முற்று வினை படர்க்கை வினைமுற்று

முற்று வினை படர்க்கை வினைமுற்று பற்றி இந்த பதிவில் பார்ப்போம்

1. முற்று வினையாவது, பால் காட்டும் விகுதியோடு கூடி நிறைந்து நின்று பெயரைக் கொண்டு முடியும் வினையாம்.

இம்முற்றுவினை கொள்ளும் பெயர்களாவன் பொவுட் பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், குணப்பெயர், தொழிற்பெயர் என்னும் அறுவகைப் பெயருமாம்.

உதாரணம்.
செய்தான் சாத்தன் நல்லன் சாத்தன்
குளிர்ந்தது நிலம் நல்லது நிலம்
வந்தது கார் நல்லது கார்
குவிந்தது கை நல்லதுகை
பரந்தது பசப்பு நல்லது பசப்பு
ஒழிந்தது பிறப்பு நல்லது பிறப்பு

படர்க்கை வினைமுற்று

2. படர்க்கை வினைமுற்று, உயர்திணையாபாலொருமைப் படர்க்கை வினைமுற்றும், உயர்திணைப் பெண்பாலொருமைப் படர்க்கை வினைமுற்றும், உயர்திணைப் பலர்பாற் படர்க்கை வினைமுற்றும், அஃறிணையொன்றன் பாற் படர்க்கை வினைமுற்றும், அஃறிணைப் பலவின்பாற் படர்க்கை வினைமுற்றும் என ஐந்து வகைப்படும்.

3. அன், ஆன், என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள், உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினைமுற்றுமாம்.

உதாரணம்.

இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி அவன்
நடந்தனன்
நடந்தான் நடக்கின்றனன்
நடக்கின்றான் நடப்பன்
நடப்பான் குழையன்
குழையான்

4. து, று, என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள், உயர்திணைப் பெண்பாலொருமைப் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினை முற்றுமாம்.

உதாரணம்.

இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி அவள்
நடந்தனள்
நடந்தாள் நடக்கின்றனள்
நடக்கின்றாள் நடப்பள்
நடப்பாள் குழையள்
குழையாள்

5. அர், ஆர் என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள், உயர்திணைப் பலர்பாற் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினை முற்றுமாம்.

உதாரணம்.

இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி அவர்
நடந்தனர்
நடந்தார் நடக்கின்றனர்
நடக்கின்றார் நடப்பர்
நடப்பார் குழையர்
குழையார்

செய்யுளிலே பலர்பாற் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றுக்கு, இவ்விகுதிகளின்றி, ப, மார் என்னம் விகுதிகளும் வரும். அவை இடைநிலையின்றித் தாமே எதிர் காலங் காட்டுதல் பதவியலிற் பெறப்பட்டது.

உதாரணம்.
நடப்ப நடமார் – அவர்
இவ்விரண்டற்கும் நடப்பார் என்பது பொருள்.

6. து, று என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள் அஃறிணையொன்றன் பாற் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினைமுற்றுமாம். இவற்றுள், றுவ்விகுதி, இறந்தகால விடைநிலையோடன்றி, நிகழ்கால வெதிர்காலவிடைநிலைகளோடு கூடி வராது.

உதாரணம்.

இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி அது
நடந்தது
கூயிற்று நடக்கின்றது
அற்று

றுவ்விகுதி, வந்தன்று, உண்டன்று, சென்றன்று எனத்தடற வொற்றிடைநிலைகளின் முன்னும், புக்கன்று விட்டன்று, பெற்றன்று, என விகாரப்படடிறந்நகாலங் காட்டுங் கு, டு, று வீற்றுப் பகுதிகளின் முன்னும், அன்சாரியை பெற்று வரும். இவை, முறையே, வந்தது, உண்டது, சென்றது, புக்கது, விட்டது, பெற்றது எனப் பொருள்படும். றுவ் விகுதி, கூஙிற்று, ஓடிற்று என இன்னிடை நிலையின் முன் மாத்திரம், சாரியை பெறாது வரும்.

7. அற்று, இற்று, எற்று என்பவை, சுட்டினும் வினாவினும் வந்த வினைக்குறிப்பு முற்றுக்கள். இவை,

தந்தின்று என, றுவ்விகுதி தகரவிடைநிலையின் முன் இன்சாரியை பெற்றதன்றோ எனின்; அன்று. அது, தந்தன்று, என்னும் உடன்பாட்டு வினையை மறுத்தற்குத் தகரவிடைநிலைக்கும் றுவ் விகுதிக்கும் இடையே இல்லென்னும் எதிர்மறையிடை நிலையேற்று வந்த மறைவினையென்றறிக. தந்தின்று தந்ததில்லையென பொருள்படும்.

முறையே, அத்தன்மைத்து, இத்தன்மைத்து, எத்தன்மையித்து எனப் பொருள் படும்.

டுவ் விகுதியை இறுதியில் உடைய வினைச் சொல் அஃறிணையொன்றன்பாற் படர்க்கை குறிப்பு வினைமுற்றாம், இவ் விகுதி தெரிநிலைவினைமுற்றிற்கு இல்லை.

உதாரணம். பொருட்டு (ஸ்ரீ பொருளையுடையது)
ஆதிரைநாட்டு (ஸ்ரீ ஆதிரை நாளினிடத்தது)
குண்டுகட்டு (ஸ்ரீ ஆழமாகிய கண்ணையுடையது) அது

8. அ என்னம் விகுதியை இறுதியில் உடைய வினைச்சொல், அஃறிணைப் பலவின்பால் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினை முற்றுமா.

இவ்விகுதி, அன்சாரியை பெற்றும், பெறாதும், வரும்

உதாரணம்.

இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி. அவை
நடந்தன
நடந்த நடக்கின்றன
நடக்கின்ற நடப்பன
நடப்ப கரியன
கரிய

9. ஆ என்னும் விகுதியை இறுதியில் உடைய வினைச் சொல், அஃறிணைப் பலவின்பாற் படர்க்கை, யெதிர்மறைத் தெரிநிலைவிணை முற்றாம். இவ்விகுதி குறிப்பு வினை முற்றிற்கு இல்லை.

உதாரணம்.

நடவா — அவை

10. நடப்ப என்னும் உயர்திணைப் பலர்பாற்படர்க்கைத் தெரிநிலை வினை முற்று, வேறு, நடப்ப என்னும் அஃறிணை பலவின்பாற் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றும், வேறு, முன்னையது, நட என்னும் பகுதியும், பா என்னும், எதிர்கால பரர்பற்படர்க்கை விகுதியுமாகப், பகுக்கப்பட்டு வரும்.

பின்னையது, நட என்னும் பகுதியும், இப்பென்னும் எதிர்காலவிடைநிலையும், ஆ என்னும் பலவின்பாற் படர்க்கை விகுதியுமாக, பகுக்கப்பட்டு வரும்.

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்