Skip to content
Home » ஜோதிடம் » முகூர்த்தக்கால் நடுதல்

முகூர்த்தக்கால் நடுதல்

முகூர்த்தக்கால் நடுதல் – திருமணம் நடக்கும்பொழுது நிறைய வேலைகள் இருந்தாலும் நிச்சயதார்த்தம் முடிந்தபின்பு திருமணத்திற்கு முந்தைய ஒற்றை படை நாட்களில் சுப நாள் மற்றும் நேரத்தை தேர்ந்தெடுத்து நடுதல் வேண்டும்.

முகூர்த்தக்கால் நடுதல்
முகூர்த்தக்கால் நடுதல்

முகூர்த்தக்கால் நடுவது ஒரு சுபகாரியத்தின் தொடக்கம் ஆகும். எனவே, நல்ல சுபநாளில் சுபநட்சத்திரம் வருவது போல அமைக்க வேண்டும்.

தெரிந்துகொள்க: திருமண பொருத்தம் | நட்சத்திர பொருத்தம் | பெண் பார்க்கும் நிகழ்ச்சி

தேர்வு செய்த நல்லதொரு நாளில் சுபமுகூர்த்த லக்கினத்தை முகூர்த்தக்கால் நட நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு நல்ல நேரத்தில் முகூர்த்தக்கால் நடும் நேரம் முதல் திருமணம் முடியும் வரை உள்ள காலம் நல்ல காலமாக கருதப்படுகிறது.

ஜாதத்தில் சில பொருத்தங்கள் இல்லாமல் இருந்தாலும் அல்லது ஏதாவது குறை இருந்தாலும் கூட சுபகாரியங்கள்(முகூர்த்தக்கால் நட) தொடங்கும் நேரம் சரியாக அமைந்தால் எடுத்த காரியம் தடை இல்லாமல் நடக்கும்.

முகூர்த்தக்கால் நட நாள் குறிப்பது

ஞாயிறு, திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளாக இருக்க வேண்டும்.

துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி மற்றும் ஏகாதசி ஆகிய திதிகளாக இருக்க வேண்டும்.

அஸ்வினி, ரோகிணி, புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், சித்திர, சுவாதி நட்சத்திரங்களாக இருப்பது உத்தமம்.

அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், உத்திரட்டாதி மற்றும் ரேவதி நட்சத்திரங்களாக அமைவது உத்தமம்.

தேர்ந்தெடுத்த சுப லக்கினத்திற்கு கேந்திரத்தில் இயற்கை பாவ கிரகங்கள் இருக்ககூடாது.

இவ்வாறு முகூர்த்தக்கால் நட சுபநாள் சுப நேரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

தெரிந்துகொள்க:

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்