Skip to content
Home » தமிழ் இலக்கணம் » பெயரெச்சம் குறிப்பு

பெயரெச்சம் குறிப்பு

பெயரெச்சம் குறிப்பு – பெயரெச்சமாவது, பால் காட்டும். முற்று விகுதி பெறாத குறைச்சொல்லாய்ப் பெயரைக் கொண்டு முடியும் வினையாம்.

இப்பெயரெச்சங் கொள்ளும் பெயர்களாவன், வினை, முதற்பெயர், கருவிப் பெயர், இடப்பெயர், தொழிற்பெயர், காலப்பெயர், செயற்பாட்டுப் பொருட்பெயர் என்னும் அறவகை பெயருமாம்

உதாரணம்.
உண்டசாத்தன் – வினைமுதற்பெயர்
உண்ட கலம் – கருவிப்பெயர்
உண்ட வீடு – இடப்பெயர்
உண்ட ஊண் – தொழிற்பெயர்
உண்ட நாள் – காலப்பெயர்
உண்ட சோறு – செயப்படு பொருட்பெயர்

தெரிநிலைவினைப் பெயரெச்சம், செய்த வென்னும் வாய்ப்பாட்டிறந்த பாலப்பெயரெச்சம் எனவும் செய்கின்ற வென்னும் வாய்ப்பாட்டு நிகழ்காலப் பெயரெச்சம் எனவும் செய்யும் என்னும் வாய்ப்பட்ட எதிர்காலப் பெயரெச்சம் எனவும் மூவகைப்படும்.

செய்தவென்னும் வாய்ப்பாட்டிறந்த காம், பெயரெச்சங்கள் இறந்த காலவிடைநிiயோடு வகாரப்பட்டிறந்தகாலங் காட்டும் தகுதியோடும் அகர விகுதி பெற்று வருவனவாம்.

உதாரணம்.
வந்த குதிரை போய குதிரை
உண்ட குதிரை புக்க குதிரை
தின்ற குதிரை விட்ட குதிரை
வருந்தின குதிரை உற்ற குதிரை

செய்கின்ற வென்னும் வாய்ப்பாட்டு நிகழ்கால பெயரெச்சங்கள், நிகழ்கால, விடைநிலையோடு அகரவிகுதி பெற்று வருவனவாம்.

உதாரணம்.
உண்ணாநின்ற குதிரை உண்கின்ற குதிரை
உண்கிற குதிரை

எதிர்மறைத் தெரிநிலை வினைப்பெயரெச்சங்கள், எதிர்மறை ஆகாரவிடைநிலையுந் தகரவெழுத்துப் போற்றோடு கூடிய அகரவிகுதியும் பெற்று வருவனவாம்.

செய்யாத என்பது செய்த, செய்கின்ற, செய்யும் என்னும் மூன்றற்கும் எதிர்மறையாம். இவ்வெதிர்மறை பெயரெச்சம் செய்கலாத, செய்கிலாத, என அல், இல் என்னும் இடைநிலைகளை ஆகாரச் சாரியையோடு பெற்று வரும்.

உதாரணம்.
உண்ணாத குதிரை நடவாத குதிரை

உண்ணாக் குதிரை, வடவாக் குதிரை என ஈற்றுயிர் மெய்கெட்டும் வரும்.

குறிப்பு வினைப்பெயரெச்சங்கள் அகரவிகுதி பெற்று வருவனவாம்.

உதாரணம்.
கரிய குதிரை, பெரிய களிறு, நெடியவில்
செய்ய மலர், தீய சொல், புதிய நட்கு
உள்ளபொருள் முகத்த யானை படத்த பாம்பு

எதிர்மறைத் குறிப்பு வினைப்பெயரெச்சங்கள் அல், இல. என்னம் பன்படியாகத் தோன்றி ஆகாரசச் சாரியையுந் தகரவெழுத்து பெற்றேடு கூடிய அகர விபுதியும் பெற்று வருவனவாம்.

உதாரணம்.
அல்லாத குதிரை இல்லாத பொருள்

அல்லாக்குதிரை இல்லாப் பொருள் என ஈற்றுயிர் மெய் கெட்டு வரும்.

பெயரெச்சங்கள் இருதிணையைம்பான் மூன்று இடங்களுக்கும் பொதுவாகவரும்.

உதாரணம்.
உண்ட யான், யாம்
நீ நீர்
அவன், அவள், அவர், அது, அவை

Read More

 

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்