புடவை கனவு பலன்கள்

Digital Marketing Company in Trichy
BSR Solutions - Digital Marketing Company in Trichy

புடவை கனவு பலன்கள்(Pudavai Kanavu Palangal) – ஒவ்வொரு கனவிற்கு ஒவ்வொரு பலனுண்டு இந்த பதிவில் புடவை அணிவது போல கனவு கண்டால், சிகப்பு, வெள்ளை, மஞ்சள் என வண்ண நிற புடவைகளை காட்டியபடி பெண் கனவில் வந்தால் என்ன பலன் என்று தெரிந்து கொள்வோம். (Video – புடவை சம்பந்தமான கனவு கண்டால் என்ன பலன்)

புடவை கனவு பலன்கள்
புடவை கனவு பலன்கள்

ஒரு பெண் புதிய புடவை கட்டி இருப்பது போல கனவில் வந்தால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க போகிறது என்று அர்த்தம்.

Read More:  கனவு பலன்கள் | பெண் கனவு பலன்கள் 

புடவை அணிந்து இருப்பது போல கனவு கண்டால் வாழ்க்கையில் நல்ல தருணத்திற்காக காத்து கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள் மற்றும் உங்கள் செயலில் பாராட்டுக்கள் குவியும்.

புடவை கட்டுவது போல கனவு வந்தால் பிரச்சனைகள் உங்களை சுற்றி உள்ளது எச்சரிக்கையுடன் கையாண்டால் வெற்றி பெறலாம்.

பச்சை புடவை கட்டிய பெண்ணை கனவில் கண்டால் மங்களகரமான நிகழ்வுகள் நடக்க இருப்பதை குறிக்கும்.

சிகப்பு நிற ஆடை அணிந்து பெண் கனவில் வந்தால் பிரச்சனைகள் நீங்கி நல்ல வழி பிறக்க போகிறது என்று பொருள்.

வெள்ளை நிற பட்டுப்புடவை அணிந்தபடி பெண் கனவில் வந்தால் வாழ்க்கையில் செல்வம் சேர இருப்பதை குறிக்கும்.

மஞ்சள் நிற புடவை கட்டியபடி பெண் கனவில் வந்தால் எதோ வேண்டுதலை நிறைவேற்றாமல் விட்டுருக்கிறீர்கள் என்பதை உணர்த்துகிறது.

பெண் கருப்பு நிற புடவையை அணிவது/அணிந்தது போல கனவு வந்தால் பிரச்சனை வர இருப்பதை குறிக்கிறது. எச்சரிக்கையுடன் செயல்பட்டால் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

Read More:

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்