Skip to content
Home » தமிழ் இலக்கணம் » முன்னிலை ஏவல் வினைமுற்று

முன்னிலை ஏவல் வினைமுற்று

முன்னிலை ஏவல் வினைமுற்று

முன்னிலை ஏவல் வினைமுற்று என்பது முன்னிலை ஏவல் ஒருமை வினைமுற்று, முன்னிலை ஏவல் பன்மை வினைமுற்று என இரு வகைப்படும்.

ஆய், இ, ஆல், ஏல், ஆல், என்னும் விகுதிகளை இருதியில் உடைய வினைச்சொற்களும் ஆய் விகுதி புணர்ந்து குன்றிப் பகுதி மாத்திரையாய் நிற்கும் விசை; சொற்களும் முன்னிலை ஏவல் ஒருமை வினைமுற்று தெரிநிலை வினைமுற்றுக்களாம். இவற்றுல் அல், ஏன், ஆல், என்னும் மூன்று விகுதிகளும் எதிர்மறையிடத்து வரும்.

உதாரணம்.

உதாரணம். உண்ணாய்
உண்ணல் உண்ணுதி
உண்ணேல் உண்
மாறல் நீ

ஏவல் விகுதிகள் இடைநிலையின்றி தாமே எதிர்காலங்காட்டல் பதவியலிற் பெறப்பட்டது.

எதிர்மறை ஒருமை வினைமுற்றுக்கள், உண்ணாதே, உண்ணாதீ, என எதிர்மறை ஆகாரவிடை நிலையின் முன் தகரவெழுத்து பெற்றோடு எகர விகுதி இகரவிகுதிகளுள் ஒன்று பெற்றும் வரும்.

ஈர், உம், மின், என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள் முன்னிலை ஏவல் பன்மைத் தெரிநிலை வினைமுற்றுக்களாம்.

உதாரணம்.
உண்ணீர், உண்ணும் உண்மின் – நீர்

எதிர்மறை ஏவல் பன்மை வினைமுற்றுக்கள் உண்ணமின், நடவன்மின் என, பகுதிக்கும் வின் விகுதிக்கும் இடையே எதிர்மறை அல் இடைநிலை பெற்று வரும்.

(1) உண்ணாய், என்னும் முன்னிலையொருமை யெதிர்மறை தெரிநிலை வினைமுற்று வேறே: உண்ணாய் என்னும், முன்னிலையேவலொருமை தெரிநிலை வினைமுற்றும் வேறே: முன்னையது உண்ணென்னும் பகுதியும் பெற்று அகரவிடைநிலை கேட்டு முடிந்நது. பின்னையது உன் என்னும் பகுதியும் ஆய் விகுதியும் பெற்று முடிந்தது.

(2) உண்ணீர் என்னும் முன்னிலைப் பன்மையெதிர்மறை தெரிநிலை வினைமுற்றும், வேறே: உண்ணீர் என்னும் முன்னிலையேவற் பன்மைத் தெரிநிலைவினைமுற்று வேறே: முன்னையது உண் என்னும் பகுதியும் ஆவன என்னும் எதிர்மறை இடைநிலையும் ஈர் விகுதியும் பெற்று இடைநிலை ஆகாரம் கேட்டு முடிந்தது. பின்னையது உண் என்னும் பகுதியும் ஈர் விகுதியும் பெற்றும் முடிந்தது.

Read More

 

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்