மல்லிகை பூ மருத்துவ குணம்

மல்லிகை பூ பயன்கள்

மல்லிகை பூ தினமும் உட்கொண்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

சிறுநீரக கற்கள் நீங்க மல்லிகை பூவை வெயிலில் காய வைத்து பொடி செய்து தினமும் தேனீரில் கலந்து குடிக்கலாம்.

மல்லிகை மொட்டுக்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீரக பிரச்சனை கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்ற பால் வினை நோய்கள் நீங்கும்.

மல்லிகை பூவை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணீரில் வளரும் சதை குறையும், பார்வையும் தெளிவாகும்.

மல்லிகை பூக்களை நீர்விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் குடலில் உள்ள புழுக்கள் அழிந்து குடல் சுத்தமாகும்.

பெண்களுக்கு

தாய்மார்களுக்கு மார்பில் கட்டியுள்ள்ள பாலை வெளியேற்றவும் வழியை நீக்கவும் மல்லிகைப்பூ சிறந்த மருந்தாகும். மல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் பற்று போட்டால் வலி குறையும்.

மாதவிலக்கின் பொழுது ஏற்படும் ரத்த போக்கினால் சோர்வடையும் பொழுது பூவை நீரில் கொதிக்க வைத்து ஆறியவுடன் குடித்தால் சோர்வு நீங்கும்.

மல்லிகை இலை

மல்லிகை செடியின் இலையை எடுத்து சாறு பிடித்து பற்று போட்டால் கால் ஆணி குணமாகும்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

Read More :- Thirumana Porutham in Tamil  | Wedding Anniversary Wishes in Tamil

Video: அம்மா பற்றிய வரிகள்

You may also like...