மன அழுத்தம் கையாளும் வழிகள்

முதலில் மன அழுத்தம் என்றால் என்ன என்று அறிய வேண்டும். பிறகு, மன அழுத்தத்தின் அறிகுறிகளை கண்டு அதனை சமாளிப்பதற்கான வழிகளை தெரிந்து தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும்.

மன அழுத்தத்தை புரிந்து கொள்ளுதல்

மன அழுத்தம் என்பது மனிதனின் உடல், மனம் மற்றும் உணர்வு பாதிக்கப்படுவதால் ஏற்படுவது. அதாவது நாம் ஒரு செயலை செய்ய முயற்சிக்கிறோம் அல்லது அச்செயலில் பற்று வைக்கின்றோம், எனில் அச்செயல் செய்ய முடியாமல் போனால் நம்முடைய மனம் பாதிப்படையும். சுலபமாக கூற வேண்டுமென்றால் மகிழ்ச்சியற்ற சூழ்நிலையில் உடலின் தோன்றும் எதிர்வினைதான் மன அழுத்தம். ஒரு செயலுக்கு முன்பும் பின்பும் ஒரு விதமான இனம் புரியாத படபடப்பு பயம் உண்டாகும். இத்தகைய வினை நடக்கும்பொழுது தகுந்த மருத்துவரை அணுகி முறையாக பயிற்சி மேற்கொண்டு சரிசெய்ய வேண்டும்.

மன அழுத்தத்திற்கான அடையாளங்கள்

முதலில் உணவு உண்ணும் முறையில் மாற்றம் ஏற்படும்.
வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போகும்.
தாழ்வு மனப்பான்மை உருவாகும்.
சிலர் அதிகமாக உண்பார்கள், சிலர் சரியாக உணவு உண்ண முடியாமல் அவதியுறுவார்கள்.
முக்கியமாக மூச்சு விடுவதில் சிரமம், இதயத்தில் காற்று நிரம்பி அடைத்தது போல தோன்றும்.
இரவில் சரியான தூக்கம் இருக்காது, சதா சிந்தனையில் மூழ்கியிருப்பார்கள்.
அதிகம் தண்ணீர் குடிப்பார்கள்.
அடிக்கடி சிறுநீர் மற்றும் மலம் கழிப்பார்கள்.
மலச்சிக்கல் ஒரு சிலருக்கு ஏற்படும்.
தலைவலி, வயிற்றுவலி மற்றும் உடல்வலி ஏற்படும்.
பய உணர்வு அதிகமாகும்.
கோபமும் எரிச்சலும் அமைதியற்ற மனநிலையும் தோன்றும்.
படபடப்பு ஏற்படும், இதய துடிப்பு அதிகமாகும்.

மன அழுத்தத்தை சமாளிக்க

தினமும் யோகா, தியானம், பிராணாயாம பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய இயலாதவர்கள் ஒரு நாளைக்கு 15 நிமிடங்களாவது எந்த சிந்தனையும் இன்றி அமைதியாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.

ஏற்கெனவே நான் உலகின் உயர்ந்த மருந்து என்ற தலைப்பின் பதிவிட்டுள்ளேன். இயற்கை ரசிப்பது தான் மிகச்சிறந்த மருந்து சூரிய உதயம், சூரிய மறைவு, இயற்கையின் அழகு ஆகியவற்றை ரசியுங்கள், நண்பர்களுடன் சுற்றுலா சென்று வாருங்கள்.

நமக்கு பிடித்தவரிடம் அதிக நேரம் செலவிடுவது மற்றும் அவருடன் நம்மை பற்றிய விஷயங்களை பகிர்ந்து கொள்வதால் மன அழுத்தம் குறையும்.

புத்தகம் வசிப்பது சிறந்த முறை புத்தகம் இல்லையென்றாலும் இன்டர்நெட்டில் நமக்கு தேவையான நல்ல தகவல்களை படிக்கலாம். நண்பர்களுடனோ குடுபத்தினருடனோ சிரித்து பழக வேண்டும். பிடித்த இசையையும் பாடலையும் கேட்பது சிறந்தது. இவ்வாறு சில வழிமுறைகளை கையாண்டு மன அழுத்தத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளுங்கள்.

நன்றி!  வாழ்க வளமுடன் !    வாழ்க வையகம் !

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்

You may also like...