பூனை கனவு பலன்கள்
பூனை கனவு பலன்கள் – அனைவருக்கும் வணக்கம்! வாழ்க வளமுடன்! பூனையும் நாயை போலவே மனிதர்களை சார்ந்து வாழும் விலங்கு ஆகும். மனிதர்களுக்கும் பூனைக்கும் நிறைய வாழ்வியல் தொடர்புகள் உள்ளன. பலருடைய வீடுகளில் பூனையை செல்ல பிராணிகளாக வளர்க்கின்றனர். அவ்வாறு இருக்கும் பூனையை நீங்கள் உங்கள் கனவில் கண்டால், என்ன அர்த்தம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
பூனை கனவு பலன்கள்
ஒரு பூனைக்குட்டியை நீங்கள் காப்பாற்றுவது போல கனவு வந்தால், உங்கள் வாழ்க்கையில் பல நல்ல விஷயங்கள் நடக்க போகிறது என அர்த்தம்.
அதுவே, பூனையை நீங்கள் கொள்வது போல கனவு கண்டால், உங்களை சுற்றியுள்ளவர்களிடம் இருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
பூனை குட்டியை காப்பாற்றுவது போல் கனவு வந்தால் உங்கள் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடைபெறும்.
பூனை உங்களை தாக்குவது போல் கனவு வந்தால் நீங்கள் திட்டமிட்ட செயல்கள் நடைபெறுவதில் சிக்கல்கள் உண்டாகும் என்று பொருள்.
பூனை உங்கள் கையில் கடிப்பது போல கனவு வந்தால், பணச்சிக்கல்கள் வரும் என்று பொருள்.
இரட்டை பூனை கனவில் கண்டால் நீங்கள் வேலை செய்யும் இடத்தில் நல்ல சூழல் உருவாகும்.
பூனைகள் கூட்டமாக இருப்பது போல் கனவு கண்டால், வீட்டில் குழப்பமான சூழல் உருவாகும்.
பெண்கள் தங்களுடைய கனவில் பூனையை கண்டால், வாழ்க்கையில் எதிர்பாராத விஷயங்களை சந்திப்பார்கள்.

பூனை கனவு பலன்கள்
திருமணமாகாதவர் பூனையை கனவில் கண்டால், உறவினர்களிடம் பிரச்சனைகள் ஏற்படும் என்று அர்த்தம்.
திருமணமான பெண்ணின் கனவில் பூனை வந்தால், அவர்களுடைய திருமண வாழ்க்கை விருப்பமில்லாமல் செல்கிறது என்று பொருள்.
நீங்கள், ஒரு பூனையை அடிப்பது போல கனவு கண்டால், உங்களுக்கு ஏதேனும் புதிய பிரச்சனை உருவாகலாம்.
பூனை உங்களை கடிப்பது போல் கனவு வந்தால், உங்களை சுற்றி மோசமானவர்கள் இருப்பதாக அர்த்தம்.
வெள்ளை நிற பூனை கனவில் வந்தால், நீங்கள் நிதானமாக இருப்பதை குறிக்கிறது.
கருப்பு பூனை உங்கள் கனவில் வந்தால், நீங்கள் மன உளைச்சலில் இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.
Read More