பெண்கள் கனவு பலன்கள்

பெண்கள் கனவு பலன்கள்Pengal Kanavu Palangal in Tamil – பெண்கள் கனவில் வந்தால் மற்றும் கன்னி பெண்ணை கனவில் கண்டால் என்ன பலன் என்பதை பற்றி சாஸ்திரங்கள் என்ன கூறுகின்றன என்று இந்த பதிவில் பார்ப்போம்.

பெண்கள் கனவு பலன்கள்

பெண்கள் கனவு பலன்கள்

பெண்கள் கனவு பலன்கள் – Pengal Kanavu Palangal

சுமங்கலி பெண் வீட்டிற்கு வருவது போல கனவு கண்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

சிகப்பு நிற புடவையில் பெண்கள் உங்கள் கனவில் வந்தால் தடைகள் நீங்கி வீட்டில் சுபிட்சம் உண்டாகும்.

ஒரு பெண் கர்ப்பமாக இருப்பது போல கனவு கண்டால் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் மூலமாக முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

ஒரு பெண்ணுக்கு நகையை பரிசளிப்பது போல கனவு கண்டால் திருமண வாழ்க்கையில் பெரிய பிரச்சனைகள் ஏற்படக் கூடும்.

பெண் குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் மேன்மை உண்டாகும்.

புதுப்பெண் அழுவது போல நீங்கள் கனவு கண்டால் உங்கள் சகோதரர்களுடன் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. கவனம் தேவை.

பெண்ணை ஆடையில்லாமல் கனவில் கண்டால் அதிர்ஷ்டம் உங்களை விட்டு போய்விடும் அல்லது வீண் விரையம் ஏற்படும் என்று பொருள்.

ஒரு பெண் நடனமாடுவது போல கனவு கண்டால் திருமண உறவு அல்லது காதலில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

திருமணமான பெண் தன்னுடைய கணவனுடன் பயணம் செய்வது போல கனவு கண்டால் உங்களுடைய திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். குடும்பத்தில் புது குழந்தை வரப்போகிறது என்று பொருள்.

கனவில் ஒரு பெண் விளையாடுவது போல கனவு கண்டால் உங்களுக்கு அதிக செல்வமும், அதிர்ஷ்டமும் சேரலாம்.

கன்னி பெண்ணை கனவில் கண்டால் நன்மைகள் உங்களை வந்து சேரும்.

ஒரு பெண் உங்களிடம் இருந்து பிரிந்து செல்வது போல கனவு கண்டால் உடல்கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

வெள்ளை உடை அணிந்த பெண்ணை உங்கள் கனவில் கண்டால் உங்கள் தொழில் மற்றும் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கிடைக்கும் என அர்த்தம்.

கனவில் தேவதைகளை நீங்கள் கண்டால் உங்கள் வாழ்க்கை முழுவதும் சந்தோசமாகவும், ஆசிர்வாதத்துடனும் இருப்பீர்கள் என்று பொருள்.

அழகில்லாத ஒரு பெண்ணை திருமணமாகாத ஆண் கனவில் கண்டால் அழகான பெண் அந்த ஆண்மகனுக்கு கிடைப்பார்.

விதவை பெண் வீட்டிற்குள் வருவது போல கனவு கண்டால் திட்டமிட்ட செயல் சிறிய செலவுடன் சிறப்பாக நடக்கும் என அர்த்தம்.

ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுப்பது போல கனவு கண்டால் ஏதோ ஒரு சிக்கலில் மாட்ட போகிறீர்கள் என அர்த்தம்.

நீளமான கூந்தல் கொண்ட பெண்ணை நீங்கள் உங்கள் கனவில் கண்டால் பெண்களால் உங்களுக்கு மிகப்பெரிய ஆதாயம் கிடைக்கும் என அர்த்தம்.

ஒரு பெண் மங்கள பொருட்களுடன் உங்கள் வீட்டிற்குள் நுழைவது போல கனவு கண்டால் அந்த குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் விரைவில் நடைபெறும் என அர்த்தம்.

ஒரு பெண் உங்களை நோக்கி வருவதை போல கனவு கண்டால் உங்களுக்கு தனலாபம் உண்டாகும் என அர்த்தம்.

Read more:-

You may also like...