. திருதி
9. சூலம்
10. கண்டம்
11. விருத்தி
12. துருவம்
13. வியாகாதம்
14. ஹர்ஷனம்
15. வஜ்ரம்
16. சித்தி
17. வியதீபாதம்
18. வரீயான்
19. பரீகம்
20. சிவம்
21. சித்தம்
22. சாத்தியம்
23. சுபம்
24. சுப்பிரமம்
25. பிராம்யம்
26. ஐந்திரம்
27. வைதிருதி

அதிலும் சுப நாமயோகங்கள் அசுப நாமயோகங்கள் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன.

சுப நாமயோகங்கள் – ப்ரீதி, ஆயுஷ்மான், சௌபாக்கியம், சோபனம், சுகர்மம், விருத்தி, ஹர்ஷணம், வஜ்ரம், சித்தி, வரீயான், சிவம், சித்தம், சாத்தியம், சுபம், சுப்பிரமம், பிராம்யம், ஐந்திரம் ஆகியவை சுப யோகங்களாகும்.

அசுப நாமயோகங்கள் – விஷகம்பம், அதிகண்டம், திருதி, சூலம், கண்டம், துருவம், வ்யாகாதம், வியதீபாதம், பரீகம் மற்றும் வைதிருதி ஆகியவை அசுப நாமயோகங்கள் ஆகும்.

கரணங்கள்

கரணம் என்பது ஒரு திதியில் பாதி அளவை குறிக்கும். 6 பாகை கொண்டது ஒரு கரணமாகும். எனவே இரண்டு கரணம் கொண்டது ஒரு திதி ஆகும்.

1. பவம்
2. பாலவம்
3. கௌலவம்
4. தைத்துலை
5. கரசை
6. வணிசை
7. பத்திரை
8. சகுனி
9. சதுஷ்பாதம்
10. நாகவம்
11. கிம்ஸ்துக்னம்

என 11 வகைப்படும்.

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்