மனை தோஷம் | மனை குற்றம் | வாஸ்து குற்றம்(Vastu Dosham) – இந்த பதிவில் மனைக்குத்து தோஷம் என்றால் என்ன? ஒரு மனைக்கு எந்தெந்த திசைகளிலிருந்து எவற்றினால் தோஷம் உண்டாகிறது என்று தெரிந்து கொள்வோம். மனை தோஷம் என்றால் நம் மனைக்கு சுற்றுப்புறங்களில் உள்ளவையாற்றினால் ஏற்படும் தோஷமே ஆகும் அவை கோயில் குத்து தோஷம், தெருக்குத்து தோஷம், சந்துக்குத்து தோஷம், எதிர்மனையில் உள்ளவர்களால் ஏற்படும் தோஷம் என பலவகைப்படும்.
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்

கோயில்குத்து தோஷம்
மனைக்கு 4 பக்கங்களிலும் ஏதாவது ஒரு பக்கத்தில் கூட வீட்டை ஒட்டி கோயில் இருக்க கூடாது, அவ்வாறு இருந்தால் அது கோயில் குத்து கோஷம் ஆகும்.
மனைக்கு வலப்பக்கத்தில் கோயிலிருந்தால் பொருள் இழப்பு ஏற்படும்.
மனைக்கு எதிரில் கோயில் இருந்தால் காரியத்தடை ஏற்படும். எந்த செயலிலும் தடை உண்டாகும்.
மனைக்கு பின்புறத்தில் கோயில் இருந்தால் செல்வவளம் குறையும் சேமிப்பு கரையும்.
தெருக்குத்து தோஷம்
வீட்டின் முன் வாசல் உள்ள பக்கத்தில் தெரு முனை வந்து முடியும்படி அமைந்திருந்தால் தெருக்குத்து தோஷம் உள்ள வீடு எனலாம்.
இந்த தெருக்குத்து தோஷமானது கிழக்கு, வடக்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு முதலிய திசைகளில் உண்டானால் பெரும்பாலும் கெடுதல்கள் உண்டாகாது.
ஆனால், இதுவே மேற்கு, தென்மேற்கு, தெற்கு திசைகளில் ஏற்பட்டால் கெடுப்பலனையே உண்டாக்கும். இவ்வாறு அமைந்துள்ளள வீட்டினை வாங்காமல் இருப்பது நல்லது.
சந்துக்குத்து தோஷம்
பல சந்துக்கள் சேருமிடத்தில் எதிரே வீடு இருந்தால் அதை சந்துக்குத்து தோஷம் என்று கூறுவர்.
இதுபோல சந்துக்குத்து தோஷம் உள்ள வீட்டில் வசித்தால் எந்த முன்னேற்றமும் இருக்காது. செல்வம் குறையும். பணம் சம்பாதித்தாலும் விரையம் ஆகும். சம்பாதிப்பதை விட செலவு அதிகமாகும்.
மனைக்கு எதிரே உள்ளவர்களால் ஏற்படும் தோஷம்
மனைக்கு எதிரே சிம்ம லக்கினத்தில் பிறந்தவர் இருந்தால் தோஷம் உண்டாகும். இதுபோன்ற அமைப்பில் உள்ள மனையில் வீடுகட்டி வாழ்பவர்களுக்கு தொழில் விருத்தி ஆகாது.
இதற்கு மாற்றாக நமது வீட்டில் உள்ளவர்கள் யாராவது சிம்ம லக்கின காரர்கள் அல்லது தனுசு லக்கின காரர்களாக இருந்தால் ஒன்றும் குற்றம் இல்லை, தோஷம் உண்டாகாது.
வீட்டிற்க்கு எதிர்புறத்தில் கிணறு இருந்தால் தோஷம் உண்டாகும். இவ்வாறு இருந்தால் வீட்டில் வறுமை உண்டாகும்.
Keywords: vastu dosham | manai dosham | Vasthu Dosham | மனை தோஷம் | மனை குற்றம் | வாஸ்து குற்றம்
தெரிந்து கொள்க
- மனையடி சாஸ்திரம்
- கிரகப்பிரவேசம் செய்ய முகூர்த்தம் லக்னம் குறிப்பது
- ஜாதகப்படி மனை யோகம்
- ஜாதகப்படி வீடு, மனை யோகம் அறியும் வழிமுறைகள்
- மனையடி சாஸ்திரம் மற்றும் அதன் அடிக்கணக்கு
- படுக்கை அறை வாஸ்து குறிப்புகள்
- வரவேற்பு அறை வாஸ்து
- குளியலறை வாஸ்து
- படிக்கும் அறை வாஸ்து குறிப்புகள்
- Read All Astrology Articles in English
- Video: அடிப்படை ஜோதிடம் கற்க
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்