பெண் பார்க்கும் நிகழ்ச்சி

ஆண் பெண் இருபாலருக்கும் மனத்தெளிவு இருக்கிறதா? என்று ஆராய்ந்து பின்னர் நல்ல ஜோதிடரை அணுகி இருவரின் ஜாதகங்களில் நல்ல அமைப்புகள் உள்ளனவா நட்சத்திர பொருத்தம், லக்கின பொருத்தம், தசா சந்தி, வேறு ஏதும் தோஷங்கள் உள்ளனவா என்று ஆராய்ந்து பின்னர் பெண் பார்க்கும் நிகழ்ச்சி நடத்துவது சிறப்பு.

பெண் பார்க்கும் நிகழ்ச்சி
பெண் பார்க்கும் நிகழ்ச்சி

தெரிந்துகொள்க: திருமண பொருத்தம் | நட்சத்திர பொருத்தம் | நிச்சயதார்த்தம் நிகழ்வு

திருமண நிகழ்வின் முதலும் முக்கியமானதுமான பெண் பார்க்கும் நிகழ்வு ஆண்-பெண் இருவீட்டாருக்கும் இனிதாக அமைய சில முக்கிய விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும். அவற்றை பார்ப்போம்.

பெண் பார்க்கும் நிகழ்ச்சி

பெண் பார்க்க செல்லும்போது திங்கள், புதன், வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் அமைவது உத்தமம்.

சுபதிதி – சுப நட்சத்திர நாளில் செல்வது நல்லது.

பெண் பார்க்கும்பொழுது சுப லக்னமாக இருக்க வேண்டும்.

சுப லக்கினத்திற்கு கேந்திரத்தில் சுப கிரகங்கள் அமைந்திருப்பது, லக்கினத்திற்கு சுபர் பார்வை நல்லது.

சுப லக்கினத்திற்கு 3,6,11ல் பாவ கிரகங்கள் இருப்பதும் நல்லது

பெண் பார்க்க கிளம்பும் நீரால் நால்வர் காலமாக இல்லாமல் சுபமாக அமைவது சிறப்பாகும்.

தெரிந்துகொள்க:

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்