மாரகாதிபதி என்றால் என்ன?

மாரகாதிபதி என்றால் என்ன?
இந்த பதிவில் ஜோதிடத்தில் மாரகாதிபதி என்றால் என்ன? மற்றும் எந்த ராசிக்கு யார் யார் மாரகாதிபதி என்று விரிவாக பார்ப்போம்.
வேத ஜோதிடத்தில் ஜென்ம லக்கினம் தொடக்கி எண்ணும்பொழுது 2,3,7,8,12ஆம் வீடுகள் மாறாக ஸ்தானம் ஆகும். இந்த வீடுகளின் அதிபதிகள் மாரகாதிபதிகள் ஆவார்கள்.
இருப்பினும் இன்றைய காலகட்டத்தில் லக்கினத்தில் இருந்து 2,7ஆம் வீடுகள் மாரக ஸ்தானம் என்றும் அதன் அதிபதிகளையே மாரகாதிபதி என நடைமுறையில் எடுத்துக்கொள்கிறார்கள். ஏனென்றால், 2,7ஆம் அதிபதிகள் கடுமையான மாரகாதிபதிகள் ஆவார்கள்.
லக்கின ராசியும் மாரகாதிபதியும்
குறிப்பு: மாரகாதிபதிகள் லக்கின சுபராக வரும்போது மார்கத்தை ஏற்படுத்துவதில்லை. அதனை மாரகாதிபதியாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இருப்பினும் கீழே 2,7ஆம் அதிபதிகள் மாரகாதிபதி என கொடுத்துள்ளோம்.
மேஷம் – சுக்கிரன்
ரிஷபம் – புதன், செவ்வாய்
மிதுனம் – சந்திரன், குரு
கடகம் – சூரியன், சனி
சிம்மம் – புதன், சனி
கன்னி – சுக்கிரன், குரு
துலாம் – செவ்வாய்
விருச்சிகம் – குரு, சுக்கிரன்
தனுசு – சனி, புதன்
மகரம் – சந்திரன்
கும்பம் – குரு, சூரியன்
மீனம் – செவ்வாய், புதன்
1). மாரகர் என்றால் என்ன?
2,7ஆம் வீடுகள் மாரக ஸ்தானம் என்றும் அதன் அதிபதிகளையே மாரகர் என்று அழைப்பர்.
2) மாரக ஸ்தானம் என்றால் என்ன?
லக்கினத்தில் இருந்து 2,7ஆம் வீடுகள் மாரக ஸ்தானம் என்றும் அதன் அதிபதிகளையே மாரகாதிபதி என்று அழைப்பர்.
தெரிந்துகொள்க
- லக்கின சுபர் பாவர் கண்டறிவது
- திருஷ்டி பலம்
- ஷட்பலம் என்றால் என்ன?
- ஆத்மகாரகன் என்றால் என்ன?
- பரிவர்த்தனை யோகம்
- கிரகயுத்தம் என்றால் என்ன?
- Video: அடிப்படை ஜோதிடம் கற்க