மாடி வீட்டு தோட்டம்

மாடி தோட்டம்

இன்றைய சூழலில் அனைவருக்கும் மாடி தோட்டம் அமைப்பது குறித்து ஆவல் எழுந்துள்ளது. ஒவ்வொருவரும் கீரை தோட்டம், மூலிகை தோட்டம், காய்கறி தோட்டம், பூக்கள் தோட்டம் இன்னும் பலவற்றை மாடியில் பயிரிடுவும், சத்தான உணவை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழவும் விரும்புகிறார்கள். அதற்காக பல்வேறு இடங்களில் ஆலோசனையும் நடத்தி முயற்சியும் மேற்கொள்கிறார்கள், இதனை எவ்வாறு எளிதாக அமைக்கலாம் என்று இக்கட்டுரையில் காண்போம்.

தேவையானவை

மாடி தோட்டம் அமைக்க முதலில் தேவையானவை மண்தொட்டி அல்லது சிமெண்ட் தொட்டி, பிளாஸ்டிக் சாக்கு, பிளாஸ்டிக் குப்பை பாக்ஸ், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் செடி வைப்பதற்கேற்ப வெட்டி கொள்ள வேண்டும். செம்மண், மணல், தண்ணீர், விதை அல்லது வேருடன் கூடிய செடி.

இவைகள் இருந்தாலும் சூரியஒளி இன்றியமையாத ஒன்றாகும், ஆதலால் சூரிய ஒளி படும்படி அமைக்க வேண்டும், அதிலும் வெற்றிலை போன்ற கொடிகள் சூரிய ஒளி நேரிடையாக படுதலை தவிர்க்க வேண்டும், சூரிய நிழலிலே தான் இக்கொடி வளரும்.

செடிகள் வளர்க்க செம்மண் சிறந்தது, செம்மண்ணில் இரும்பு ஆக்ஸைடு உள்ளது. பொதுவாக செம்மண் எல்லா இடத்திலும் கிடைக்காது, ஆதலால் இதனுடன் மணல் சேர்த்து குழைத்து கொள்ளலாம். அல்லது இடிந்த வீட்டிலோ, காலி இடங்களில் குழி தோண்டும்பொழுது கிடைக்கும் மண், ஊரை விட்டு எப்போதாவது சுற்றுப்புறம் செல்லும் பொழுது எடுத்துக் கொண்டாலும் நல்லது.

madi thottam

மாடி வீட்டு தோட்டம்

முதன்மையாக கொண்டு வந்த மணலில் கலந்துள்ள தூசு குப்பைகளை நீக்க வேண்டும். மாட்டுச்சாணம் சிறந்த இயற்கை உரம் முடிந்தால் அதனை மண்ணுடன் கலந்து குழப்பிக் கொள்ளவும். குழப்பிய மண்ணை தொட்டியிலும் பிளாஸ்டிக் சாக்கு பை, பிளாஸ்டிக் பாட்டில் களிலும் படத்தில் கட்டியுள்ளதை போல் நிரப்பி வைத்து வேண்டும்.

இயற்கை உரங்கள்

பெரும்பாலும் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் உள்ளிருக்கும் கொட்டைகளை (விதைகளை) பயன்படுத்திக் கொள்ளலாம். புதினா, கொத்தமல்லி, கீரை வகைகள் அதனை வேருடன் நட்டு வைத்தாலே போதும், சில மூலிகை செடிகளும் இதே போல தான்.

இதற்கு உரங்களாக நாம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் வடித்த கஞ்சி, காய்கறி தோள்கள், பழத்தோல்கள், வெங்காயம் மற்றும் பூண்டு தோள்களை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், வெப்பம் கொட்டை அதன் இலைகளை பயன்படுத்தலாம், இது சிறந்த பூச்சி கொல்லியாகவும் செயல்படும். இனி இனிதே மாடி வீட்டு தோட்டம் அமைக்கலாம்.

கீரை வகைகளின் மருத்துவ குணங்கள்
அபயம் - பாரதியார்