மறைவு ஸ்தானம் என்றால் என்ன?

ஜோதிடத்தில் மறைவு ஸ்தானம் என்றால் என்ன? அதனுடைய விளக்கம் என்ன என்றும் இந்த பதிவில் பார்ப்போம். ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 3,6,8,12ஆம் பாவகங்கள் “மறைவு ஸ்தனங்கள்” அல்லது “துர் ஸ்தனங்கள்” ஆகும்.

மறைவு ஸ்தானம்

மறைவு ஸ்தானம்

இந்த பாவகங்களும் அதில் உள்ள கிரகங்கள் மற்றும் அந்த பாவகங்களின் அதிபதிகள் ஜாதகருக்கு அசுப பலன்களை வழங்குவார். ஒருவரின் கர்ம வினைப்படி அனுபவிக்க வேண்டிய துன்பங்களை பரிபூரணமாக வழங்குவது இந்த மறைவு ஸ்தனங்கள் ஆகும்.

மறைவு ஸ்தானங்களில் 3ஆம் பாவகம் பாதி மறைவு ஸ்தானமாக கருதப்படுகிறது. அதனால் 3ஆம் பாவக அதிபதி மத்திமமான பாபராக அமைகிறார். 12ஆம் இடம் முக்கால் பங்கு மறைவு ஸ்தானமாக கருதப்படுகிறார். 6,8ஆம் பாவகங்கள் முழு மறைவு ஸ்தானமாக கருதப்படுகிறது. இதனுடைய அதிபதிகளும் ஜாதகருக்கு பாவாராக செயல்படுகிறார்.

3,6ஆம் பாவகங்களில் இயற்கை அசுப கிரகங்கள் எனும் ராகு, கேது சூரியன், செவ்வாய், சனி ஆகியவை நின்றாள் நன்மையே ஆகும். ஏனெனில் உபஜெய ஸ்தானம் எனும் 3,6,10,11 என்னும் ஸ்தானங்களில் இயற்கை அசுப கிரகங்கள் நின்றாள் நன்மை உண்டாகும்.

8ல் குருவோ சனியோ நின்றாள் ஆயுள் அதிகம்.

12ல் கேது நிற்க மோட்சம் என்ற கூற்று உண்டு.

தெரிந்துகொள்க

You may also like...